மேக்கப்முகப் பராமரிப்பு

லிப்ஸ்டிக் போடுவது எப்படி? – உங்களுக்கும் தெரியாத சில குறிப்புகள்

அழகு குறிப்புகள்:
மகிழ்ச்சி, துக்கம், சோகம், விருப்பு, வெறுப்பு, கோபம் என அனைத்தையும் வெளிப்படுத்துவதில் கண்களுக்கு இருக்கும் முக்கித்துவத்தை விட உதடுகளுக்கு பெரும் பங்குண்டு.

அன்பை முத்தமாகவும், விருப்பை புன்சிரிப்பாகவும் வெளிப்படுத்துகின்றன.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த உதடுகள் தமக்கு அழகாக, சிவப்பாக அமையவில்லையே என்ற ஏக்கம் பல பெண்களுக்கும் இருக்கும்.

அவர்களை மகிழ்விக்கவே இந்த அழகு (டிப்ஸ்) குறிப்புகள்.

வெயில் மற்றும் மழை காலங்களில், அந்தந்த சூழ்நிலைகேற்ப உதடுகளை முறையாக பராமரித்து வந்தாலே போதும், உங்கள் உதடுகளும் அழகாக இருக்கும்.

சாதாரணமாக மேக்கப் இல்லாமல், லிப்ஸ்டிக் மட்டும் போட்டு கொண்டாலே போதும், முகம் பளிச்சென இருக்கும்.

வைட்டமின் சத்துள்ள உணவுகள்:
உடலில் வைட்டமின் சத்து குறைபாடு ஏற்பட்டால் உதடுகளின் ஓரத்தில் புண்கள் ஏற்படுகிறது.

இந்த குறைபாட்டினை போக்க உணவில் கீரைகள், பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவில் சேர்த்துகொள்ள வேண்டும்.

மேலும், நிறைய தண்­ணீரும் குடிக்க வேண்டும். வைட்டமின், ‘இ’ சத்துகள் நிறைந்த, ‘சன்ஸ்கிரீன் லோஷனை’ தடவினாலும் புண்கள் மற்றும் கொப்புளங்கள் மறையும்.

கொழுப்புச் சத்து குறையும் போது, உதடுகள் சுருங்கி வயதானவர்கள் போல் தோற்றமளிக்கின்றன். அப்போது உதடுகளில், ‘வாசலின்’ தடவிக்கொள்ளலாம்.

உதடு வெடிப்புகள் குணமடைய:
அதிக குளிரோ, அதிகவெப்பமோ எதுவானாலும் ஒரு சிலருக்கு ஒத்துக் கொள்ளாது.

உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். மேலும் சிலருக்கு உதடுகள் கறுத்தும், வெடிப்புகளும் ஏற்படும்.

அவர்கள் பாலேட்டுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், கருமை மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.

வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச்சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.

லிப்ஸ்டிக் போடும்போது கவனிக்க வேண்டியவை:
கண்ணிற்கு மை இடுவது போல உதட்டிற்கு லிப்ஸ்டிக் போடுவது என்பது இன்றைய சூழலில் அவசியமான ஒன்றாக மாறிவருகிறது.

நமது உதட்டிற்கு ஏற்ற லிப்ஸ்டிக்கினை தேர்வு செய்து போடுவது என்பது தனி கலை.

சிவப்பாக இருப்பவர்களுக்கு எல்லா கலர் லிப்ஸ்டிக்கும் பொருத்தமாக இருக்கும். ஆனால் மாநிறமாகவோ, கறுப்பாகவோ இருப்பவர்கள் சரியான கலர் லிப்ஸ்டிக்கினை தேர்வு செய்யதல் அவசியம்.

கறுப்பாக இருப்பவர்கள் மிகவும் லைட்டாகவோ அல்லது டார்க்காகவோ இல்லாமல், பொதுவான கலரில் லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம்.

மாநிறமாக இருப்பவர்கள் இயற்கையான நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், அழகாக இருக்கும்.

வெயில் காலங்களில் இரண்டு கலர்களை சேர்த்து லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், எடுப்பாக இருக்கும்.

லிப் லைனர் உபயோகிக்கும்போது:
லிப்ஸ்டிக்குக்கு ஏற்ற வகையில் லிப் லைனர் மற்றும் பென்சிலை தேர்ந்தெடுக்க வேண்டும்.

லைனர் போட்ட பிறகு, லிப் பிரஷ் பயன்படுத்தி லிப்ஸ்டிக்கை போட்டு கொண்டால், திட்டு திட்டாக இல்லாமல், ஒரே சீராக அழகாக இருக்கும்.

லிப் லைனர் பயன்படுத்தும் போது, பெரிய உதடு உள்ளவர்கள், உதடுக்கு உள்ளே வரைந்தால், உதடுகள் சிறியதாக தெரியும்.

உதடுகள் பெரிதாக தெரிய வேண்டுமெனில், முதலில் தேவையான நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டு கொள்ள வேண்டும்.

பிறகு வெள்ளை நிற லிப்ஸ்டிக்கை உதட்டின் நடுவில் தடவினால், உதடுகள் பெரிதாக பளிச்சென்று தெரியும்.

உடையின் நிறத்துக்கு ஏற்ற லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், எடுப்பாக அழகாக இருக்கும்.

தரமில்லாத மற்றும் தவறான முறையில் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தினால், உதடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டு தோல் உரியும். மேலும் உதடுகள் காய்ந்திருக்கிறது என்று, அடிக்கடி எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தக் கூடாது.

அவ்வாறு செய்வதால் எச்சிலில் இருக்கும் பாக்டீரியாக்களால், உதட்டில் புண்கள் ஏற்படலாம். மேலும், உதட்டில் உள்ள ஈரப்பதனும் போய்விடும்.

இந்த முறைகளை பின்பற்றி உதடுகளை பராமரித்தால் அழகான மற்றும் சிவந்த உதடுகளுடன் நீங்களும் அழகு ராணியாக வலம் வரலாம்.

* சிவப்பு நிற பெண்கள் ஆரஞ்சு, சிவப்பு, பிங்க் நிற லிப்ஸ்டிக் பூசலாம்.

* மாநிறப் பெண்கள் லைட் பிரவுன், லைட் செர்ரி நிற லிப்ஸ்டிக் பூசலாம்.

* முதலில் லிப் பென்சிலால், லிப்ஸ்டிக் போட வேண்டிய பகுதியில், அவுட் லைன் போட வேண்டும். மெலிதான உதடுகளைக் கொண்டவர்கள், உதடுகளின் வெளிப்பகுதியில் அவுட் லைன் வரைய வேண்டும். பருமனான உதடு கொண்டவர்கள், உதடுகளின் உள் பகுதியிலேயே அவுட் லைனை போட வேண்டும்.

மேல் உதடு தடிமனாக இருப்பவர்கள், மேல் உதட்டின் உள் பகுதியிலுமாக அவுட் லைன் போட வேண்டும். அவுட் லைன் போட்ட பகுதிகளில் லிப் பிரஷ் மூலம் லிப்ஸ்டிக்கை போடவும்.

* இதழ்கள் ஈரமாக இருந்தால், முகப்பவுடரை தடவி, அதன் பிறகு லிப்ஸ்டிக் போடலாம்.

* லிப்ஸ்டிக் பூசும் போது, இடமிருந்து வலமாக, வலமிருந்து இடமாக பூச வேண்டும்; மேலும், கீழும் போட்டு இழுக்கக் கூடாது.

*அதிகமாக லிப்ஸ்டிக் பூசி விட்டால், ரிஷ்யூ பேப்பரால் ஒற்றி எடுத்து, சரி செய்யுங்கள்.

* பகல் நேரத்தில் இள நிறத்திலும், மாலை நேரத்தில் அடர் நிறத்திலும் பூசுங்கள்.

* லிப்ஸ்டிக் பூசிய பிறகு, உதட்டால் ஈரப்படுத்துவதோ, பானங்கள் அருந்துவதோ கூடாது.

* முதலில் லிப் லைனரால் உதடுகளை அவுட் லைன் செய்து, பிறகு, அதன் மூலமே உதடுகளை நிரப்பவும். முதலில் லிப்ஸ்டிக்கை தடவி, பிறகு லிப் லைனரால் அவுட் லைனும் செய்யலாம். இம்முறை உதடுகளை மென்மையானதாக, கவர்ச்சியானதாக காட்டும்.

* இரவு படுக்கச் செல்வதற்கு முன், உதடுகளில் வாசலின் தடவிக் கொள்ளலாம். லிப்ஸ்டிக் தடவுவதற்கு முன், வாசலைன் உபயோகித்தாலும், உதடுகள் பளபளக்கும்.

* அதிக குளிரும், அதிக வெயிலும் லிப்ஸ்டிக்குக்கு எதிரிகள்; காரணம், உதடுகள் வறண்டு விடும்.

பொதுவாக லிப்ஸ்டிக் போடுவதற்கு முன், தேங்காய் எண்ணெயை உதடுகளில் தடவி, 10 நிமிடம் கழித்து வெது, வெதுப்பான வெந்நீரில் ஒரு துணியை நனைத்து, உதடுகளை துடைக்கவும். அதன் பிறகு, லிப்ஸ்டிக் போடுவது நல்லது.

* லிப்ஸ்டிக் போட்டவர்கள் அதிக நேரம் வெயிலில் அலைவதோ, ஒரு லிப்ஸ்டிக்கை ஆறு மாதத்துக்கு மேல் பயன்படுத்துவதோ கூடாது.lipstickkkkkkki

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button