சைவம்

விதம் விதமான வெஜிட்டேரியன் கிரேவி

தினமும் ராத்திரியில சப்பாத்தி சாப்பிட சொல்றாங்க டாக்டர்ஸ். ஆனா, வீட்ல உள்ளவங்களுக்கு அதுக்குத் தொட்டுக்க தோதா கோபி மஞ்சூரியன், பனீர் பட்டர் மசாலா, பாலக் பனீர்னு கேட்கறாங்க. சப்பாத்தியை மட்டும் வீட்ல பண்ணிக்கிட்டு, சைட் டிஷ்ஷை ஹோட்டல்ல வாங்கறோம். தினமும் இது கட்டுப்படியாகுமா?” என்கிற புலம்பலை பரவலாக பல வீடுகளிலும் கேட்கலாம். எதைக் கொடுத்தாலும் சாப்பிடத் தயார்… ஆனால், ஹோட்டல் டேஸ்ட் வேண்டும் என்கிறவர்களை திருப்திப்படுத்த முடியாமல் தவிக்கிற அம்மாக்களுக்கு ஆறுதலான சேதி சொல்கிறார் வினோதினி.

பி.காம். பட்டதாரியான இவர் விதம் விதமான சைட் டிஷ் தயாரிப்பதில் நிபுணி. ஆடிட்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்தாலும், தனது பிரதான விருப்பம் சமையலே என்கிறார் இவர்.

எங்க வீட்ல மாமா, சித்தப்பானு எல்லாரும் கேட்டரிங் துறையில இருக்கிறவங்க. அம்மாவும் பிரமாதமா சமைப்பாங்க. அவங்க எல்லாரும் சமைக்கிறபோது கூட உதவியா இருந்தவகையில நானும் கத்துக்கிட்டேன். இப்ப நான் ஒரு கம்பெனியில வேலை பார்க்கறேன். ஆனாலும், தினமும் வீட்ல நான்தான் சமையல். யாராவது வீட்டுக்கு விருந்துக்கு வந்தா என்னோட சமையல்தான் ஸ்பெஷல். ஹோட்டல் டேஸ்ட் மாறாம அப்படியே பண்ணுவேன்.

என் ஃப்ரெண்ட்ஸ் பலரும் என்கிட்ட சைட் டிஷ் மட்டும் செய்து கொடுக்கச் சொல்லிகேட்க ஆரம்பிச்சபோதுதான், அதையே ஒரு பிசினஸா பண்ற எண்ணம் வந்தது. ஹோட்டல் டேஸ்ட்டுல கிரேவி பண்றதுல சின்னச் சின்ன நுணுக்கங்கள் இருக்கு. தவிர, ஒரு பொருள்கூட விடாம எல்லாத்தையும் சேர்த்து சமைச்சா, அதே டேஸ்ட்டை கொண்டு வர முடியும்.

ஹோட்டல்ல ஒரு கப் கிரேவியை 100 ரூபாய்க்கு குறைவா வாங்க முடியாது. அது 2 பேர் சாப்பிடக்கூட போதாது. அதே செலவுல ஒரு குடும்பமே தாராளமா சாப்பிடற அளவுக்கு நாமளே தயாரிக்கலாம்” என்கிற வினோதினி, பனீர் கிரேவி, மஷ்ரூம் கிரேவி, முள்ளங்கி கிரேவி, மிக்சட் வெஜிடபுள் கிரேவி, கார்லிக் கிரேவி என 10 வகையான கிரேவிகளை ஒரே நாள் பயிற்சியில் கற்றுத் தருகிறார். கட்டணம் 500 ரூபாய்.

ld3881

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button