அழகு குறிப்புகள்

சுக்கிரன் பெயர்ச்சி:இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும், வாழ்க்கை ஜொலிக்கும்

பஞ்சாங்க குறிப்புகளின் படி, சுக்கிரன் கிரகம் செப்டம்பர் 24 அன்று கன்னி ராசியில் நுழையவுள்ளார். ஜோதிடத்தில், சுக்கிரன் கிரகம், ஆடம்பரம், செல்வம், செழிப்பு, காதல் மற்றும் செழுமை ஆகியவற்றின் காரக கிரகமாக கருதப்படுகிறது. புதன் கிரகம் புத்திசாலித்தனம், தர்க்கம், புத்திக்கூர்மை, பேச்சுத்திறன் மற்றும் தகவல்தொடர்பு ஆகியவற்றிற்கு காரணமான கிரகமாக கருதப்படுகிறது. சுக்கிரன் கன்னி ராசியில் பிரவேசிக்கும் நேரத்தில் புதன் மற்றும் சூரியனும் இந்த ராசியில் இருப்பார்கள்.

கன்னி ராசியில் சுக்கிரன், புதன், சூரியன் ஆகிய கிரகங்கள் இணைந்து இருப்பது கிரகங்களின் ஒரு சிறப்பான நிலையை உருவாக்கும். கிரகபங்களின் இந்த சிறப்பு நிலை அனைத்து 12 ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்தும். சுக்கிரனின் சஞ்சாரத்தால், இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை பணம், மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் காதல் நிறைந்ததாக இருக்கும்.

சுக்கிரன் பெயர்ச்சியின் விளைவு:

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் அதிகப்படியான பலன்களை அளிக்கும். இக்காலத்தில் சுக்கிரனின் செல்வாக்கினால் ரிஷப ராசிக்காரர்களுக்கு பணமும் மரியாதையும் கிடைக்கும். இவர்களின் வாழ்வில் எந்த பிரச்சனை இருந்தாலும், அவை அனைத்தும் அகன்று நிம்மதி கிடைக்கப் போகிறது. பல இடங்களிலிருந்து பண ஆதாயம் கிடைக்கும். இந்த காலத்தில் ரிஷப ராசிக்காரர்களின் நிதி நிலை முன்பை விட வலுவாக இருக்கும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் திரும்பக் கிடைக்கும். சமூகத்தில் அவர்களின் மதிப்பும் செல்வாக்கும் அதிகரிக்கும்.

மிதுனம்:

சுக்கிரனின் சஞ்சாரம் மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பான பண ஆதாயத்தை உண்டாக்கும். சொந்த தொழில் செய்யும் மிதுன ராசிக்காரர்களுக்கு வியாபாரம் அதிகரிக்கும். பெரும் லாபம் ஈட்டுவார்கள். நல்ல பண ஆதாயம் உண்டாகும். இந்த காலத்தில் வாகனம் மற்றும் சொத்து வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பச் சூழல் இனிமையாகவும், சுகமாகவும், நிம்மதியாகவும் இருக்கும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் முதலீட்டுக்கு மிகவும் நல்லது. முதலீடு செய்யும் எண்ணம் இருந்தால், இந்த காலத்தில் செய்யலாம். இப்போது செய்யும் முதலீட்டால், எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பழைய முதலீடுகளும் பெரிய லாபம் தரும். வியாபாரம் பெருகும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். ஆன்மீக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

zeenews

Related posts

சருமத்தைப் பாதுகாப்பதுப் எப்படி?…..

sangika

மாமியாரை நிர்வாணமாக வீடியோ எடுத்து அசிங்கம் செய்த மருமகள்..கல்லூரி தோழனுடன் உல்லாசம்..

nathan

வெளியிட்ட புதிய ப்ரோமோ! பிக் பாஸ் 4’

nathan

இந்த ஐந்து ராசிகளை சேர்ந்த பெண்கள் வலிமையான மற்றும் அன்பான சகோதரிகளாக இருப்பார்கள்…

nathan

உடலில் பருவால் உண்டான தழும்பை போக்கும் வழிகள்

nathan

தோல் பளபளப்பாக!

nathan

சருமத்துக்கு மிருதுத்தன்மையைக் கொடுக்க இதோ சில வழிகள்! ….

sangika

அழகான கூந்தலுக்கு biotin உணவுகள்

nathan

இரவு படுக்கைக்குச் செல்லும்முன் இருபது நிமிடங்கள் இதற்கு ஒதுக்கினாலே போதுமானது!…தெரிந்துகொள்வோமா?

nathan