உடல் பயிற்சி

தினமும் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?

நோய்கள் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்வதற்கு சீரான உடற்பயிற்சியும், ஆரோக்கியமான உணவுகளும் அவசியமாகிறது.
செரிமானம் மற்றும் கழிவு மண்டலங்களின் இயக்கங்களுக்கு உட்பட அனைத்திற்கும் சுமார் 400க்கும் மேற்பட்ட தசைகள் காரணமாக உள்ளன.

நாம் செய்யும் உடற்பயிற்சி இந்த 400 தசைகளுக்கும் இயக்கம் கொடுப்பதாக இருக்க வேண்டும், எனவே ஒருநாளைக்கு 30 முதல் 45 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வந்தால் மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவுகளை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

வியர்த்தால் தான் கொழுப்பு குறையும் என்பதற்காக வியர்க்க, வியர்க்க உடற்பயிற்சி செய்வதில் பலனில்லை.

எனவே நல்ல காற்றோட்ட வசதி இருக்கும் இடத்தில் உடற்பயிற்சி செய்யலாம், அதேபோல் உடற்பயிற்சி செய்யும் போது நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

ஏனெனில் அவ்வாறான சமயங்களில் உடலில் வெப்பம் அதிகரிக்கும் போது, அதை சமன்படுத்த போதுமான அளவில் தண்ணீர் குடிப்பது அவசியமாகிறது.

அதேவேளை குளிர்ச்சியான நீரை அருந்த கூடாது, அது உஷ்ணத்தை மேலும் அதிகரித்துவிடும்.

எவ்வாறாயினும் தவறாமலும், ஒழுங்காகவும் தினமும் உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக வாழலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button