ஆரோக்கிய உணவு

சப்பாத்தி ரோல்

தேவையான பொருட்கள் :

சப்பாத்தி – 5,

வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்),

வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு – ஒரு கப்,

இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,

மஞ்சள்தூள் – சிட்டிகை,

மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,

கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்,

உப்பு, எண்ணெய் – தேவைக்கு.

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

இதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.

சப்பாத்திகளின் நடுவே வதக்கிய கலவையை வைத்து பாய் போல சுருட்டவும்.

தோசைக்கல்லை காய வைத்து சுருட்டிய சப்பாத்திகளை வைத்து இருபுறமும் டோஸ்ட் செய்து எடுத்து பரிமாறவும்.

சூப்பரான சப்பாத்தி ரோல் ரெடி.

Related posts

உருளைக் கிழங்கின் மகத்துவம்

nathan

குழந்தை, பிறந்த ஓராண்டுக்குள் மொட்டை அடிக்காமல் விட்டு விட்டால்…

sangika

முருங்கையின் ஒவ்வொரு பாகமும் அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்டது!!

nathan

முடி வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின்கள்.

nathan

30 வயதை தாண்டிய ஒவ்வொருவரும் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

nathan

சுவையான ஆட்டுக் குடல் சூப்…

nathan

சுவையான மட்கா லஸ்ஸி ரெசிபி

nathan

தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க! உயிருக்கே உலை வைக்கும் வெள்ளரிக்காய்!

nathan

தெரிஞ்சிக்கங்க…கசகசாவை குறைந்த அளவில் சாப்பிட்டு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan