எடை குறைய

பழங்கள்-காய்கறி சாப்பிட்டால் உடல் எடை குறையும்! ஆய்வில் தகவல்

உலகில் அமெரிக்கா, சீனா, உள்ளிட்ட பல நாடுகளில் உடல் எடை பருமனான நபர்கள் அதிக அளவில் உள்ளனர். அவற்றில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. எனவே உடல் எடையை குறைத்து ஆரோக்கியமாக வாழ்வதற்காக ஹார்வர்டு பல்கலைக்கழகம் சமீபத்தில் ஆய்வு நடத்தியது.

மொத்தம் 1 லட்சத்து 24 ஆயிரத்து 86 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. அவர்களில் ஆண்களும், பெண்களும் அடங்குவர்.

அவர்களில் உடல் எடை குறைந்தவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அவர்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் சாப்பிடுவதாக தெரிவித்தனர்.

கடந்த 24 ஆண்டுகளாக தொடர்ந்து அவற்றை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதாக கூறினர்.

பொதுவாக பிளவனாய்ட்ஸ் எனப்படும் வேதிப் பொருள் பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிக அளவில் உள்ளன. அவை உடலுக்கு தேவையான ‘கலோரி’யை வழங்குகிறது. அதனால் உடல் எடையை சீராக வைக்க அவை உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆப்பிள், பேரிக்காய், ஸ்ட்ராபெர்ரி, முள்ளங்கி, சிவப்பு மிளகு, புளூ பெர்ரி உள்ளிட்ட பழம் மற்றும் காய்கறிகளில் அதிக அளவில் பிளவனாய்ட்ஸ் உள்ளது. எனவே அவற்றை உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொண்டு நல்ல சத்தான சீரான உடல் எடையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
fruit136

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button