Other News

உடலை 12 துண்டுகளாக வெட்டி.. கள்ளகாதலியின் கொடூரம்…

கோவையில் உலுக்கிய கொலை சம்பவத்தில் கள்ளக்காதலி உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலைய பகுதியில் கடந்த 15ஆம் தேதி குப்பைத் தொட்டியில் இரண்டு துண்டுகள் ஆக்கப்பட்ட ஆணின் இடது கை கிடந்ததை அறிந்த குப்பை வண்டியின் ஓட்டுனர் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் துடியலூர் போலீசார் 174 சந்தேக மரண வழக்கு பதிவு செய்து சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து எட்டு தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள 250 கேமராக்களை ஆய்வு செய்து 150 தொழிற் கூடங்களிலும், 15 மருத்துவமனைகளிலும் சோதனைகள் மேற்கொண்டனர்.

காவல்துறையினருக்கு கிடைத்த தகவலில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் பிரபு என்பவர் கடந்த 14ஆம் தேதி முதல் காணவில்லை எனவும் இது தொடர்பாக 18ஆம் தேதி கோவை மாநகர காவல் துறையில் உள்ள காட்டூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்திருப்பது தெரிய வந்தது. பிரபுவின் வீட்டுக்கு சென்று ஆய்வு எடுக்கப்பட்ட 7 கைரேகைகளில் இரண்டு கைரேகைகள் துடியலூரில் கிடைத்த கையின் கைரேகையுடன் ஒத்துப்போனது.

தொடர்ந்து பிரபு தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் பிரபு என்பவர் காந்திபுரம் பகுதியில் அழகு நிலையத்தில் வேலை செய்து வந்ததாகவும் அவர் குடியிருந்து வந்த பகுதியில் வசிக்கும் 39 வயதுடைய திருமணமான பெண்ணுடன் பழக்கம் இருந்ததாகவும் அதனால் ஏற்பட்ட முன்விரோதத்தின் காரணமாக பெண்ணின் நண்பர்கள் அமுல், திவாகர், கார்த்திக், ஆகியோர் பிரபுவை காந்திமா நகரில் உள்ள வீட்டில் வைத்து கொலை செய்து பிரபுவின் உடலை 12 பாகங்களாக வெட்டி தனித்தனியாக பல்வேறு இடங்களில் வீசி சென்றுள்ளனர்.

கைது செய்யப்பட்ட திவாகர்

இதைத் தொடர்ந்து இந்த கொலை வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது; 8 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கண்டுபிடித்துள்ளோம்.

 

சினிமா பாணியை விட தலையை கண்டுபிடிக்கும் முன்பே கையை வைத்தே கொலையானவரை அடையாளம் கண்டோம். காணாமல் போனவர்களின் தகவல்களை எடுத்து கைரேகைகளை சேகரித்து இறந்தவர் விவரங்களை தேடினோம்.

காட்டூர் காவல் நிலையத்தில் மிஸ்ஸிங் புகாரில் வந்த பிரபுவின் விவரம் மற்றும் அவரின் கைரேகையை அவரது வீட்டில் இருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்ததை சேகரித்து மர்மமாக கிடைத்த கையை வைத்து இறந்தவர் பிரபு என்பதை உறுதிப்படுத்தினோம். பிரபு வீட்டிற்கு இரண்டு பேர் வந்து அழைத்துச் சென்றனர். அதன் சிசிடிவி இருந்தது.

அதை வைத்து விசாரணையை தீவிர படுத்தினோம்.அதேபோல பிரபுவின் செல்போன் உரையாடலை வைத்து குற்றவாளிகளை தேடினோம். அப்போது, கவிதா, திவாகர் ஆகியோரது செல்போன் ஒரே நேரத்தில் காந்திமாநகரில் ஸ்விட்ச் ஆப் ஆனது. அதை தொடர்ந்து அவர் மீது எழுந்த சந்தேகத்தில் கைது செய்தோம். இறந்தவரின் 8 உறுப்புகளை கண்டெடுத்துள்ளோம். காவல்துறை சோதனை பகுதியை பார்த்து குற்றவாளிகள் கையை குப்பைத்தொட்டியில் வீசி சென்றுள்ளனர். ஆகவே சோதனை என்பது காவல்துறைக்கு முக்கியமானதாக உள்ளது.

கவிதாக்கு பிரபுவுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. காந்திமாநகரில் உள்ள வீட்டில் வைத்து கொலை நடைபெற்றுள்ளது. கவிதாவின் புகைப்படத்தை வைத்து பிரபு மிரட்டியதால் கொலை நடந்திருப்பது தெரிய வந்தது. ஒரு வாரமாக திட்டம் தீட்டி கொலை நடைபெற்றது. தலை திருப்பூர் அருகே உள்ள கிணற்றில் இருந்தது. கள்ளத்தொடர்பே கொலைக்கு காரணம். இந்த சம்பவத்தில் மூன்று பேருமே கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறை தலைவர் சுதாகர் தெரிவித்தார்.

இந்நிலையில் கைதான கவிதா, அமுல் திவாகர் , கார்த்திக் ஆகிய மூன்று பேரும் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இவர்களை விசாரித்த நீதிபதி கோபாலகிருஷ்ணன் மூன்று பேருக்கும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.-News & image Credit: tamil.samayam

Related posts

இந்த 5 எழுத்துக்களில் உங்கள் மனைவியின் பெயர் தொடங்கினால் நீங்க ரொம்ப அதிர்ஷ்சாலியாம் -அப்படி என்ன ஸ்பெஷல்?

nathan

கண்ணீர் விட்டு கதறிய மனைவி! வடிவேல் பாலாஜியின் இறுதி நிமிடங்கள்:

nathan

நித்யாமேனன்-தனுஷ் லீக் வீடியோ! வெளிவந்த ரகசியம்!

nathan

யாஷிகாவின் காரசார லேட்டஸ்ட் போட்டோஷூட் ..

nathan

இந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் ஆபத்தான எதிரிகளாக இருப்பார்களாம்… தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

மறைந்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் வெஇயிட்ட புகைப்படம்..

nathan

உங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றி தானாம்-தெரிஞ்சிக்கங்க…உங்களது பிறந்த திகதி இதுவா?

nathan

‘ரஷியத் தாக்குதலுக்கு நேட்டோ பச்சைக்கொடி காட்டுகிறது’

nathan

மகள் விளையாடும் அழகை கடைசி வரிசையில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் விஐய் – நீங்களே பாருங்க.!

nathan