22 62e289
மருத்துவ குறிப்பு

மூட்டு வலி நீங்க வேண்டுமா? இதோ சில பாட்டி வைத்தியம் உங்களுக்காக!

பொதுவாக, மூட்டு வலி வயதானவர்களுக்குத்தான் அதிகம்.

இந்த பிரச்சனைகள் எல்லா வயதினருக்கும் ஏற்படுகின்றன மற்றும் பொதுவாக மணிகட்டை, விரல்கள் மற்றும் பாதங்களில் மிகவும் பொதுவானவை.

சில இயற்கை வைத்தியங்கள் மூலம் இதை முதலில் சரிசெய்யலாம்.

தேவையானவை
பூண்டு – 15
கடுகு எண்ணெய் – 6 ஸ்பூன்
வெந்தயம் – 1 ஸ்பூன்
செய்முறை
15 பூண்டு பற்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும், பின்பு அடுப்பில் ஒரு கடாயை வைத்து 5 அல்லது ஆறு ஸ்பூன் கடுகு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

பின்பு எண்ணெய் சூடேறியதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நறுக்கி வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். பூண்டு கருகும் வரை நன்றாக கிளறிவிட்டு, பின்பு அடுப்பில் இருந்து இறக்கிவிடவும். எண்ணெய் சூடாறியதும் வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

வெந்தயம் ஒரு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் நன்கு ஊறவைத்து கொள்ளவும். வெந்தயம் நன்கு ஊறியதும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்சியில் நன்கு மை போல் அரைத்து கொள்ளவும்.

பின்பு அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அரைத்து வைத்துள்ள வெந்தயம் பேஸ்ட்டை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கிளறிவிடுங்கள், கலவையானது நன்கு பேஸ்ட்டு போல் வரும் அந்த சமயம் இரண்டு ஸ்பூன் கடுகு எண்ணெயை ஊற்றி, திரும்பவும் ஒருமுறை நன்றாக கிளறி விடுங்கள். அவ்வளவு தான் வெந்தயம் பேஸ்ட் தயார்… இப்பொழுது எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

முதலில் வெந்தயம் பேஸ்ட்டினை மிதமான சூட்டில் மூட்டு வலி ஏற்படும் இடத்தில் அப்ளை செய்ய வேண்டும். பின்பு 15 நிமிடம் கழித்து கழுவவேண்டும்.

அதன் பிறகு தயார் செய்து வைத்துள்ள பூண்டு தைலத்தை மூட்டு பகுதியில் தடவ வேண்டும். இந்த முறையை தினமும் அல்லது வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வர மூட்டு வலி பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க… குங்குமப்பூ சாப்பிட்டால் ஆபத்தா?

nathan

உங்கள் குழந்தையின் வளர்ச்சியை கவனியுங்கள்!

nathan

இதயநோய்க்கு குட்பை சொல்லனுமா? இதை மட்டும் செய்தாலே போதும்

nathan

செவித்திறனை பாதிக்கும் நோய்கள்

nathan

கண்புரைக்கு புதிய சிகிச்சை!

nathan

சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்ற சில அற்புதமான உணவுகள்!தெரிஞ்சிக்கங்க…

nathan

சூப்பர் டிப்ஸ்! டெங்கு காய்ச்சலை தடுக்கும் நிலவேம்பு கசாயம்

nathan

கர்ப்பிணிகள் சுடுதண்ணீரில் குளித்தால் கருச்சிதைவு ஏற்படுமாம்…தெரிந்துகொள்வோமா?

nathan

அலுவலக வேலையை திட்டமிட்டு செய்யுங்க

nathan