ஆரோக்கியம் குறிப்புகள்

குழந்தைகளின் தொப்புள்கொடி பின்னாடியும், குளிக்க வைக்கறதுக்கும் இவ்ளோ விஷயங்கள் இருக்கா-தெரிந்துக்கொள்ளுங்கள்.

குழந்தைகளை பாதுகாப்பான முறையில் பார்த்துக் கொள்ளவது மிகவும் அவசியம். அதிலும் அவர்களின் தொப்புள்கொடி விஷயத்தில் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். உங்கள் குழந்தைகளின் தொப்புள்கொடியை சுத்தம் செய்வதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அவற்றை பின்பற்றி அதன்படி அவற்றை சுத்தம் செய்வதே சிறந்தது. குழந்தைகளின் தொப்புள்கொடி விழுவதற்கு முன்பும் விழுந்த பின்பும் எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும் என்பதை முதலில் தெரிந்துக்கொள்ளுங்கள்.

மருத்துவர்கள் கூறுவது என்னவென்றால் ஒவ்வொரு முறை நீங்கள் டையப்பர் மாற்றும் போதும் தொப்புள்களை சுத்தம் செய்வீர்கள். ஆனால் மருத்துவர்கள் கூறுவது என்னவென்றால் குழந்தைகளின் தொப்புள்களை அடிக்கடி சுத்தம் செய்து அதனை காய்ந்த நிலையில் வைத்துக் கொள்ளவேண்டியது அவசியம்.

குளிக்க வைக்கும் முறை

குழந்தைகளின் தொப்புள்களை சுத்தம் செய்வதற்கு முன்பு தேவையான பொருட்கள் அனைத்தையும் தயார் நிலையில் வைத்துக்கொள்ளுங்கள். குழந்தைகளின் தொப்புள்கொடி விழுவதற்கு முன்பு வரை உங்கள் குழந்தைகளை குளிக்க வைக்க கூடாது. காட்டன் துணிகளை ஈரத்தில் நனைத்து தான் குழந்தைகளை துடைக்க வேண்டும். குழந்தைகளின் தொப்புள்கொடி விழுந்த பிறகே அவர்களை தண்ணீரில் நனைத்து குளிக்க வைக்க வேண்டும்.

கைகளை கழுவுங்கள்

உங்கள் குழந்தைகளின் தொப்புள்கொடியை சுத்தம் செய்யப் போவதற்க்கு முன்பு உங்கள் கைகளை சோப்பு பயன்படுத்தி சுத்தமாக கழுவி கொள்ளுங்கள். ஏனெனில் உங்கள் கைகளில் உள்ள கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே முதலில் உங்கள் கைகளை சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

 

நோய்த்தொற்றின் அறிகுறிகள்

குழந்தைகளின் தொப்புள்களில் இருந்து துறுநாற்றம் வீசுதல், சீல் வடிதல், சிவப்பு நிறமாக மாறுதல், இரத்த போக்கு, காய்ச்சல், சரியாக தாய்ப்பால் பருகாமை போன்ற அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று ஏற்பட்டாலும் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

தொப்புள்கொடி துடைத்தல்

ஒரு காட்டன் துணியை எடுத்து தண்ணீரில் நனைத்துக் கொள்ளுங்கள். துணியை நன்றாக புழிந்து அதில் உள்ள தண்ணீரை வெளியேற்றுங்கள். ஈர்த்துணியை வைத்து மெதுவாக தொப்புள்கொடியை சுற்றிதுடைங்கள். பின்பு காய்ந்த துணியை வைத்து தொப்புள்கொடியை சுத்தமாக துடையுங்கள். இதில் மிக முக்கியம் தொப்புள்கொடியை காய்ந்த நிலையில் வைப்பது. இதற்கு முன்பு தொப்புள்கொடி விழுவதற்கு அதில் ஆல்கஹால் பயன்படுத்தினர். ஆனால் ஆராய்ச்சிகள் தொப்புள்கொடி காய்ந்த நிலையில் வைத்துக் கொண்டாலே போதும் இவை மிக விரைவில் விழுந்து விடும் என்று கூறுகிறது. தொப்புள்கொடியை சுற்றி சிறுநீர் அல்லது மலம் இருந்தாலோ நீங்கள் சிறிது சோப்பு நீரில் துணியை நனைத்து சுத்தம் செய்து விட்டு காயவைத்தால் போதுமானது. இது விரைவில் விழுந்து விடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

காயவிடுங்கள்

தொப்புள்கொடியை காயவைக்க ஒரு சிறிய துணியை அதன் மேல் போடுங்கள். அல்லது ஒரு சிறிய காகிதத்தை அதன் மேல் போட்டு வையுங்கள். அது சற்று ஈரத்தை உறிஞ்சிவிடும். ஆனால் அது காய்வதற்காக பவுடர், லோஷன் மற்றும் எண்ணெய்களை பயன்படுத்தக் கூடாது. இவை அனைத்தும் தேவையற்றவை மேலும் இவை ஏதேனும் தொற்றுக்களை ஏற்படுத்தும்.

 

தொப்புள்கொடி விழுந்த பிறகு

தொப்புள்கொடி விழுந்த பிறகு நீங்கள் குழந்தைகளை குளிக்க வைக்கலாம். கொஞ்சம் மிதமான சூடு உள்ள நீரில் குழந்தைகளை குளிக்க வைக்கலாம். சோப்பு எடுத்துக் கொண்டு தொப்புள்களை சுத்தம் செய்யலாம்.

தேவையான பொருட்கள்

குழந்தைகள் இதற்கு பின் தினமும் குளிக்க வைக்கலாம். எனவே குளிக்க வைக்க தேவையான குழந்தைகள் சோப்பு, ஆயில், துடைக்க 2 துண்டுகள் மற்றும் தேவையானால் குளிக்கும் டப் வாங்கிக் கொள்ளுங்கள்.

கைகளை கழுவுதல்

உங்கள் குழந்தைகளின் தொப்புள்கொடி விழுந்த பிறகு அதில் உள்ள சிறிய துளைகளை தொற்றுகள் தாக்க வழியுண்டு. எனவே கைகளை சுத்தம் செய்து விட்டு தான் நீங்கள் குழந்தைகளை குளிக்க வைக்க வேண்டும்.

தொப்புள்களை சுத்தம் செய்தல்

குழந்தைகளின் முகம், கண்கள், முடி, மற்றும் உடல்களை சுத்தம் செய்த பிறகு ஒரு துணியை எடுத்து மெதுவாக தொப்புளை சுற்றி துடைத்து விட்டு சோப்பு போட்டு குளிக்க வைக்கலாம்.

 

காயவைத்தல்

குழந்தைகளின் உடலை காய வைப்பது போல அவர்களின் தொப்புள்களையும் நீங்கள் காய வைக்கலாம். ஒரு சுத்தமான காய்ந்த துணியை எடுத்துக் கொள்ளுங்கள். மெதுவாக சற்று உலரும் வரை துடைத்து விடுங்கள்.

ஈரப்பதமாக்குதல்

குழந்தைகளின் தொப்புள்கொடி விழுந்தப்பிறகு நீங்கள் அதில் லோஷன் தடவலாம். ஆனால் குறைந்த அளவில் பயன்படுத்துங்கள். மேலும் பெரியவர்களின் லோஷன் பயன்படுத்துவது குழந்தைகளுக்கு எரிச்சல் ஏற்படுத்தும். குழந்தைக்கான லோஷன் பயன்படுத்துங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button