26.2 C
Chennai
Friday, Dec 13, 2024
அழகு குறிப்புகள்கை பராமரிப்பு

உங்க பொன்னான கைகள்…!

manicure-pedicure-635-280பெண்களின் வசிகர அழகில் முகத்தைப்போலவே கைகளுக்கும் முக்கியப்பங்கு உண்டு. கைகளால் தினமும் நாம் எத்தனையோ வேலைகளைச் செய்கிறோம்.

அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பது மட்டுமல்ல. சரும வியாதிகள் வராமல் இருக்கவும் கைகளை பராமரிப்பது அவசியம். வெகு சிலருக்கே இயற்கையான அழகான கைகள் அமைகின்றன.

குளித்து முடித்து பிறகோ அல்லது கைகளைக் கழுவிய பிறகோ, பேபிலோஷன், மாஸ்சரைசர் தடவவும், வெளியில் செல்வதாக இருந்தால் அவசியம் சன்ஸ்கிரின் லோஷன் தடவிய பிறகு மணி நேரம் கழித்து வெளியில் செல்ல வேண்டும்.

நீண்ட நேரம் தண்ணீரில் வேலை செய்வதனால் சருமம் பாதிக்கப்படும். அதிக சூடான அல்லது குளிர்ச்சியான நீரில் குளிப்பதன் மூலம் சருமத்தில் உள்ள இயற்கையான எண்னெய்ப்பசை அழிந்துவிடும்.

பாத்திரங்கள் கழுவப் பயன்படுத்தப்படும் ஒரு சில சோப்புகளும் நாளடைவில் கைகளை அரித்துவிடும் எனவே ரப்பர் குளோஸ்களைக் பயன்படுத்துவது நல்லது.

கைகளில் கொப்புளமா?

கைகளில் அடிக்கடி கொப்புளம், பரு தோன்றினால் தக்க சிகிச்சையின் மூலம் சில நாட்களில் குணமாயிடும்.

பாடி ஆயில் அல்லது பாடி லோஷனை தொடர்ந்து கைகளில் தடவினால் கைகள் பட்டுப் போல மென்மையாகும்.

தூங்கப்போவதற்கு முன் தேங்காய்எண்ணெய் மற்றும் மஞ்சள் கடுகு எண்ணெயை கைகளில் தேய்த்து மாலிஷ் செய்யவும்.

இதுதவிர, வாரம் 2 முறை பாலாடையை கைகளில் பூசி சிறிதுநேரம் கழித்து குளிக்கவும்.

பெண்களுக்கு வீட்டு வேலைகள் அதிகம் இருப்பதால் உள்ளங்கைகள் காய்ப்பு காய்த்து விடும். இதற்கு பீர்க்கங்காய் நார் நல்ல பலனைத்தரும் குளிக்கும் போது அல்லது கைகளை சுத்தம் செய்யும் சமயத்தில் இந்த நாரை காய்ப்பு இருக்கும் இடங்களில் லேசாகத் தேய்க்கவும் கைகளைச் சுத்தம் செய்த பிறகு கிரீமை கொஞ்சம் அதிகமாக பூசுங்கள் உள்ளங்கைகள் மென்மையாகி விடும்.

முழங்கையை அழகுபடுத்த

ஒரு பெண் என்னதான் சிகப்பானவராக இருந்தாலும் முழங்கை மட்டும் காய்ப்பு காய்த்தால் அலங்கோலமாகத்தான் இருக்கும் சரியான பராமரிப்பு இல்லாததே இதற்குக் காரணம்.

முழங்கைகளை தினமும் குளிக்கும் போது தவறாமல் சோப்பு மற்றும் பீர்க்கங்காய் நாரால் கழுவவும். அதன்பிறகு தண்ணீரால் சுத்தம் செய்துவிட்டு மாஸ்சரைசரால் நன்கு மாலீஷ் செய்யவும் எலுமிச்சைப் பழத்தை இரண்டாக நறுக்கி மேஜை மீது வைத்து அதன்மீது முழங்கைகளை சிறிது நேரம் ஊன்றிக் கொண்டிருக்கவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முழங்கைகளில் உள்ள கருமை நிறம் மெல்ல மெல்ல மறைந்து விடும்.

Related posts

பித்த வெடிப்பு வராமல் தவிர்க்க

nathan

ஸ்கின் லைட்டனிங் சிகிச்சையை வீட்டில் செய்வது எப்படி?

nathan

உதட்டை பராமரிக்கும் வழிமுறையை அறிந்து கொள்ளலாம்…..

sangika

சூப்பர் டிப்ஸ் கைகளில் ஏற்படும் சுருக்கங்களை சரிசெய்ய அழகு குறிப்புகள்….!

nathan

beauty tips.. ஆயில் முகத்திற்கு ரோஜா பூ

nathan

வித விதமா சாப்பாடு போட்டே கணவனை கொன்ற அதர்ம பத்தினி

nathan

உங்கள் முகத்தில் வைக்கக் கூடாத 11 விஷயங்கள்

nathan

சரும பராமரிப்பில் விளக்கெண்ணை

nathan

இதை நீங்களே பாருங்க.! அழகு தமிழில் பின்னியெடுக்கும் வெள்ளைக்கார தாத்தா!

nathan