அழகு குறிப்புகள்

உல்லாசத்திற்கு அழைத்த முன்னாள் அமைச்சர் : ஸ்வப்னா சுரேஷ்

ஜூலை 2020 இல், கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலையத்தில் 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னாள் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ் மற்றும் கேரள முதல்வர் அப்போதைய தலைமைச் செயலாளர் பினராய் விஜயன் சிவசங்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ.விசாரணை நடத்தி வரும் நிலையில், , கேரள முதல்வர் பினராய் விஜயன், அவரது மகள் வினா, அதிகாரி ஐ.ஏ.எஸ்.சிவசங்கர், முன்னாள் அமைச்சர் ஜலீல் என பல முக்கிய பிரமுகர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.

மேலும் கேரளாவில் மீண்டும் பினராயி விஜயன் அரசு வர வேண்டும் என்பதற்காகத்தான் தங்கக் கடத்தல் விவகாரத்தில் அரசுக்கோ, அரசு சார்ந்தவர்களுக்கோ எந்த தொடர்பும் இல்லை என்று சிறையில் இருந்தபடி வெளியிட்ட ஆடியோவில் தெரிவித்திருந்தேன். இடதுசாரி முன்னணி ஆட்சிக்கு வந்தால் தான், வழக்கில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் கூறி என்னை நம்ப வைத்து அந்த ஆடியோவை பதிவு செய்தார்கள்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

முதலமைச்சரின் முன்னாள் முதன்மை செயலாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சிவசங்கர் சென்னையில் உள்ள ஒரு கோவிலில் வைத்து எனக்கு தாலி கட்டி 2-வதாக திருமணம் செய்து கொண்டார். அப்போது ஒருபோதும் உன்னை கைவிட மாட்டேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார். நான் யாருக்கு எதிராகவும் பாலியல் புகார் கூற விரும்பவில்லை.

ஆனால் முன்னாள் மந்திரியும், கேரள சட்டசபையில் முக்கிய நபருமாக இருந்த ஒருவர் என்னை உல்லாசத்திற்கு ஓட்டலுக்கு வருமாறு பலமுறை அழைத்து உள்ளார். ஆனால் அதற்கு நான் உடன்படவில்லை. இது தொடர்பாக அவர் எனக்கு பலமுறை அனுப்பிய வாட்ஸ் ஆப் தகவல்கள் இப்போதும் என்னிடம் பத்திரமாக உள்ளன. அதை நான் விசாரணை அதிகாரிகளிடம் ஏற்கனவே கொடுத்துவிட்டேன் என கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button