மருத்துவ குறிப்பு

எப்படியெல்லாம் நெல்லிக்காயைப் பயன்படுத்தலாம்

நெல்லிக்காயை காயல்கனி என்பார்கள். காலங்களில் சிறந்தது வசந்தகாலம். இந்த வசந்த காலத்தில் நெல்லிகாய் எல்லா இடங்களிலும் கிடைக்கும். மிகுந்த மருத்துவ குணங்களைக் கொண்ட இந்த நெல்லிகாயை நிறைய பயன்படுத்தினால் நலமாய் வாழலாம். நெல்லிக்காயில் வைட்டமின் சி 100 கிராமிற்கு 600 கிராம் நிறைந்துள்ளது. சி வைட்டமின் நம் உடலில் குறைவதால் தோல் நோய்கள் ஏற்படுகின்றன. அடிக்கடி சிலருக்கு ஜலதோசம் பிடிக்கும். இதுவும் வைட்டமின் சி குறைவினால் தான் ஏற்படுகிறது.

இது தவிர புரதம் கொழுப்பு சுண்ணாம்புசத்து பாஸ்பரஸ், மாவுசத்து நார்ச்சத்து வைட்டமின் ஏ போன்ற சத்துகளும் உண்டு. நெல்லி உடலுக்கு குளிர்ச்சி தரும். இதை உண்பதால் சிறுநீர் தாரளமாக பிரியும். கர்ப்பபை கோளாறகள் நீங்கும். இரத்தம் தூய்மை அடையும். இக்காயின் இன்னும் ஒரு சிறப்பு காயை உலர்த்தினாலும், வேகவைத்தாலும் குளிர வைத்தாலும் அதிலுள்ள வைட்டமின் சி குறையாது.

எப்படியெல்லாம் நெல்லிகாயை பயன்படுத்தலாம்.
வாங்கியவுடன் தண்ணீர் விட்டு சுத்தம் செய்யவும். ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவுக்கு மேலாக தண்ணீர் விட்டு வேகவிடவும். தேவையான கல் உப்பும் சிறிது மஞ்சள் தூளும் போடவும் 5 அல்லது 10 நிமிடத்திற்குள் ஒரு காயை எடுத்து அழுத்திப் பார்த்தால் அழகாக உடையும் உடனே இறக்கி வைத்து ஆறிய பிறகு பாட்டிலில் நீரோடு எடுத்து வைக்கவும். இதை சாம்பார் சாதம், ரசம் சாதம் என்று எல்லாவற்றிற்கும் தொட்டு கொள்ளலாம்.

தேவையான வெந்த நெல்லிகாயை எடுத்து உடைத்து விதை நீக்கி ஊறுகாய் போடலாம். தேங்காய் பச்சை மிளகாய் வெந்த நெல்லிகாய் சேர்த்து அரைத்து புளிக்காத தயிரில் சேர்த்து உப்பு பச்சடி செய்யலாம். பச்சை நெல்லிகாயை துண்டுகளாக்கி அரைத்து சாறு எடுத்து கொண்டு பருப்பு ரசம் மிளகு ரசம் இவைகளில் சேர்க்கலாம். புளியை குறைவாக சேர்த்து கொள்ள வேண்டும்.

நெல்லிகாயை உப்பு எதுவும் போடாமல் வேக வைத்து விதை நீக்கி நன்கு மசித்துக்கொள்ள வேண்டும். ஒரு கிலோ நெல்லிகாய் என்றால் அரைக்கிலோ சர்க்கரையை சேர்த்து அடுப்பில் வைத்து கிளற வேண்டும். சிறிது சிட்ரிக் அமிலம் சேர்த்து லேகியம் போல் வரும்போது இறக்கி வெண்ணிலா எசன்ஸ் அல்லது ரோஸ் மில்க் எஸன்ஸ், ஸ்ட்ராபெர்ரி ஏதாவது ஒன்றை அரை தேக்கரண்டி சேர்த்து சூடு ஆறியதும் காற்றுப்புகாத பாட்டிலில் எடுத்து வைக்கவும். சப்பாத்தி, பிரட் தோசை, இட்லி போன்ற அனைத்திற்கும் தொட்டு கொள்ளலாம். கொளுத்தும் வெயிலுக்கு நம் உடம்பிற்கு ரொம்ப நல்லது.

நெல்லிகாயை நிறைய வாங்கி வெயிலில் காய வைத்து எடுத்து வைக்கலாம். இதை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி வைத்து கொண்டு தினமும் சிறிது தலையில் தடவி வந்தால் கண்களுக்கு குளிர்ச்சி தரும். முளைச்சூடு குறையும். கூந்தல் கரு கரு வென செழித்து வளரும். முடிகளை வலுவாக்கும் பொடுகும் வராது.

இதயக்கனி ஆரோக்கிய கனி என்று அழைக்கப்படும் நெல்லிகனியை நாம் தினமும் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.
ht1689

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button