அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

முதுகு அழகு பெற…

bodycare_imageகுளிக்கும் போது நாம் அதிகம் கவனம் செலுத்தாத பகுதி முதுகு. இதனால் பொதுவாக முதுகுப் பகுதி அழகிழந்து மங்கலாக தோற்றம் அளிக்கிறது. அழகான முதுகு தெரியும் வகையில் பிறர் அணியும் உடைகளைப் பார்த்து பொறாமை பட வேண்டாம்!

குளிக்கும் போது முதுகு தேய்க்க உங்கள் கைகளை விட பிரஷ் உபயோகிப்பது நல்லது. முதுகுப் பகுதியை முழுவதாக சுத்தம் செய்ய இப்பொழுது நீண்ட கைப்பிடி உள்ள பிரஷ் கடைகளில் கிடைக்கிறது.

வாரத்தில் ஒரு முறை சந்தனம் மற்றும் பன்னீர் கலந்த கலவையை முதுகில் தடவவும். உலர்ந்த பிறகு கழுவிவிடவும். இது முதுகிற்கு நல்ல பொலிவை தரும்.

முதுகை “ஸ்க்ரப்” செய்வதால் உயிரிழந்த சருமம் அகன்று முதுகு புத்துயிர் பெறும்.

கடையில் கிடைக்கும் ஸ்க்ரப் உபயோக்க விருப்பமில்லை என்றால், வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம்.

உலர்ந்த சருமத்திற்கு:-

இரண்டு தேக்கரண்டி சர்க்கரையுடன், நான்கு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்யை சேர்க்கவும். இந்தக் கலவையால் முதுகை நன்றாக தேய்க்கவும். பிறகு கழுவவும்.

எண்ணெய் பசை சருமத்திற்கு:-

இரண்டு தேக்கரண்டி சர்க்கரையுடன் ஆறு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை சேர்க்கவும். இதைக் கொண்டு முதுகை நன்றாக தேய்த்து பின் கழுவவும்.

இது மட்டுமில்லாமல் நேராக நிமிர்ந்து நடப்பதும் உங்கள் முதுகிற்கு அழகை சேர்க்கும்.

Related posts

தீபிகா படுகோன் உடம்பு பளபளனு இருக்க அவரே தன்னுடைய அழகு ரகசியம் பற்றி சொல்கிறார்!…

nathan

இழந்த நம் அழகை மீண்டும் பெற கூடிய குறிப்புகள்!….

sangika

வீட்டிலேயே கவனமாக ஒரு ஃபேசியல் எவ்வாறு செய்து கொள்வது

nathan

பே‌சிய‌ல் ‌க்‌‌ரீ‌ம் செ‌ய்ய

nathan

உங்க தளர்ந்த மார்பகத்தை மீண்டும் சிக்கென மாற்ற சூப்பர் டிப்ஸ்…

nathan

கிளிசரினை இவ்வாறு பயன்படுத்தி முக அழகை பேணுங்கள்!…

sangika

உங்களுக்கு தெரியுமா பெண்கள் தாலிக்கயிறை மாற்றும் போது கவனிக்க வேண்டியவை

nathan

முகத்தை மட்டுமல்ல முதுகையும் பராமரிங்க

nathan

அழகு

nathan