மருத்துவ குறிப்பு

மாரடைப்பு ஏற்பட்டவருக்கு முதலுதவி என்ன?

ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் அவருக்கு எந்த மாதிரியான முதலுதவிகளை செய்ய வேண்டும் என்பது நிறைய பேருக்கு தெரிவதில்லை.

பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள், உயிருக்கு ஆபத்தாகி விடுகிறது.

எனவே மாரடைப்புக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம். அவை எப்படி என்பதை பார்ப்போம்.

பாதிப்பு ஏற்பட்ட நபரை படுக்க வைக்கவும், அவர் இறுக்கமான உடை அணிந்திருந்தால் உடைகளைத் சற்று தளர்த்த வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு சுவாசம் இருக்கிறதா என நெஞ்சில் கை வைத்தோ, மூக்கின் துவாரத்தில் காது வைத்தோ அல்லது உள்ளங்கையில் பின்புறத்தை வைத்தோ உறுதி செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட நபர் நல்ல காற்றை சுவாசிக்க ஏதுவாக காற்றோட்டமாக விடுங்கள். அவரை சுற்றி மற்றவர்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க வேண்டும். அவருக்கு தேவையான காற்று தடையின்றி கிடைக்க வழி செய்ய வேண்டும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

சுவாசம் இருப்பது உறுதி செய்தவுடன் நாக்கின் அடியில் ஆஸ்பிரின் (Aspirin) மாத்திரையை, சோர்பிட்ரேட் (sorbitrate) மாத்திரயுடன் சேர்த்து வைத்து விடவும். இது உறைந்த இரத்தத்தை சரி செய்து இதயத்திற்கு சீராக இரத்த ஓட்டத்தை பாய்ச்சும். மேலும் உடனே தாமதிக்காமல் இதய சிறப்பு மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும்.

 

ஒருவேளை பாதிக்கப்பட்டவர் சுவாசிக்க முடியாத நிலையில் இருந்தால் அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவரின் தலையைப் பின்பக்கம் கை கொண்டு உயர்த்தி, நாடியையும் மேல்நோக்கி உயர்த்தி மூச்சுக்குழலை நேராக இருக்குமாறு செய்து பாதிக்கப்பட்டவரின் மூக்கின் இரு துவாரங்களையும் அழுத்தி மூடிக்கொண்டு, பாதிக்கப்பட்டவரின் வாயோடு உங்கள் வாயைப் பொருத்திக் மெதுவாக காற்றை உட்செலுத்து வேண்டும். இப்படியாக செயற்கை சுவாசம் தர வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button