அசைவ வகைகள்

கொத்தமல்லி சிக்கன் வறுவல்

தேவையான பொருட்கள் :

சிக்கன் – அரை கிலோ

க.மிளகாய் – 6

தனியா – 1 கை

இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்

க.மிளகாய் பேஸ்ட் – 2 ஸ்பூன்

அரிசி மாவு, மைதா மாவு தலா – 2 ஸ்பூன்

சீரக தூள் -1/2 ஸ்பூன்

கறிவேப்பிலை – 2 கொத்து

கொத்தமல்லி – 1/2 கட்டு

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 1 குழிக்கரண்டி

புளி – 1/2 எலுமிச்சை அளவு

செய்முறை :

* க.மிளகாய், தனியாவை தனித்தனியாக ஒன்றும் பாதியாக பொடித்துக் கொள்ளவும்.

* ஒருபாத்திரத்தில் சிக்கனை போட்டு அதில் பொடித்த தனியா, மிளகாய், க.மிளகாய் பேஸ்ட், அரிசி மாவு, மைதா மாவு, உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, சீரகத்தூள், புளி கரைசல் சேர்த்து கிளற சிறிது நேரம் ஊற வைக்கவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் மிதமான தீயில் வைத்து அதில் சிக்கனை கலவையை போட்டு வேகும் வரை கிளரவும்.

* சிக்கன் வெந்தவுடன் மிளகு தூள் தூவவும்.

* சிறிது நேரம் வைத்து கடைசியாக கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
untitledu777uu

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button