Other News

இந்த 4 ராசிக்காரர்கள் தங்கம் அணிந்தால் அதிர்ஷ்டம் தேடி வருமாம்!!!நீங்களே பாருங்க.!

ஜோதிட சாஸ்திரப்படி தங்கம் அணிவது எப்படி அதிர்ஷ்டம், எந்தெந்த ராசிகளுக்கு அது அதிக அதிர்ஷ்ட பலனைத் தரும். யாருக்கு மங்களகரமானதாக இருக்காது, யார் தங்கம் அணியக்கூடாது என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

மேஷம்
மேஷ ராசியினர் தங்கம், தங்க மோதிரம் அணிந்தால் மிகவும் சுபத்துவமானதாக இருக்கும். இதனால் உங்களிடம் தைரியமும் வலிமையும் அதிகரிக்கிறது. எல்லா துறைகளிலும் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கிறது. அதோடு அதிர்ஷ்டமும் சாதகமாக இருக்கும்.

எல்லா வேலைகளும் எளிதாக முடிவடையும். குடும்ப வாழ்க்கையில், மனைவியுடன் உறவு வலுப்பெறும். பெற்றோரின் பாசம் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்கள் எப்போதும் உங்களை ஆதரிப்பார்கள். தங்க மோதிரம் அணிவதன் மூலம் பழைய கடன்கள் படிப்படியாக நீங்கி புதிய வருமானம் கிடைக்கும்.

அடிக்கடி பணம் தேடி தேடி வரும் 5 ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா? கொடுத்து வச்சவங்க….!

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு தங்க உலோகம் அணிவது அதிர்ஷ்டத்தைத் தரும். இந்த ராசியினர் கண்டிப்பாக தங்க மோதிரம் அணிய வேண்டும். நெருப்பு ராசியாகவும், சூரியனை அதிபதியாக கொண்ட சிம்ம ராசிக்கு, தங்கத்தின் காரணியான வியாழன் கிரகத்துடன் நட்புறவைக் கொண்டுள்ளது.

எனவே, இந்த ராசியினர் தங்கம் அணிவதால், ஆற்றலும், உற்சாகமும் அதிகரித்து, அனைத்துப் பணிகளையும் எளிதாக முடிக்க முடியும். வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் திட்டங்கள் சிறப்பாக நிறைவேற்ற முடியும். நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடனான உறவுகள் பலப்படும்.

தமிழ் புத்தாண்டு பலன்கள்; குரு சனியால் ராஜயோகத்தை அடையும் தனுசு ராசி!

கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்கள் தங்க மோதிரத்தை அணிந்தால், அவர்களின் ஆசைகள் படிப்படியாக நிறைவேறும். தங்கள் வாழ்க்கையை செழுமையாகும். தங்க மோதிரம் அணிய முடியாவிட்டால், செயின் அல்லது வளையல் என அணியலாம்.

உங்கள் ராசிக்கு வியாழன் ஏழு மற்றும் ஐந்தாம் வீடுகளுக்கு அதிபதியாக இருப்பதால் தங்க ஆபரணங்களை அணிவதன் மூலம் சுப பலன்களை பெற முடியும். உங்கள் வாழ்க்கையில் பெரும்பாலான பிரச்சனைகள் முடிவடையும்.

இந்த பரிகாரத்தை மட்டும் செய்தால் குடும்பத்தில் பிரச்சனைகள் வராது

தனுசு
குரு அதிபதியாக இருக்கக்கூடிய தனுசு ராசிக்கு தங்க மோதிரம் அணிவதால் சுபத்துவமான பலன்களைப் பெற்றிட முடியும். செய்யக்கூடிய வேலைகள் விரைவில் முடியும் பலன் விரைவாக கிடைக்கும். தங்க உலோகத்தின் காரணியாக குரு கருதப்படுவதால், தங்க ஆபரணங்கள் அணிவதால், வியாழன் கிரகம் வலுவடைகிறது.

அதன் சுப பலன் காரணமாக பணம் தொடர்பான பிரச்சினைகள் நீங்கி, நிதி நிலை மேம்படும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

ஏப்ரல் மாத ராசிப்பலன் “2022” இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் நிச்சயம்!!!

யாரெல்லாம் தங்கம் அணியக்கூடாது?
ரிஷபம், மிதுனம், விருச்சிகம், கும்பம் ஆகிய ராசியினர் தங்க தங்க ஆபரணங்கள் அணிவது நல்லதல்ல. நீங்கள் இரும்பு அல்லது நிலக்கரி சார்ந்த தொழில் அல்லது வேலை செய்பவராக இருந்தால், தங்க ஆபரணங்களை அணிய வேண்டாம், ஏனெனில் இவை சனி தேவருடன் தொடர்புடையது. எனவே, தங்க உலோகத்தை அணிவது உங்கள் வணிகத்திற்குப் பாதகத்தை விளைவிக்கும்.

கர்ப்பிணிகள் மற்றும் வயதான பெண்கள் தங்க ஆபரணங்களை அணியக்கூடாது. அதே சமயம் தூங்கும் போது தலையணைக்குக் கீழே வைத்துக் கொள்ளக்கூடாது. தங்க மோதிரத்தை இடது கையில் அணிய வேண்டாம். மேலும், இடுப்பு முதல் கால் வரை எந்தப் பகுதியிலும் தங்கத்தை அணியக்கூடாது. அவ்வாறு செய்வதால் பல நோய்கள் வரும்.

தங்கம் அணியும் போது மது அல்லது அசைவம் சாப்பிட வேண்டாம், ஏனென்றால் தங்கம் குரு பகவானுடன் தொடர்புடையது. எனவே தங்கம், தங்க நகைகளைப் புனிதமாக வைத்திருங்கள். உங்களின் வாழ்க்கை செழிக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button