எடை குறைய

உடல் பருமனை அதிரடியாக குறைக்கும் “பேலியோ” டயட் முறைக்கு உதவும் சமூக வலைதளம்!

முப்பது வயதை தொட்டு விட்டாலே நோய்களும், உடல் பருமனும் அழையா விருந்தாளியாக நம் உடலுக்குள் வந்துவிடுகிறது.

அப்படி அழையா விருந்தாளியாக, சில சமயம் நம் பழக்க வழக்கம் காரணமாக அழைக்கப்படும் விருந்தாளியாக‌ நம் உடலில் குடி கொள்வதுதான் உடல் பருமன்.

எப்பாடுபட்டாவது வெயிட்டை குறைச்சிடனும் என்று எண்ணுபவர்களுக்காகவே, ஃபேஸ்புக்கில் சத்தமில்லாமல், ‘ஆரோக்கியம் – நல்வாழ்வு’ என்கிற பெயரில் குரூப் ஆரம்பித்து, 20,000க்கும் மேற்பட்ட மெம்பர்களோடு இயங்கி கொண்டிருக்கிறார்கள்.

‘பேலியோ’ என்கிற நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவு முறையை சற்று மாற்றி, ‘மாடிஃபை பேலியோ’ என்கிற‌ டயட்டை இவர்கள் அறிமுகப்படுத்த, சத்தமில்லாமல் தீயாய் பரவி, பலரும் இந்த உணவு முறையை பின்பற்றி, தங்கள் உடல் எடையை குறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மற்ற குரூப்புகள் போல் இங்கு வெட்டிக்கதை, ஊர் வம்பு முதலியன அறவே கிடையாது. இந்த குரூப்பின் அட்மின்களுள் ஒருவரான சென்னையைச் சேர்ந்த திருநாவுக்கரசிடம் பேசினோம்.

“2012ல இந்த குரூப்பை ஆரம்பிச்சோம். முதல்ல வெறும் 100 மெம்பர்கள்தான் இருந்தாங்க. நம்ம முன்னோர்கள் பின்பற்றின இந்த டயட்டை நாங்க மாடிஃபை பண்ணி, ‘மாடிஃபை பேலியோ’ னு மத்தவங்களுக்கு பரிந்துரைக்கிறோம். இதுக்கெல்லாம் முன்னாடி நாங்களே எங்க டயட்டை செஃல்பா செக் பண்ணி பார்த்து, அதுல கிடைச்ச ரில்சட் வைச்சே மத்தவங்களுக்கு பரிந்துரைக்க ஆரம்பிச்சோம். இன்னைக்கு ஆண்கள், பெண்கள்னு யாரெல்லாம் உடல் பருமனால அவதிப்பட்டாங்களோ, அவங்க எல்லாம் எங்க குரூப்பை பார்த்து நம்பி எங்க டயட்டை எடுத்துகிட்டு சக்ஸஸ் ஆகி, மத்தவங்களுக்கு வாய்வழி பாராட்டா பரப்பிட்டு இருக்காங்க.

இந்த டயட்ல இருக்கிற முக்கியமான விஷயம், கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக்கிட்டா, அது உங்க உடம்பை பசி தாங்க வைக்கும். ஸோ நீங்க சாப்பிட்டுக்கிட்டே இருக்க மாட்டீங்க. உங்க உடல் உங்க பேச்சை கேட்க ஆரம்பிக்கும். உடம்புல உள்ள கார்போஹைடிரேட்டை கண்ட்ரோல் பண்ண ஆரம்பிச்சாலே உடம்புல உள்ள பி.பி, சுகர் ஆரம்பிச்சு தீர்க்க முடியாத எல்லா நோயையும் தீர்த்து/கட்டுக்குள் கொண்டு வரலாம். அதுக்காக நீங்க மாத்திரைகளே எடுத்துக்க வேண்டாம்னு நாங்க இதுவரை சொன்னதே இல்லை.

நாங்க சொல்ற டயட்டோட மருந்துகளையும் எடுத்துகிட்டா சர்க்கரை கண்ட்ரோல்க்குள்ள வந்திடும். பல நோய்கள் காணாம போயிருக்குனு எங்க குரூப் மெம்பர்கள் பெருமையோட சொல்வாங்க. நான் வெஜ் சாப்பிடுறவங்க அதை க்ரில் செய்து மட்டும் சாப்பிட சொல்றோம், இதுதவிர முட்டை, காய்கறிகள் அதிகமா எடுத்துக்க சொல்வோம். அரிசி, பருப்பு வகைகள், ஸ்வீட்ஸ், பேக்கரி ஐட்டம்ஸ் அறவே எடுத்துக்க தடை செய்றோம். வெஜிடேரியன்களுக்கு ஏற்ற டயட்டுகளையும் இங்கே சொல்றோம். எங்க குரூப்புல கருத்துக்களை பகிர்ந்துக்க கூட, டயட்டை முறையா பாலோ பண்ணினவங்க மட்டுமே செய்ய சொல்றோம்.

கீழே சைவ, அசைவ மக்களுக்கான டயட்டை சொல்லியிருக்கிறேன். இதனை அப்படியே எந்தவித சீட்டிங்கும் இல்லாமல் பாலோ செய்து, 15 நாள் கழித்து குளித்துவிட்டு ஆடைகள் இல்லாமல் உங்கள் எடையை செக் செய்யுங்கள். நிச்சயம் பல கிலோ குறைந்திருப்பீர்கள். இந்த டயட்டை எடுக்கும் போது தலைவலி போன்ற சில பிரச்னைகள் ஏற்படலாம். அதெல்லாம் தற்காலிகமே. ‘பேலியோ’ என்பது டயட் மட்டுமல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. டி.வி.களில் நம்மை ஏமாற்ற பல தரப்பட்ட உடலுக்கு ஒவ்வாத உணவுகளை சாப்பிட சொல்லி அறிவுறுத்துகிறார்கள். அவை எல்லாம் நம் ஆரோக்கியதுக்கு உகந்தது அல்ல. நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ, பேலியோ காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொண்டாலே உடல் பருமன் முதற்கொண்டு பல நோய்களில் இருந்து விடுபடலாம்” என்றார் பொறுமையாக.

சைவ மக்களுக்கான துவக்க நிலை டயட்:-

மீல் 1:

100 கிராம் பாதாம் அல்லது பிஸ்தா அல்லது வால்நட்ஸ் அல்லது முந்திரி

மீல் 2:

காளிபிளவர் அரிசி வித் காய்கறி. காளிபிளவரை மிக சின்ன அரிசி சைஸ் துண்டுகளாக நறுக்கி, இட்லி பாத்திரத்தில் ஸ்டீம் செய்து எடுத்து, அரிசி போல் பாவித்து குழம்பில் ஊற்றி உண்ணவும்

அல்லது காய்கறி சூப் ஏராளமாக பருகவும். உடன் சிறிது தேங்காய். வாரம் 1 நாள் 40 கிராம் கைகுத்தல்/குதிரைவாலி அரிசி எடுத்து சமைத்து உண்ணலாம். அதற்கு மேல் வேண்டாம்.

மீல் 3:

4 முட்டை ஆம்லெட் அல்லது பனிர் டிக்கா, 200 கிராம் பனிர்.

ஸ்னாக்:

1 கப் முழு கொழுப்பு உள்ள பால்/தயிர். தினம் 100 கிராம் கீரை சேர்த்துகொள்ளவும்

சமையல் எண்ணெய் நெய்/பட்டர்/செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய்/செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் மட்டுமே

தவிர்க்கவேன்டியவை

பழங்கள் (அவகாடோ, தேங்காய் தவிர்த்து)

அரிசி, கோதுமை, சிறுதானியம், ராகி, கம்பு, குதிரைவாலி, பாஸ்மதி, கைகுத்தல் அரிசி, தினை அனைத்தும்

பருப்பு, க்ரீன் பீன்ஸ், மாவு, சோயா, பேபிகார்ன், க்ரீன் பீன்ஸ், பலாக்காய், வாழைக்காய், பச்சை மாங்காய், முளைகட்டின பயறுவகைகள், கொண்டை கடலை, இன்ன பிற கடலை வகைகள், கிழங்கு வகைகள் அனைத்தும், அவரைக்காய், நிலக்கடலை, எடமாமி, டோஃபு தவிர்க்கவும்

பேக்கரியில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் தவிர்க்கவும், இனிப்பு, காரம், பேகேஜ் உணவுகள், பிஸ்கட் இன்னபிற

கொழுப்பு அகற்றிய பால், 2% பால், 1% பால் அனைத்தும் தவிர்க்கவும், முழுகொழுப்பு பாலே உட்கொள்ளவேண்டும்.

அளவு கட்டுபாடு இன்றி உண்ணக் கூடியவை

மாமிசம், மீன், முட்டை, பனிர் அல்லது சீஸ், காய்கறிகள், கீரைகள் (உருளை, கேரட், கிழங்குவகைகள் தவிர்த்து)

அசைவ டயட்:

மீல் 1:

3 முட்டை ஆம்லெட், முழு முட்டை, வெள்ளைக்கரு அல்ல, மஞ்சள் கருவும் சேர்த்து. தேவைப்பட்டால் 4 முட்டை ஆம்லெட் கூட உண்ணலாம். பிரச்னை இல்லை. பசி அடங்குவது முக்கியம். சமையல் எண்ணெய் நெய். நாட்டுகோழி முட்டை மிக சிறப்பு. முட்டையை ஸ்க்ராம்பிள், ஆஃப்பாயில், புல்பாயில் என எப்படியும் உண்ணலாம்.

மீல் 2:

100 கிராம் பாதாம் அல்லது பிஸ்தா அல்லது வால்நட்ஸ், மாகடமியா நட்ஸ். நெய்யில் வதக்கி உண்ணலாம், ஊற வைத்தும் உண்ணலாம்.

நட்ஸ் விலை அதிகம் என கருதுபவர்கள் காளிபிளவர் ரைஸ், சிக்கன்/மட்டன் சூப் சேர்க்கலாம்

மீல் 3:

பாயில் / க்ரில் செய்த சிக்கன்/மட்டன்/ மீன். அளவு கட்டுப்பாடு இல்லை. வாணலியில் வறுத்தால் சமையல் எண்ணெய்யாக நெய் பயன்படுத்தவும்

ஸ்னாக்: தினம் 1 கப் முழு கொழுப்பு உள்ள பால் அல்லது 50 கிராம் முழு கொழுப்பு உள்ள சீஸ்.
h11

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button