கை பராமரிப்பு

கைகள் கருப்பாக உள்ளதா? இதோ டிப்ஸ்

சிலரது முகம் பார்ப்பதற்கு பளிச்சென்று வெள்ளை நிறமாக இருக்கும்.

ஆனால், கை கால்கள் மற்றும் கழுத்து போன்றவை அதற்கு எதிர்மாறாக இருக்கும்.

காரணம் நாம் வெயிலில் அதிகமாக செல்லும்போது, நாம் ஆடை அணிந்திருக்கும் பகுதிகள் தவிர மற்ற இடங்களில் வெயில் படுவதால் கறுப்பாக தெரிகிறது.

ஆனால், முகத்திற்கு க்ரீம், பேஷியல் என அப்ளை செய்து கொஞ்சம் வெள்ளையாக்கிவிடுகிறோம்.

அதே, கவனத்தை கொஞ்சம் கைகளிலும் செலுத்தினால் கருப்பாக இருக்கும் கைகளை வெள்ளையாக்கி விடலாம்.

என்ன செய்யலாம்?

1. தயிருடன் சிறிது மஞ்சள் தூள் கலந்து, அவற்றை மாலை வேளைகளில் கைகளில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கைகளில் உள்ள கருமையைப் போக்கலாம்.

2. தக்காளியை வெட்டி, அதனை கருமையாக உள்ள கைகளில் தேய்த்து 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்வதால் அதில் உள்ள அமிலம் கைகளில் உள்ள கருமையை மறைக்கும்.

3. பாதாமை இரவில் படுக்கும் போது சிறிது பாலில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை பால் ஊற்றி அரைத்து பேஸ்ட் செய்து, கைகளில் தடவி உலர வைத்து, பின் கழுவ வேண்டும்.
இச்செயலை தினமும் செய்து வந்தால், கைகளில் உள்ள கருமை நீங்குவதோடு, கைகளும் மென்மையாக இருக்கும்.

4. பப்பாளியில் சரும கருமையைப் போக்கும் பொருள் உள்ளது. எனவே பப்பாளியை அரைத்து அந்த பேஸ்ட்டை கைகளில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவி வர, கைகள் வெள்ளையாகும்.

5. மஞ்சள் தூளில் சரிசம அளவில் பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கைகளில் தடவி உலர வைத்து கழுவினால், வெயிலால் கருமையடைந்த கைகளை வெள்ளையாக்கலாம்.

6. கற்றாழை ஜெல்லை தினமும் கைகளில் தடவி உலர வைத்து கழுவி வந்தால், கருமையைப் போக்கி கைகளின் நிறத்தை அதிகரிக்கலாம்.

Related posts

கைகள் மென்மையாக இருக்க மெடிக்யூர்

nathan

கைகள் நிறம் மங்கி, பொலிவின்றி இருக்கிறதா? இதெல்லாம் ட்ரை பண்ணுங்க!

nathan

உங்கள் நகங்கள் மீதும் கவனம் தேவை

nathan