ஆரோக்கிய உணவு

குழந்தைகள் குடிக்கும் இந்த வகை பால் மற்றும் தண்ணீர் ஆரோக்கியத்தை சிதைக்கக்கூடும்…!

இந்த நாட்களில் குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவுகளில் பெரும்பாலானவை ஆரோக்கியமற்ற உணவுகள். நீங்கள் சாப்பிடுவது மட்டுமல்ல, நீங்கள் குடிப்பதும் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. ஒரு குறிப்பிட்ட வயது வரை குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது, எனவே உணவு பெரியவர்களை விட குழந்தைகளை பாதிக்கலாம்.

சிறுவயதிலிருந்தே உடல் எடை அதிகரிப்பு, வயிற்றெரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு குழந்தைகள் ஆளாகின்றனர். அவர்கள் குடிக்கும் சில பானங்கள் புற்றுநோயை உண்டாக்கும். இந்த இடுகையில், உங்கள் குழந்தை என்ன பானங்கள் குடிக்கக்கூடாது என்று பார்க்கலாம்.

ஆல்கஹால்
தற்போது இருக்கும் சூழலில் பதின்ம வயதில் இருக்கும் குழந்தைகள் கூட மது அருந்த தொடங்கி விட்டனர். இவர்கள் குடிக்கும் ஒவ்வொரு துளி மதுவும் அவர்களின் வளர்ச்சியை பாதிப்பதாக இருக்கும். ஆய்வுகளின் படி இவர்கள் மது அருந்தும் போது அது பெரியவர்களை காட்டிலும் இவர்களின் நினைவாற்றலையும், கற்றல் திறனையும் பாதிக்கும். மேலும் இவற்றில் இருக்கும் அதிகளவு கலோரிகள் அவர்களின் எடையை மிக விரைவாக அதிகரிக்கும்.

எனர்ஜி பானங்கள்

பதின்ம வயதில் இருப்பவர்கள் எனர்ஜி பானங்கள் என்று நினைத்து சில பானங்களை குடிக்கிறார்கள். அவர்கள் குடிக்கும் ஒரு எனர்ஜி பானம் அவர்களின் ஒருநாள் தேவைக்கான காஃபைனில் பாதியை தருகிறது. இது குழந்தைகள் உடலில் அதிகம் சேர்வது அவர்களின் தூக்கத்தை கெடுக்கும். மேலும் அவர்கள் குடிக்கும் சில எனர்ஜி பானங்களில் எபிட்ரின் என்னும் பொருள் உள்ளது. இந்த செயற்கை ஆற்றல் குழந்தைகள் உடலில் இயற்கையாக உற்பத்தியாகும் இரசாயனங்களை பாதிக்கும்.

காஃபைன் பானங்கள்

வயது வந்தவர்கள் கூட காஃபைனை அதிகம் சேர்த்து கொள்ளக்கூடாது. ஆனால் வளருபவர்கள் காஃபைன் அதிகம் எடுத்துக்கொள்வது உண்மையில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். குழந்தைகள் அதிக காஃபைன் எடுத்துக்கொள்வது அவர்கள் உடலில் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் இதயத்துடிப்பின் அளவு மற்றும் இரத்த அழுத்தத்தின் அளவை அதிகரிக்கும். இது அவர்களின் புத்திக்கூர்மையில் பெரிய பாதிப்பை உண்டாக்கும்.

 

குளிர் பானங்கள்

இனிப்பான சுவை கொண்ட இது பெரும்பாலான குழந்தைகள் குடிக்கும் ஒரு பானமாக இருக்கிறது. உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து பல் மருத்துவர்களும் கூறும் ஒரு பொதுவான செய்தி இதனை குடிக்கக்கூடாது என்பதுதான். ஆனால் இது குழந்தைகளுக்கு உடல் பருமன், சர்க்கரை நோய் போன்ற பல பிரச்சினைகளை உண்டாக்குகிறது. சோடா, செயற்கை இனிப்புகள் என இதில் தீங்கை ஏற்படுத்தும் பொருட்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

போலி பழச்சாறுகள்

பழச்சாறுகள் குழந்தைகளுக்கு நன்மையை ஏற்படுத்துவதுதான். ஆனால் போலி பழச்சாறுகள் ஆபத்தை மட்டுமே ஏற்படுத்துகிறது. பழ சுவைகளில் இருக்கும் இந்த பானங்கள் கார்பனேற்றப்படாத சோடாக்கள் மட்டுமே. இவற்றில் சிறிது நார்சத்துக்களும், பழத்தின் உண்மையான சத்துக்களில் சிறிதளவும் இருக்கும். மற்றபடி இது முழுக்கு முழுக்க செயற்கை சுவையூட்டப்பட்ட சோடாதான்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

பால்

குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதில் முதல் இடத்தில் இருக்கும் உணவு பால்தான். ஆனால் அது எந்த வகை பால் என்பதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். குழந்தைகளுக்கு காய்ச்சாத பாலை கொடுக்கக்கூடாது. ஏனெனில் இவற்றில் பாக்டீரியாக்களின் அளவு அதிகமாக இருக்கும். இது அவர்களுக்கு பல உடல் உபாதைகளை ஏற்படுத்தும், அதேபோல சுவைக்காக ஏற்கனவே தயாரிக்கப்பட்ட சாக்லேட் மில்க் போன்றவற்றையும் கொடுக்கக்கூடாது. 450 கிராம் சாக்லேட் மில்க்கில் 10 கிராம் கொழுப்பும் 60 கிராம் சர்க்கரையும் இருக்கும்.

கார்பனேற்றப்பட்ட பவர் பானங்கள்

கேடோரேட் போன்ற ஒரு “பவர்” பானம் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு ஊக்கத்தை அளிக்கும், ஆனால் குழந்தைகளுக்கு அது ஆற்றலை மட்டும் வழங்குவதில்லை. இது குழந்தையின் எடை மற்றும் அவர்களை அடிக்கடி மருத்துவமனைக்கு செல்லும்படி வைக்கிறது. சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் இருக்கும் பவர் பானங்கள் விளையாட்டில் ஈடுபடும் குழந்தைகளுக்கு ஏற்றது. ஆனால் விளையாட்டில் ஈடுபடாத குழந்தைகள் இதனை தவிப்பதுதான் நல்லது.

 

தண்ணீர்

எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாத ஒரு பானம் என்றால் அது தண்ணீர்தான். ஆனால் அது தண்ணீரை எவ்வளவு குடிக்கிறோம் என்பதை பொறுத்ததாகும். அதேசமயம் சில செயற்கை பொருட்கள் சேர்க்கப்பட்ட நீரை குடிப்பதும் குழந்தைகளுக்கு ஆபத்தைத்தான் ஏற்படுத்தும். குழந்தைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் சிறுநீரகம் மூலமாகத்தான் உடல் முழுவதற்கும் அனுப்பப்படுகிறது. அதிகளவு தண்ணீர் குடிப்பது அதன் செயல்பாட்டை பாதிக்கும். அதேபோல செயற்கை பொருட்கள் சேர்க்கப்பட்ட பானங்கள் சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button