29.5 C
Chennai
Sunday, May 19, 2024
1 156
ஆரோக்கியம் குறிப்புகள்

குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவது நல்லதா?

ஒரு குறிப்பிட்ட வயது வரை குழந்தைகளை ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பது மிகவும் கடினமான பணியாகும். குழந்தைகளின் தோல் மிகவும் மென்மையாகவும், வீக்கம், சிவத்தல், அரிக்கும் தோலழற்சி போன்ற தோல் பிரச்சனைகளுக்கு ஆளாகிறது.

குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த பிரச்சனைகளை எளிய பொருட்கள் மூலம் குணப்படுத்தலாம். இது தேங்காய் எண்ணெய் தவிர வேறில்லை. உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தேங்காய் எண்ணெய் என்ன செய்ய முடியும் என்பதை இந்த பதிவில் பாருங்கள்.

குழந்தைக்கு ஏன் தேங்காய் எண்ணெய் கொடுக்க வேண்டும்?
குழந்தைகள் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள். தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலத்தின் காரணமாக அதில் அதிகளவு ஆன்டிபாக்டீரியல், ஆன்டிவைரல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இது தொற்றுநோய்களுக்கு எதிராக போராடுவதுடன் வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கும். இதில் இருக்கும் வைட்டமின் ஈ குழந்தைகளுக்கு மென்மையான மற்றும் ஈரப்பதமான சருமத்தை வழங்குகிறது.

முடிக்கான பயன்கள்

தேங்காய் எண்ணெய் அனைத்து முடி வகைகளுக்கும் பொருந்தக்கூடியதாகும். தேங்காய் எண்ணெயை தொடர்ச்சியாக உபயோகிப்பவர்களுக்கு அடர்த்தியான, கருமையான, வலிமையான கூந்தல் இருக்கும். தேங்காய் எண்ணெய் கொண்டு குழந்தைக்கு மசாஜ் செய்வது அவர்களுக்கு முடி வளர்ச்சியை தூண்டுவது, ஈரப்பதமான பளபளப்பான முடி, வறட்சியற்ற தலை போன்ற பலன்களை வழங்குகிறது. அதிகப்படியான பலன்களுக்கு தேங்காய் எண்ணெயை சிறிது சூடு பண்ணி தேய்க்கவும்.

மென்மையான சருமம்

தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த இயற்கை ஈரப்பதமூட்டிகளில் ஒன்றாகும். உங்கள் குழந்தையின் வறண்ட சருமத்தின் மீது இது பல அற்புதங்களை நிகழ்த்தும். உங்கள் குழந்தையின் லோஷன்களுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை பயன்படுத்த தொடங்குங்கள். அதன்பின் மாற்றத்தை கவனியுங்கள்.

 

தடிப்புகள்

டயபர்களால் ஏற்படும் தடிப்புகள் மற்றும் அலர்ஜிகளுக்கு தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த மருந்தாகும். தடிப்பு இருக்கும் இடத்தில் சிறிது தேங்காய் எண்ணெயை தொடர்ச்சியாக தடவுங்கள்.

பருக்கள்

குழந்தைகளுக்கு அடிக்கடி பருக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தேங்காய் எண்ணெயில் இருக்கும் கிருமிநாசினி குணங்களும், ஆன்டிபாக்டீரியா குணங்களும் குழந்தைகளின் பருக்களை குணப்படுத்துவதோடு அதனால் ஏற்படும் அசௌகரியத்தையும் குறைக்கும்.

தீக்காயங்களை குணப்படுத்தும்

தீக்காயங்கள் ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட பகுதிக்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துங்கள். தொடர்ச்சியான பயன்பாடு தீக்காயத்தை குணப்படுத்தும் மற்றும் வடு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கும்.

தோல் அழற்சி

சருமத்தில் ஏற்படும் தோல் அழற்சியை குணப்படுத்த தேங்காய் எண்ணெய்தான் சிறந்த வழியாகும். எக்சிமா நோயால் ஏற்படும் காயங்கள் வலி மற்றும் அரிப்பை உருவாக்கும். இதனை குழந்தைகளால் தாங்கிக்கொள்ள இயலாது. இது பெரும்பாலும் முழங்கை, கழுத்து, கன்னம் போன்ற இடங்களில் ஏற்படும். தேங்காய் எண்ணெயில் இருக்கும் குணப்படுத்தும் குணங்கள் எந்த பக்க விளைவுகளும் இன்றி இதனை குணப்படுத்தும்.

 

வயிற்றுப்போக்கு

வயிற்றுப்போக்கு மற்றும் குமட்டல் போன்றவை குழந்தைகளுக்கு பொதுவாக அதிகம் ஏற்படும் நோய்களாகும். முன்கை மற்றும் மணிக்கட்டில் தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது குழதைகளுக்கு உடனடி நிவாரணத்தை வழங்கும்.

Related posts

கோடை காலத்தில் எந்த உணவை தவிர்க்கலாம்!….

nathan

பெண்களே தளர்ந்த மார்பகங்களை சரிசெய்ய வேண்டுமா?இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

உங்கள் மாதவிடாயை அவசரமாக நிறுத்துவதற்காக, வெற்றிடக் குழல்களைப் பயன்படுத்தும் போக்கை நிறுத்துங்கள்

nathan

உடல் வெப்பம் அதிகரிக்கிறதா? சிறுநீரைப் பார்த்துக் கண்டுபிடியுங்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா சப்போட்டா பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன தெரியுமா…?

nathan

இந்த நாட்களில் உங்கள் நகங்களை வெட்டாதீர்கள்!

nathan

வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடித்தால் நடக்கும் அதிசயம்!

nathan

தெரிந்து கொள்ளுங்கள்! அளவுக்கு அதிகமான தூக்கம் ஆரோக்கியமற்றது: ஏன்?

nathan

பெண்களே இறுக்கான உடை அணிவதை தவிருங்கள்

nathan