மருத்துவ குறிப்பு

பசியின்மையை நீங்கும் இலந்தை

மூலிகையின் பெயர் :- இலந்தை.
தாவரப்பெயர் :- ZIZYPHUS JUJUBA.

இலந்தை இலை தசை,நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும். வேர், பட்டை பசித் தூண்டியாகவும், பழம் சளி நீக்க, மலமிளக்கு, பசித்தீயை மிகுக்கக் கூடியதாகவும் பயன்படுகிறது. இது இரத்த சுத்திக்கும், முதுகுவலி, இருதயநோய், ஆஸ்த்துமா, கழுத்து நோய், கண் தெரிய, இரத்த அழுத்தத்தைக் குறைக்க, தலைவலி, மன உழைச்சலைப் போக்க, எந்த வலியையும் போக்கவும் வல்லது.

இதை டீ யாக சைனா, கொரியா, வியட்னாம், ஐப்பான் ஆகிய நாடுகளில் பயன்படுத்துகிறார்கள். இதை ஊறுகாயாக மேற்கு வங்காளம் மற்றும் பங்களாதேஸ்சில் பயன்படுத்துகிறார்கள். தமிழ் நாட்டில் இதன் பழத்துடன் புளி, மிளகாய் வற்றல், உப்பு, வெல்லம் ஆகியவை சேர்த்து நன்கு இடித்து வெய்யிலில் காயவைத்து இலந்தை வடையாகப் பயன்படுத்துகிறார்கள்.

இலந்தை இலை 1 பிடி, மிளகு 6, பூண்டுப் பல் 4 அரைத்து மாதவிலக்கான முதல் 2 நாட்கள் கொடுத்து வரக் கருப்பை குற்றங்கள் நீங்கிப் புத்திர பாக்கியம் கிட்டும். இலந்தைப் பட்டை 40 கிராம், மாதுளம் பட்டை 40 கிராம் சிதைத்து, அரை லிட்டர் நீரில்போட்டுக் கொதிக்க வைத்து 125 மி. லி. யாக்கி 4 வேளை தினம் குடித்து வர நாள்பட்ட பெரும்பாடு நீங்கும்.

இலந்தை வேர்பட்டை சூரணம் 4 சிட்டிகை இரவில் வெந்நீரில் கொள்ளப் பசியின்மை நீங்கும். துளிர் இலையையாவது பட்டையையாவது 5 கிராம் நெகிழ அரைத்துத் தயிரில் காலை மாலையாகக் கொடுக்க வயிற்றுக் கடுப்பு, இரத்தப்பேதி தீரும்.
5519a955 a495 432b b436 0d7a27ef185f S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button