மேக்கப்

நீள்வட்ட முகத்திற்கான அருமையான சில மேக்கப் டிப்ஸ்!!

பெண்கள் என்றாலே ‘டக்’கென்று மனதில் தோன்றுவது – அழகு! அழகென்றாலே பெண்களுக்கு ‘சட்’டென்று நினைவிற்கு வருவது – மேக்கப்! எந்த வயதிலும் இந்த மேக்கப் இல்லாமல் வீட்டை விட்டுக் கிளம்பும் பெண்களைப் பார்ப்பது அரிது. பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதும் ஒரு கலை தான். அதிலும் தங்கள் முகத்தில் உள்ள ஒவ்வொரு பாகத்தையும் பார்த்துப் பார்த்து மெருகேற்றிக் கொள்வதில் பெண்களை மிஞ்சவே முடியாது.

இவர்களில், நீள்வட்ட வடிவில் முகம் உள்ள பெண்ணா நீங்கள்? உங்களுக்கென்றும் தனியான சில அழகுக் குறிப்புகள் உள்ளன. இவற்றை நீங்கள் கடைப்பிடித்தால் உங்கள் அழகு மேலும் மெருகேறும். இதோ உங்கள் நீள்வட்ட முகத்திற்கான சில அழகுக் குறிப்புகள்.

பக்கா பவுண்டேஷன்

ஒவ்வொரு முக வடிவிற்கும் தனித்தனியான பவுண்டேஷன் என்று கிடையாது. அப்படி யாரும் சொன்னால் நீங்கள் நம்பி விடாதீர்கள். உங்களுக்குப் பிடித்த, இயற்கையான வழியில் அமைந்த பவுண்டேஷனை சரியாகத் தேர்ந்தெடுத்து அப்ளை செய்து கொள்ளுங்கள். உங்கள் முகம் பொலிவாக இருக்கும்.

அழகான உதடுகள்

உங்கள் உதடுகளைப் பற்றியோ, உதடுகளில் நீங்கள் போட்டுக் கொள்ளும் லிப்ஸ்டிக்கைப் பற்றியோ யாராவது தவறாக விமர்சனம் செய்கிறார்களா? அதை உடனே சரி செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு நீள்வட்ட முகமாக இருப்பதால் அடர்த்தியான ஷேடோக்கள், கவர்ந்திழுக்கும் பளபளப்பான உதட்டுச் சாயங்கள் உங்களுக்கு எடுப்பாக இருக்கும். உதடுகளை எடுப்பாகக் காட்டுவதற்கு, கண்களில் செய்யும் மேக்கப்பை சிம்பிளாக்கிக் கொள்ளுங்கள்.

கவர்ந்திழுக்கும் கண்கள்

நீள்வட்ட முக வடிவம் கொண்ட உங்களுக்கு கண்கள் பெரிய பிளஸ்ஸாக இருக்கும். க்ரீமி ஷேடோக்கள் மற்றும் அடர்த்தியான லேஷ்களைக் கொண்டு உங்கள் கண்களை அழகுப்படுத்திக் கொண்டால் கலக்கலாக இருக்கும்.

கண்களின் அழகை அதிகரித்துக் காட்ட வேண்டுமென்றால், உதட்டுச் சாயங்களைக் கணிசமாகக் குறைத்துக் கொள்ளுங்கள். ஒரே நேரத்தில் உதடு மற்றும் கண்களை அழகுபடுத்திக் கொள்ள வேண்டாம்! மிருதுவான கன்னங்கள்

மிருதுவான கன்னங்கள்

உங்கள் கன்னங்களின் ஜொலிப்பு நீங்கள் எவ்வளவு புரோன்ஸரை உபயோகிக்கிறீர்கள் என்பதில் தான் இருக்கிறது. உங்கள் நீள்வட்ட முகத்திற்கு, குறைவான புரோன்ஸரையே கன்னங்களில் பயன்படுத்த வேண்டும். அதிக புரோன்ஸர்கள் உங்கள் முக அழகைக் குறைத்து விடும்.

ஷேடோக்களின் ஜாலம்

உங்கள் முகங்களில் உள்ள பாகங்களுக்கு ஒரே விதமான ஷேடோக்களைப் பயன்படுத்தக் கூடாது. உதாரணத்திற்கு, நீங்கள் கன்னங்களுக்கு லைட்டான புரோன்ஸரைப் பயன்படுத்தும் போது, கண்களுக்கான ஹைலைட்டரை அடர்த்தியாக்கிக் கொள்ளுங்கள்.

பிளஷ் செய்யும் மாயம்

நீள்வட்ட முகத்தினருக்கு மட்டுமல்ல, இது எல்லோருக்கும் பொருந்தும். மைல்டு பவள நிற மற்றும் லைட் பிங்க் நிற பிளஷ் பவுடரைஜென்ட்டிலாக உங்கள் முகத்தில் அப்ளை செய்து பாருங்கள். உங்கள் மேக்கப் அப்போது தான் முழுமையடையும்.

லிப் க்ளாஸ்

லிப் க்ளாஸ் பயன்படுத்துவதால் உங்கள் நீள்வட்ட முகத்துக்கே ஒரு தனி அழகு கிடைத்து விடும். மாலை நேரப் பார்ட்டிகளுக்குச் செல்லும் போது, கண்களில் மேக்கப்பை அதிகப்படுத்திக் கொண்டு, மெல்லிய பளபளப்புடன் உங்கள் உதடுகளில் லிப் க்ளாஸ் போட்டுக் கொள்ளுங்கள்; பார்ட்டியே உங்களைத் தான் பார்த்துக் கொண்டிருக்கும்!
25 21 5brush

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button