cons 16149
ஆரோக்கியம் குறிப்புகள்

மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை -செரிமானம் சீராக செயல்பட

செரிமான அமைப்பு நாம் சாப்பிடுவதை உடைக்கிறது. எனவே, இது உடலின் செயல்பாட்டில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தேவையற்ற உடல்நலக் கேடுகளைத் தவிர்க்க வேண்டுமானால், சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். வாய்வு, வீக்கம், வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றை நம் வாழ்வில் ஒருமுறையாவது நாம் அனைவரும் அனுபவித்திருக்கிறோம். இந்த அறிகுறிகள் அடிக்கடி ஏற்பட்டால், அவை உடலில் அழிவை ஏற்படுத்தும். எனவே, நீங்கள் செரிமான பிரச்சனைகளைத் தவிர்க்க விரும்பினால், உங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

சரியான உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை உங்கள் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நிறைய தண்ணீர் குடிப்பது, மன அழுத்தத்தை நிர்வகித்தல், நார்ச்சத்து மற்றும் புரத உணவுகளை உண்ணுதல், உடற்பயிற்சி செய்தல் மற்றும் புகைபிடித்தல் மற்றும் மது பழக்கங்களை கைவிடுதல் ஆகியவை ஆரோக்கியமான செரிமான செயல்பாட்டை பராமரிக்க உதவும்.தினமும் சாப்பிடுவது அல்லது உங்கள் உணவில் அடிக்கடி சேர்ப்பது உங்கள் செரிமானம் சீராக செயல்பட உதவும். மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டும்.

முழு தானியங்கள்

முழு தானியங்களில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது மற்றும் இது செரிமான மண்டலத்திற்கு மிகவும் பயனுள்ளதும் கூட. இவை மலச்சிக்கல், நெஞ்செரிச்சல், வாய்வு தொல்லை மற்றும் குமட்டல் போன்ற செரிமான அறிகுறிகளை குணப்படுத்தும். முக்கியமாக முழு தானியங்கள் குடலியக்கத்தை மென்மையாக வைத்துக் கொள்ளும்.

தயிர்

தயிரில் செரிமானத்திற்கு மிகவும் அவசியமான நல்ல பாக்டீரியாக்கள் அதிகம் உள்ன. அன்றாடம் தயிரை ஒரு கப் சாப்பிட்டு வந்தால், செரிமான மண்டலத்தின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் மற்றும் எவ்வித செரிமான பிரச்சனையும் இருக்காது.

இஞ்சி

பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுக்கு பிரபலமான மருத்துவ குணம் அதிகம் நிறைந்த பொருள் தான் இஞ்சி. இஞ்சியை ஒருவர் தினமும் ஒரு துண்டு பச்சையாக சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும். இஞ்சியில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், செரிமானத்திற்கு மிகவும் நல்லது.

வாழைப்பழம்

வாழைப்பழம் இரைப்பை நோய்கள் மற்றும் செரிமான பிரச்சனைகளை சரிசெய்யக்கூடிய அற்புதமான பழம். இது மென்மையான குடல் இயக்கத்திற்கு உதவி புரிகிறது. நீங்கள் தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், செரிமான அமைப்பு சரியாக செயல்படும்.

பப்பாளி

பப்பாளியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், வயிற்று உப்புசத்தை சரிசெய்யக்கூடியது. மேலும் இந்த பழம் உண்ணும் உணவை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது. செரிமானத்தை எளிதாக்குகிறது மற்றும் நெஞ்செரிச்சல், வாய்வு தொல்லை போன்ற அறிகுறிகளை குணப்படுத்துகிறது.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து மட்டுமின்றி, நார்ச்சத்தும் அதிகமாக உள்ளதால், இது செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது. இது வயிற்றை குளிர்ச்சியுடன் வைத்திருக்கிறது மற்றும் செரிமான அறிகுறிகளிடம் இருந்து நிவாரணத்தை வழங்குகிறது.

தக்காளி

தக்காளி வயிற்றின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் உள்ள லைகோபைன் சிறப்பான செரிமான செயல்பாட்டிற்கு உதவுகிறது. மேலும் தக்காளியில் மக்னீசியம், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளதால், அன்றாட உணவில் தக்காளியை சேர்த்து வாருங்கள்.

கிவி

கிவி பழத்தில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள், செரிமான ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் வைட்டமின் சி, மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் பெப்சின் போன்ற சத்துக்கள் ஏடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

ஆப்பிள்

ஆப்பிளை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், குடல் செயல்பாடுகள் சிறப்பாகவும் சரியாகவும் நடைபெறும். ஏனெனில் இதில் குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன. எனவே ஆப்பிளை தினமும் சாப்பிட்டு, செரிமான செயல்பாட்டை சிறப்பாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

கேரட்

கேரட் செரிமானத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதில் நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை செரிமான ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அதோடு கேரட் கண்களுக்கு மிகவும் நல்லது. எனவே இதை அடிக்கடி உங்கள் உணவில் சேர்க்க முயற்சி செய்யுங்கள்.

Related posts

குழந்தைகளுக்கு மனநல பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!

nathan

இந்த 5 ராசிக்காரங்க அவங்களுக்கு வேணும்ங்கறது கிடைக்க எப்படி வேணாலும் ட்ராமா போடுவாங்களாம்…

nathan

உட்கார்ந்தபடியே அதிக நேரம் வேலை பார்ப்பவரா நீங்கள்? கட்டாயம் இத வாசியுங்கள்!…

sangika

குழந்தைக்கு தாய்ப்பால் பிடிக்காமல் போக அம்மா செய்யும் இந்த விஷயங்கள்தான் காரணம்…

nathan

காலை உணவு சாப்பிடும்போது இந்த தவறுகளை தெரியாமகூட செஞ்சுராதீங்க…

nathan

நன்மைகள்..நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் நாவல்பழம்

nathan

இதை படியுங்கள்…திடீரென உடல் எடை கூடுவதற்கு சில காரணங்கள்!!

nathan

பெட் சீட்டின் அடியில் சோப்பை வையுங்கள்: அற்புதம் இதோ!

nathan

உங்க ஆரோக்கியத்தைப் பத்தி உங்க நாக்கு என்ன வாக்கு சொல்லுதுன்னு தெரியுமா!!! தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

nathan