ஆரோக்கிய உணவு

இந்த காய்கறிகளை பச்சையாக சாப்பிடாதீங்க! பாரிய பிரச்சினையை சந்திப்பீங்க

பொதுவாக காய்கறிகளை அளவுக்கு அதிகமாக சமைத்து சாப்பிடக்கூடாது, அப்படி சமைத்தால் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அழிந்துவிடும் என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள்.

இதனால் உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை காட்டும் பலர் காய்கறிகளை பச்சையாக சாப்பிடுகிறார்கள்.

ஆனால் அனைத்து காய்கறிகளையும் பச்சையாக சாப்பிடுவது நல்லதல்ல என்பது தெரியுமா? குறிப்பாக சில காய்கறிகள் சமைத்து சாப்பிடும் போது தான் மிகவும் சத்தானவை.

சில காய்கறிகளை பச்சையாக சாப்பிடும் போது, அது செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மேலும் உடலில் புழுக்கள் வர வாய்ப்புள்ளது.

உணவுகளை சமைத்து அல்லது சூடாக சாப்பிடும் போது செரிமானம் எளிதாக நடக்கும் மற்றும் புழுக்கள் அழிக்கப்படும். சிலர் ஏற்கனவே செரிமான பிரச்சனையால் அவதிப்பட்டு கொண்டிருப்பார்கள். அத்தகையவர்கள் சில காய்கறிகளை பச்சையாக சாப்பிடக்கூடாது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

இல்லாவிட்டால், அது நிலைமையை மோசமாக்கிவிடும். இப்போது பச்சையாக சாப்பிடக்கூடாத அந்த காய்கறிகள் எவையென்பதைக் காண்போம்.

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை எப்போதும் வேக வைத்தோ அல்லது வேறு ஏதேனும் சமையல் முறையிலோ சமைத்து தான் சாப்பிட வேண்டும். பச்சையாக மட்டும் சாப்பிடக்கூடாது.

ஏனெனில் உருளைக்கிழங்கில் செரிமானத்தை இடையூறு செய்யும் மாவுச்சத்து உள்ளது. எனவே சமைக்கும் போது உருளைக்கிழங்கில் உள்ள மாவுச்சத்து உடைக்கப்பட்டு எளிதில் செரிமானமாகிறது.

பச்சையாக சாப்பிடடால் வயிற்று உப்புசம் மற்றும் இரைப்பை குடல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

மறந்தும் இந்த காய்கறிகளை பச்சையாக சாப்பிடாதீங்க! பாரிய பிரச்சினையை சந்திப்பீங்க | Raw Vegetable Eating Avoid Health Danger

அஸ்பாரகஸ்
அஸ்பாரகஸில் என்ன தான் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருட்கள் அதிகம் இருந்தாலும், இதை பச்சையாக சாப்பிடக்கூடாது.

பச்சையாக சாப்பிட்டால் தீங்கு ஏதும் நேராது. இருப்பினும், சமைத்து சாப்பிடுவது தான் நல்லது.

ஏனெனில் அஸ்பாரகஸை சமைத்து சாப்பிடும் போது, அதில் உள்ள சத்துக்கள் எளிதில் உடலால் உறிஞ்சப்படுகிறது.

காளான்கள்
காளான்கள் ஆரோக்கியமானவை என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், காளானை பச்சையாக சாப்பிட்டால், அது செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

சில வகையான காளான்களை பச்சையாக சாப்பிட்டால், அது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மோசமாக பாதிக்கும். சமைப்பதன் மூலம், அதில் உள்ள தீங்கு விளைவிக்கும் பொருட்கள் உடைத்தெறியப்படுகிறது.

மறந்தும் இந்த காய்கறிகளை பச்சையாக சாப்பிடாதீங்க! பாரிய பிரச்சினையை சந்திப்பீங்க | Raw Vegetable Eating Avoid Health Danger

கத்திரிக்காய்
கத்திரிக்காயை பச்சையாக சாப்பிடக்கூடாது. ஏனெனில் இதில் பாதுகாப்பற்ற பொருளான சோலனைன் உள்ளது. பெரும்பாலும் இந்த சோலனைன் ஆரம்பத்தில் அறுவடை செய்த கத்திரிக்காயில் அதிகளவில் இருக்கும்.

பச்சையாக கத்திரிக்காயை சாப்பிடும் போது, அது இரைப்பை குடல் பிரச்சனைகள் மற்றும் சோலனைன்பாய்சனிங்கை ஏற்படுத்தலாம். இதைத் தவிர்க்க, கத்திரிக்காயை பச்சையாக சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.

மறந்தும் இந்த காய்கறிகளை பச்சையாக சாப்பிடாதீங்க! பாரிய பிரச்சினையை சந்திப்பீங்க | Raw Vegetable Eating Avoid Health Danger

காலிஃப்ளவர் மற்றும் ப்ராக்கோலி
காலிஃப்ளவர் மற்றும் ப்ராக்கோலி போன்ற காய்கறிகள் அடிப்படையாகவே செரிமான மண்டலத்தால் ஜீரணிப்பதற்கு கடினமாக இருக்கலாம்.

அதுவும் இவற்றை பச்சையாக சாப்பிடும் போது, அதில் உள்ள ஆக்ஸலேட்டுகள் சிறுநீரக கற்களை உருவாக்குவதோடு, அதிகளவில் உண்ணும் போது அது இரும்புச்சத்து மற்றும் கால்சியம் உறிஞ்சுவதைத் தடுக்கிறது. எனவே இவற்றை பச்சையாக உண்ணாதீர்கள்.

பசலைக்கீரை
பசலைக்கீரையை பலரும் சாலட்டுகளில் சேர்த்து சாப்பிடுவதுண்டு. பசலைக்கீரையை பச்சையாக சாப்பிடுவது பாதுகாப்பற்றது அல்ல.

இருப்பினும், பசலைக்கீரையை சமைத்து சாப்பிடுவதனால் அதில் உள்ள இரும்புச்சத்து மற்றும் மக்னீசியம் போன்றவை உடலுக்கு எளிதில் கிடைக்கும்.

எனவே இந்த கீரையின் முழு சத்தையும் பெற விரும்பினால், பச்சையாக சாப்பிடாமல் சமைத்து சாப்பிடுங்கள்.

மறந்தும் இந்த காய்கறிகளை பச்சையாக சாப்பிடாதீங்க! பாரிய பிரச்சினையை சந்திப்பீங்க | Raw Vegetable Eating Avoid Health Danger

முட்டைக்கோஸ்
பலருக்கு முட்டைக்கோஸை பச்சையாக சாப்பிடப் பிடிக்கும். ஆனால் முட்டைக்கோஸை பச்சையாக சாப்பிட்டால், அது தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்தும். எனவே முட்டைக்கோஸை சமைத்து சாப்பிடுங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button