அலங்காரம்கண்களுக்கு அலங்காரம்

கண்களுக்கு மேக்கப்

கண்ணைக் கவரும் கண்களைப் பெற எளிதான சில விஷயங்களை செய்தாலே போதும். பலரும் முகத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை கண்களுக்குக் கொடுப்பதில்லை. சிலருக்கு நமது கண்ணுக்கு எந்த விதமான மேக்கப்பை போட வேண்டும் என்று தெரிவதில்லை.

அதுபோன்றவர்களுக்கு சில குறிப்புகள்…

கண்களின் அழகை அதிகரிக்க முக்கியமான சில விஷயங்கள் தேவை. அதாவது, ஐ ஷேடோ, ஐ லைனர், மஸ்கரா போன்றவை.aqua-blue-eye-makeup

மேக்கப் போட ஆரம்பிக்கும் முன் முகத்தை சுத்தம் செய்யுங்கள். ஏற்கனவே கண்களில் போட்ட மேக்கப் பொருட்களை முழுமையாக அகற்றுங்கள். அதற்கு ஈரமான தண்ணீரில் அல்லது லோஷனில் நனைத்த பஞ்சினை பயன்படுத்தலாம்.

மாய்சுரைசரை உங்கள் கண்களைச் சுற்றி தடவுங்கள். ஆனால், இமைகளின் மீது தடவ வேண்டாம். அவ்வாறு தடவி விட்டால், இமை மீது போடும் ஐ ஷேடோக்கள் வழிய வாய்ப்பு ஏற்பட்டு விடும்.

ஒரு வேளை கருவளையம் இருந்தால் கரு வளையத்தை மறைக்கும் வகையில் கன்சீலர் பயன்படுத்தலாம். கன்சீலரை உங்கள் சருமத்துக்கு பொருந்துகிறதா என்பதை பரிசோதித்து வாங்க வேண்டியது அவசியம்.

கன்சீலரை போட்டு அதன்மேல், நீங்கள் பயன்படுத்தும் பவுடரை லேசாக தடவுங்கள்.

பிறகு, கண் இமையின் மீது, ஐ ஷேடோவை உங்கள் ஆடையின் அல்லது லிப்ஸ்டிக் நிறத்துக்கு இல்லையென்றால் பொதுவாக பிரவுன் நிறத்தில் போடலாம். சிலர் இரண்டு நிறங்களை கலந்து ஐ ஷேடோவாகப் பயன்படுத்துவார்கள். இதுவும் இயற்கையான நிறத்தை ஏற்படுத்தும். அவ்வாறு செய்யும் போது, கை விரல்களைக் கொண்டு ஐ ஷேடோ போடலாம். இதனால் உங்களுக்கு விருப்பமான இடத்தில் மட்டும் போடுவதற்கு வசதியாக இருக்கும்.

இப்போது தான் மிக முக்கியமானதான ஐ லைனரை போட வேண்டும். ஐ லைனர் போடுவது கண்களின் அழகை இரு மடங்காக்கும். எனவே, விலை குறைந்த மலிவான ஐ லைனரை விட, சற்று தரமான ஐ லைனரை பயன்படுத்துவது நல்லது. இதனால், விரைவாக கலைவது, வியர்வையில் கரைவது போன்றவற்றை தவிர்க்கலாம்.

ஒரு இமையை மூடி இமை முடிகளை கைகளால் முகத்தில் அழுத்தி பிடித்துக் கொண்டு ஐ லைனரை போடலாம். இதனால், இமை அசைந்து ஐ லைனர் கோணலாகும் வாய்ப்பு தவிர்க்கப்படும். பிறகு, கீழ் இமைகளுக்கு ஐ லைனரை போடவும்.

மஸ்கரா, இது கண்களுக்கான இறுதி கட்ட மேக்கப் ஆகும். கண் இமைகளை நன்கு சுறுட்டி விட்டு மஸ்கரா போட வேண்டும். மேலும், கண்களை நன்கு திறந்தபடியும் அல்லாமல், மூடியபடியும் அல்லாமல், பாதி திறந்த நிலையில் மஸ்கரா போட்டு சிறிது நேரம் கண்களை இமைக்காமல் வைக்க வேண்டும். அவசரப்பட்டு இமைத்துவிட்டால், மஸ்கரா கண் இமைக்கு மேல் ஒட்டிக் கொள்ள வாய்ப்பு உண்டு.

சிலர், கண்களின் இறுதியில் ஐ லைனரைக் கொண்டு நீட்டி விடுவார்கள். இதுவும் சிலருக்கு அழகாக இருக்கும். புடவை போன்ற கலாச்சார உடைகளை அணியும் போது அவ்வாறு செய்யலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button