கர்ப்பிணி பெண்களுக்கு

குறைப்பிரசவத்தை தடுக்க மருத்துவ கண்காணிப்பு அவசியம்

பொதுவாகஒரு தாயின் வயிற்றில் வளரும் குழந்தை முதல் கட்ட வளர்ச்சியடைய 37 வாரங்கள் தேவைப்படுகிறது. அதற்கு முன்பு பிறக்கும் குழந்தைகள் குறைப்பிரசவ குழந்தைகளாகும். 18 வயதிற்கு குறைவான, 35 வயதிற்கு மேலான கர்ப்பிணிகளுக்கும், மேலும் வேலைக்கு செல்வது, கர்ப்பகால செக்ஸ், நீண்ட தூர பயணம், அதிக எடை தூக்குவது, மாடிப்படி ஏறி இறங்குவது, உடல் இயக்கம் இல்லாமல் படுத்திருப்பது ஆகியவையும் குறைப்பிரசவத்திற்கு காரணமாகிறது.

இதில், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தைராய்டு பாதிப்புள்ள கர்ப்பிணிகளுக்கும், சத்துணவு குறைபாடு உள்ளவர்களுக்கும் குறைப்பிரசவம் ஏற்படும் வாய்ப்பு அதிகம். சர்க்கரை நோய், ரத்தகொதிப்பு, தைராய்டு பாதிப்புள்ள கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் உணவு கட்டுப்பாடு, மருத்துவ பராமரிப்புடன் மருந்துகளை சாப்பிட்டு சர்க்கரையை கட்டுக்குள் வைக்க வேண்டும். கர்ப்ப கால தொடக்கம் முதல் மருத்துவ குழுவின் ஆலோசனைகளை பெற்று பின்பற்றினால் குறைப்பிரசவத்தை தடுத்து ஆரோக்கிய குழந்தைகளை பெறலாம்.

இல்லாவிட்டால் இத்தகைய பாதிப்புள்ளவர்களின் கர்ப்பப்பையில் வளரும் சிசுவிற்கு தேவையான சத்துக்கள் செல்வது பாதிக்கப்படும், வளர்ச்சி குன்றி ஊனமாகும் வாய்ப்புள்ளது அல்லது சிசு இறக்க நேரிடும், அது தாயையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. இத்தகைய தன்மை கொண்ட கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தின்போதே அடிக்கடி ஸ்கேன் பார்த்து, கர்ப்பப்பையில் சிசுவின் நிலையை கண்டறிய வேண்டும். சிசுவின் வளர்ச்சியில் குறைபாடு கண்டறியப்பட்டவுடன் உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் சிசுவை வெளியே எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அது தாய்க்கும், சிசுவிற்கும் பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தும்.

இவ்வாறு அறுவை சிகிச்சை மூலம் குறைப்பிரசவத்திற்கு ஆளாகும் சிசு ஒரு கிலோவிற்கும் குறைவான எடை இருக்கலாம். குறைப்பிரசவ சிசுவிற்கு நுரையீரல் முழு வளர்ச்சி அடைந்திருக்காது. சுவாசிக்க முடியாமல் திணறும். அதி நவீன வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் கொடுத்து காப்பாற்ற வேண்டும். அதுபோல் சூடு, குளிர் போன்ற சீதோஷ்ண நிலைகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும். அதற்கேற்றவாறு மருத்துவமனையில் சிறப்பு கருவிகள் மூலம் பராமரிக்க வேண்டும். இத்தகைய சிசுவிற்கு பால் குடிக்கும் திறன் இருக்காது. செயற்கை முறையில் குளுகோஸ், பால் போன்றவை சிசுவின் வளர்ச்சிக்கேற்ப டிரிப் மூலம் செலுத்த வேண்டும்.

மேலும் இந்த குழந்தைகளுக்கு பல்வேறு நோய் தாக்குதல் ஏற்படும் வாய்ப்புள்ளதால் மருத்துவ குழுவினரின் கண்காணிப்பு தேவை. இத்தகைய சிசுக்களுக்கு குறைப்பிரசவ அபாயங்களை நீக்கி, சிசு இயல்பான வளர்ச்சியை எட்டும் வரை மருத்துவ குழுவினர் பராமரித்த பின்னர் தாயிடம் ஒப்படைப்பார்கள் என்கிறார்கள் சிசு நல மருத்துவர்கள்.

Related posts

கர்ப்ப காலத்தில் அணிய வேண்டிய மார்பக உள்ளாடை

nathan

தெரிஞ்சிக்கங்க… கர்ப்பகாலத்தில் பெண்கள் கொய்யாப் பழம் சாப்பிடலாமா ?

nathan

கர்ப்பம் அடைந்த முதல் 3 மாதங்களில் தாம்பத்தியத்திற்கு லீவு விடுங்க

nathan

கர்ப்ப காலத்தில் ஏற்படும் ரத்தசோகை சிசுவை பாதிக்குமா?

nathan

இன்று சுகப்பிரசவங்கள் குறைந்துவிட்டதற்கான காரணங்கள்

nathan

குங்குமப் பூ பெருத்த முக்கியத்துவத்தினைப் பெறுகின்றது…..

sangika

மசக்கையை சமாளிக்க முடியாமல் அவதியா?

nathan

பிறந்த குழந்தையைப் பற்றிய சில சுவாரசியமான உண்மைகள் -தெரிந்துகொள்வோமா?

nathan

கர்ப்­ப­கா­லத்தில் ஏற்­படும் உயர்­கு­ரு­தி­ய­முக்கம்

nathan