ஆரோக்கிய உணவு

வெறும் வயிற்றில் டீ குடிச்சா இந்த பக்கவிளைவுகள் குறி வைத்து தாக்கும்!

வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள்
வளர்சிதை மாற்றம்
காலையில் வெறும் வயிற்றில் தேநீர் குடிப்பது வயிற்றில் உள்ள அமில மற்றும் கார பொருட்களின் ஏற்றத்தாழ்வுக்கு காரணமாகி உங்கள் வளர்சிதை மாற்ற அமைப்பை சீர்குலைக்கும். இது உடலின் வழக்கமான வளர்சிதை மாற்ற செயல்பாட்டில் தலையிடக்கூடும், மேலும் அதிக உடல் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.

பற்களின் அரிப்பு
அதிகாலையில் தேநீர் உட்கொள்வது உங்கள் பற்களின் பற்சிப்பியை ( Enamel ) அரிக்கக்கூடும்.

வாயில் உள்ள பாக்டீரியாக்கள் சர்க்கரையை உடைக்கும் என்பதால் வாயில் அமில அளவு அதிகரிப்பதற்கு வழிவகுக்கிறது, இது இறுதியில் உங்கள் பற்களில் உள்ள பற்சிப்பி அரிப்புக்கு காரணமாகிறது.

எழுந்ததும் டீ குடிப்பீங்களா? வெறும் வயிற்றில் டீ குடிச்சா இந்த பக்கவிளைவுகள் குறி வைத்து தாக்கும்! | Drink Tea On An Empty Stomach Problem[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

வயிறூதுதல்
பால் சேர்த்த தேநீர் குடிக்கும்போது பலர் வயிறு ஊதியிருப்பதை உணர்கிறார்கள். பாலில் அதிக லாக்டோஸ் உள்ளடக்கம் இருப்பதால் உங்கள் வெற்று குடலைப் பாதிக்கும். இது மலச்சிக்கல் மற்றும் வாயுவை ஏற்படுத்துகிறது.

காலை எழுந்ததும் டீ அல்லது காபி குடித்தால் தான் மலம் கழிக்கவே இலகுவாக இருக்கிறது என்று கூறுபவர்கள் பலர். ஏனெனில் அது குடல் இயக்கத்தினைத் தூண்டிவிடுகிறது.

எழுந்ததும் டீ குடிப்பீங்களா? வெறும் வயிற்றில் டீ குடிச்சா இந்த பக்கவிளைவுகள் குறி வைத்து தாக்கும்! | Drink Tea On An Empty Stomach Problem

மலச்சிக்கலை ஏற்படுத்தும்
ஆனால் டீயில் உள்ள காஃபைன் மலச்சிக்கலை ஏற்படுத்தும். அதற்கு பதிலாக காலை உணவுக்கும் மதிய நேர உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் சோர்வாக இருக்கும்போது டீ எடுத்துக் கொள்ளலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button