ஆரோக்கிய உணவு

தினமும் ஒரு முட்டை அவசியமா?

தினமும் ஒரு முட்டை அவசியமா?- சமையல் டிப்ஸ்

தினம் ஒரு முட்டையினை சாப்பிடுவது நம்முடைய உடலிற்கு நல்லது.குறைந்த செலவில், அதிக சத்துகள் நிறைபிய ஒரு உணவு முட்டை.

காலை நேரத்தில் சிற்றுண்டியாக, 2 முட்டையினை சாப்பிடுவதால், நம்முடைய உடலிற்கு 14 கிராம் அதிக சத்துகள் நிரம்பிய Protein, 12 கிராம் கொழுப்பு ,1 கிராம் Carbohydrate மற்றும் 13 விதமான Minerals & விட்டமின்ஸ் கிடைக்கின்றது.

பொதுவாக ஒரு பெரிய முட்டையில் 80 கலோரிஸ் இருக்கின்றது, இதில் 60 கலோரிஸ் முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கின்றது. மீது 20 கலோரிகள் தான் வெள்ளை கருவில் இருக்கின்றது. அதனால் உடல் பருமனாக இருப்பவர்கள், வயதனவர்கள் வெள்ளை கருவினை மட்டும் சாப்பிடுவது உடலிற்கு நல்லது.

முட்டையின் மஞ்சள் கருவில் அதிக அளவு Cholesterol இருக்கின்றது. ஆனாலும் இந்த கொலஸ்ட்ரால் நம்முடைய கொலஸ்ட்ரால் அளவினை அதிகப்படுத்துவதில்லை. ஆனாலும் அளவோடு சாப்பிடுவது நல்லது. ஒரு நாளைக்கு நமக்கு 300 mg Cholesterol நம்முடைய உடலிற்கு தேவைப்படுகின்றது. ஒரு முட்டையின மஞ்சள் கருவில் சுமார் 275 mg இருக்கின்றது. தினமும் முட்டையினை சாப்பிடுவதால் இதய நோய் வருவதற்கான வாய்புகள் குறைவாக இருப்பதாக ஆய்வுகளில் கண்டுபிடிக்கபட்டுள்ளது.

தினமும் காலை நேர உணவாக, இரண்டு முட்டை சாப்பிட்டால் அன்றைய தினம் முழுவதும் சோர்வு இல்லாமல் உடல் இயங்கும்..(முட்டையில் அதிக சத்துகள் இருப்பதால்.) இப்படி தினமும் 2 முட்டையினை சாப்பிடுவதால் உடல் இளைக்கவும் உதவுகின்றது.

முட்டையினை சமைக்கும் பொழுது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்,

முட்டையினை கடையில் இருந்து வாங்கி வந்துவுடன், அதனை ப்ரிஜில் வைப்பது மிகவும் நல்லது.

வாங்கிபொழுதோ அல்லது சமைக்கும் முன்போ(எப்படியும் சமைக்கும் பொழுது உடைக்கதான் போகிறோம்-இது அதற்கும் முன்பு-)முட்டை உடைந்து காணபட்டால் அதனை கண்டிப்பாக உபயோகிக்க கூடாது.

வேகவைத்த முட்டையினை ஒரு வாரம் வரை ப்ரிஜில் வைத்து சாப்பிடலாம்.முட்டையின் வெள்ளை கருவினை 8 – 10 நாட்கள் வரை ப்ரிஜில் வைத்து உபயோகிக்கலாம். மஞ்சள் கருவினை, தண்ணீர் ஊற்றி காற்று புகாத டப்பாகளில் வைத்து ப்ரிஜில் வைத்து 2 – 3 நாட்களுக்குள் உபயோகிக்கலாம்.

முட்டையினை வேகவைத்த பின், உடனடியாக அதனை குளிர்ந்த தண்ணீருக்கு மாற்றிவிட வேண்டியது மிகவும் நல்லது. மஞ்சள் கருவில் உள்ள Iron சத்து, முட்டையின் வெள்ளை கருவில் இருக்கும் Sulfurருடன் சேர்த்து முட்டையின மஞ்சள் கருவினை ஒருவித பச்சைநிறத்திற்கு மாற்றிவிடுகின்றது. (‘அது நல்லது அல்ல’)

முட்டையினை வேகவைக்கும் பொழுது கவனிக்கவேண்டியது: Expiry Dateயிற்கு ஒரு வாரம் முன்னதாக சமைத்தால், தோல் நீக்குவது மிகவும் சுலபமாக இருக்கும். Expiry Dateயிற்கு 2 – 3 வாரம் முன்னதாக சமைத்தால் வேகவைத்த முட்டையில் தோலினை நீக்கிவதில் சிறிது சிரமம் எடுக்கும்.

முட்டையினை அனைத்து வித சமையலுக்கும் உபயோகிக்கலாம்.

முட்டையை பொறிப்பதற்காக எடுத்து உடைக்கும் முன்பு அதனை கழுவுதல் நலம். கண்டிப்பாக இப்படி செய்வது நல்லது.
egg 002

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button