Other News

இந்த 6 ராசிக்காரர்களும் பிறப்பிலேயே கல்நெஞ்சக்காரர்களாம்…

அன்பு காட்டுவது, அக்கறை செலுத்துவது, உணர்ச்சிகளை காட்டுவது போன்றவைதான் மனிதர்களை மற்ற உயிரினங்களிடம் இருந்து பிரித்து காட்டும். சிலருக்கு இந்த குணங்கள் பிறவியிலேயே இருக்கும், சிலர் தங்கள் அனுபவம் மூலம் இந்த குணங்களை பெற்றிருப்பார்கள். இதற்கு நேரெதிராக சில ராசிக்காரர்களுக்கு இந்த குணங்கள் இயற்கையாகவே குறைவாகவே அல்லது அனுபவங்கள் மூலம் குறைந்திருக்கும்.

இந்த குணமுள்ளவர்களை கல்நெஞ்சக்காரர்கள் என்று கூறுவார்கள். இவர்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவர்களாகவோ, மற்றவர்களுக்கு எளிதில் உதவுபவர்களாகவோ இருக்க மாட்டார்கள். அதற்காக இவர்கள் உதவியே செய்யமாட்டார்கள் என்று அர்த்தமல்ல. ஆனால் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது இவர்கள் செய்வது குறைவாக இருக்கும். இவர்கள் பொதுவாகவே மற்றவர்களை ஒருவித அலட்சியத்துடன்தான் அணுகுவார்கள். எந்தெந்த ராசிக்காரர்கள் கல்நெஞ்சம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் அற்புதமானவர்களாக இருக்க முடியும், அதேசமயம் அவர்கள் எப்பொழுதும் சுயநலம் சார்ந்து சிந்திக்க கூடியவர்கள். இவர்களை கல்நெஞ்சக்காரர்கள் என்று கூற முக்கிய காரணம் இவர்கள் எப்போதாவதுதான் மற்றவர்களின் நலத்தை பற்றி விசாரிப்பார்கள். மற்றவர்களின் வாழ்க்கையை காட்டிலும் தங்கள் வாழ்வில் என்ன மாற்றங்கள் நடக்கப்போகிறது என்பதில் இவர்கள் அதிக ஆர்வம் செலுத்துபவர்கள். மற்றவர்கள் பேசுவதில் இவர்கள் எப்பொழுதும் ஆர்வம் செலுத்த மாட்டார்கள், அப்படி செலுத்தினால் அவர்கள் நலம் சார்ந்த ஏதாவது நிச்சயம் இருக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் அடிக்கடி கல்நெஞ்சக்கார்களாக மாறக்கூடியவர்கள்,அதற்கு காரணம் அவர்கள் கடந்த காலங்களில் பெற்ற மோசமான அனுபவங்களாகத்தான் இருக்கும், இதனால் அவர்கள் தங்களை பாதுகாத்து கொள்ளும் பொருட்டு சில நேங்களில் கல்நெஞ்சத்துடன் நடந்துகொள்வார்கள். கடந்த கால வலிகளில் இருந்து வெளியே வருவது என்பது இவர்களுக்கு மிகவும் கடினமான ஒன்றாகும். என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்பது பற்றிய தெளிவு இவர்களுக்கு இருக்காது. மீண்டும் ஒருமுறை வலியை அனுபவிக்க விரும்பாததால் இவர்கள் சுயநலமாக நடந்து கொள்வார்கள். ஆனால் அதற்கு பயந்து உணர்ச்சிகளை வெளியே காட்டிக்கொள்ளமால் இருப்பது நல்லதல்ல.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் எப்பொழுதும் உணர்ச்சிகள் குறைவாகவும், கல்நெஞ்சக்காரராகவும் இருப்பார்கள். அதனால் அவர்கள் உணர்ச்சிகளே அற்றவர்கள் என்று அர்த்தமல்ல, இவர்கள் எப்பொழுதும் மற்றவர்கள் முன் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த விரும்புவதில்லை, மேலும் மற்றவர்களின் வலி நிறைந்த சூழ்நிலைகளில் அதிக அக்கறை காட்ட விரும்பமாட்டார்கள். மற்றவர்களிடம் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் இருக்கும்போது தாங்கள் பாதுகாப்பாக உணர்வதாக நினைப்பார்கள்.

விருச்சிகம்

நீங்கள் விருச்சிக ராசிக்காரர்களிடம் பொய் கூறிவிட்டாலோ அல்லது துரோகம் செய்து விட்டாலோ அவர்கள்மிகவும் கல்நெஞ்சக்காரர்களாக மாறிவிடுவார்கள். இந்த சூழ்நிலையில் அவர்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் இருப்பது அவர்களுக்கு பழிவாங்கும் உணர்வை அதிகரிக்கும். இவர்கள் மற்றவர்களை மூளைச்சலவை செய்வதில் வல்லவர்கள், அதன்மூலம் மற்றவர்களின் பலவீனங்களை அறிந்து கொள்வார்கள். மற்றவர்களை விட இவர்கள் அதிகம் கல்நெஞ்சம் வாய்ந்தவராக இருப்பார்கள். இதனால் அவர்களை மற்றவர்கள் புரிந்துகொள்வது என்பது இயலாத காரியம்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”இதையும் படிங்க” background=”” border=”” thumbright=”no” number=”3″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலிகள், எப்போதும் கல்நெஞ்சம் மற்றும் சுயநலத்துடன் இருக்க வேண்டும் என்று இவர்கள் நன்கு அறிவார்கள். இவர்கள் அனைத்தையும் கட்டுப்படுத்த தெரிந்தவர்கள், குறிப்பாக அவர்களின் உணர்ச்சியை. அவர்கள் தங்களின் இரக்க உணர்வையும், உணர்ச்சிகளையும் அகற்றினால் தான் சிறப்பாக செயல்படுவதாக அவர்கள் உணர்வார்கள். எப்போது பழிவாங்க வேண்டும் என்று இவர்கள் முடிசெய்கிறார்களோ அப்போது அவர்கள் அதனை வெற்றிகரமாக முடிப்பார்கள்.

ரிஷபம்

இவர்களிடம் இருப்பது சமரசம் மற்றும் சலுகையின் பற்றாக்குறையாகும். யாரவது இவர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டால் இவர்கள் ஒருபோதும் எதிரில் இருப்பவர்களின் நிலையில் இருந்து யோசித்து பார்க்க முயலமாட்டார்கள். மற்றவர்கள் எவ்வளவு கெஞ்சினாலும் இவர்களுக்கு இரக்கம் என்பது சுத்தமாக இருக்காது. உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்வதை விட இவர்களுக்கு உரிமைதான் முக்கியம்.-Source: boldsky

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button