மருத்துவ குறிப்பு

குழந்தைகளுக்கு விக்கல் வந்தால் என்ன செய்ய வேண்டும்

விக்கலால் அவதிப்படும் குழந்தையை ரிலாக்ஸ் ஆக தட்டிக்கொடுக்கலாம். பசியினால் சில குழந்தைகளுக்கு விக்கல் எடுக்கலாம். திடீர் விக்கல்களை நிறுத்த சிறிதளவு தண்ணீர் கொடுக்கலாம். இது விக்கலை நிறுத்த உதவும். பால் புகட்டும் போது விக்கல் எடுத்தால் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதை நிறுத்தி விடவும்.

இல்லை எனில் அது மூச்சுத்திணறலை ஏற்படுத்திவிடும். சின்னக்குழந்தைகள் உறங்கிக் கொண்டிருக்கும் போது விக்கல் எடுக்கும் அப்போது தேனை நாக்கில் தடவி வைக்கலாம். அரோமா தெரபியின் மூலம் விக்கலை நிறுத்தலாம். சிறிதளவு எண்ணெயை எடுத்து டிஸ்யூ காகித்த்தில் தடவி அதனை குழந்தைகளின் நெஞ்சில் வைக்கலாம்.

பள்ளிக்குச் செல்லும் குழந்தையாக இருந்தால் ஒரு காகிதப்பையை எடுத்துக்கொண்டு, மூக்கு, வாய் இரண்டும் உள்ளே இருக்குமாறு இறுக்கிப் பிடித்துக்கொள்ளச் சொல்லுங்கள். இப்போது மூச்சை உள் இழுத்து, அந்தக் காகிதப்பைக்குள் மூச்சை விடச் சொல்லுங்கள். பிறகு அந்தக் காற்றையே மீண்டும் சுவாசிக்கச் சொல்லுங்கள். இவ்வாறு 20 முறை செய்தால் படிப்படியாக ரத்தத்தில் கரிய மில வாயுவின் அளவு அதிகரித்து, பிராணவாயுவின் அளவு குறையும். அப்போது விக்கல் நின்று விடும்.

சிலருக்குத் தண்ணீர் குடித்தால், விக்கல் நின்றுவிடும். ஆரஞ்சுப் பழச்சாறு குடித்தால் விக்கல் நிற்கும். ஏதேனும் ஒரு வகையில் தும்மலை உண்டாக்கினால் விக்கல் நிற்கும். குழந்தைகளுக்குக் ‘கிரைப் வாட்டர்’ கொடுத்தால் விக்கல் நிற்கும். விக்கல் எடுப்பது இயல்பானது, சாதாரணமானதுதான். அதை நினைத்து அச்சம் கொள்ளவேண்டாம். ஒருவருக்கு இரண்டு மூன்று நாள்களுக்கு மேல் அதாவது 48 மணிநேரத்திற்கு மேல் விக்கல் தொடருமானால், அது ஆபத்தான அறிகுறி என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

எடுத்துக்காட்டாக, சிறுநீரகம் பழுதாகி ரத்தத்தில் யூரியா அளவு அதிகரிக்கும்போது விக்கல் வரும். இதுபோல் உதரவிதானத்தில் நோய்த்தொற்று, இரைப்பைப் புண், இரைப்பைப் புற்றுநோய், கல்லீரல் கோளாறு, நுரையீரல் நோய்த்தொற்று, குடலடைப்பு, மூளைக்காய்ச்சல், பெரினிக் நரம்புவாதம், சர்க்கரை நோய் முற்றிய நிலை, மாரடைப்பு போன்ற காரணங்களாலும் விக்கல் வரும். எனவே அதிக விக்கலை நிறுத்த மருத்துவரை அணுகவேண்டும்.
12193852 460971484075042 3237371357131140687 n

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button