தமிழகத்தில் தங்களுடன் சண்டையிட்ட கொழுந்தனை அண்ணிக் குத்திக் கொலை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
குமரி மாவட்டத்தில் குலசேகரம் பகுதியில் வாழ்ந்து வந்தவர் சுரேஷ், கூலி வேலை செய்து வந்துள்ளார்.
இவரது அண்ணன் ரமேஷ், அவரது மனைவி விஜிலா, இவர்களுக்கு மகன் ஒருவர் இருக்கிறார்.
இந்நிலையில் சுரேஷ்- ரமேஷ் தாய் மிகவும் வயதானாவர், தாயை ரமேஷ் சரியாக கவனிக்காமல் இருந்துள்ளார்.
இதில் உடல்நலம் குன்றி தாய் இறந்துவிட்டார், தாயின் இறப்புக்கு ரமேஷ் மற்றும் அவரது மனைவி விஜிலா தான் காரணம் எனக்கூறி ரமேஷ் சண்டையிட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் சண்டை எழுந்துள்ளது, சம்பவதினத்தன்று சுரேஷ், அண்ணன் வீட்டுக்கு மீண்டும் சென்றுள்ளார்.
அப்போது, இங்கே ஏன் வந்தாய்? என விஜிலா சண்டையிட்டுள்ளார், ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்ற சுடுதண்ணீரை எடுத்து வந்து சுரேஷின் மீது ஊற்றியுள்ளார் விஜிலா.
இதில் அலறித்துடித்த சுரேஷை விஜிலாவின் மகன் கடுமையாக தாக்கியுள்ளார், தொடர்ந்து கீழே விழுந்த அவரை விஜிலாவும் அவரது மகனும் சேர்ந்து கத்தியை எடுத்து சரமாரியாக குத்தி இருக்கிறார்கள்.
10க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து விழுந்ததும் சுரேஷ் மரண பயத்தில் அலறி இருக்கிறார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த சுரேஷை குலசேகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அன்று அவருக்கு இரண்டு மணி நேரம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக விஜிலாவும் அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களிடம் மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது.