சரும பராமரிப்பு

10 நாட்கள் இந்த ஒரு ஃபேஸ் பேக்கை போட்டு வந்தால் சருமத்தை வெள்ளையாக்கலாம்!

உடலைப் போன்றே சருமத்திற்கும் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை மிகவும் அவசியம். இச்சத்துக்களை சரும செல்கள் சரியாக பெற்று வந்தால், சருமம் பொலிவோடும் வறட்சியின்றியும் காணப்படும். அதற்கு கெமிக்கல் க்ரீம்கள் அல்லது ஃபேஸ் மாஸ்க்குகளைப் போடுவது சிறந்ததல்ல. இதனால் சருமத்தின் பொலிவு தற்காலிகமாகத் தான் அதிகரிக்கும். ஒருவேளை அந்த க்ரீம்கள் அல்லது ஃபேஸ் மாஸ்க்குகளைப் பயன்படுத்துவதை நிறுத்தினால், உடனே உங்கள் முகம் பழையபடி பொலிவிழந்து காணப்படும்.

எனவே எப்போதும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இயற்கைப் பொருட்களைக் கொண்டு பராமரிப்பது தான் சிறந்த வழி. அதிலும் நீங்கள் சூரியக்கதிர்களால் உங்கள் சருமத்தில் ஏற்பட்ட கருமையை நீக்க நினைத்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு ஃபேஸ் பேக்கை தினமும் போட்டு வந்தால், சருமத்திற்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதோடு, சருமத்தில் உள்ள கருமையும் அகன்று, முகம் பளிச்சென்று மின்னும்.

இப்போது இந்த ஃபேஸ் மாஸ்க்கை போடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகளையும், அந்த ஃபேஸ் மாஸ்க்கை எப்படி போடுவதென்றும் காண்போம்.

சருமம் வெள்ளையாகும்

இந்த ஃபேஸ் மாஸ்க்கில் தேன் மற்றும் தயிர் சேர்க்கப்பட்டுள்ளதால், இந்த மாஸ்க்கை தினமும் முகத்திற்கு போடுவதால், தயிரில் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால் சருமத்தில் உள்ள கருமை நீங்கி, சருமம் வெள்ளையாகும்.

சுருக்கங்களைப் போக்கும்

இந்த ஃபேஸ் மாஸ்க் சரும சுருக்கங்கள், முதுமைக் கோடுகள், முதுமைப் புள்ளிகள் போன்ற அனைத்தையும் நீக்கும் திறன் கொண்டது. இதை 10 நாட்கள் தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் நன்கு காண முடியும்.

பிம்பிளை நீக்கும்

இந்த ஃபேஸ் பேக்கில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை உள்ளது. எனவே இந்த ஃபேஸ் போக்கை போடுவதன் மூலம் பிம்பிள் நீங்குவதோடு, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் முற்றிலும் நீங்கி, பொலிவிழந்த சருமம் பொலிவோடு காணப்படும்.

மென்மையான சருமம்

இந்த ஃபேஸ் மாஸ்க் போடுவதன் மூலம், சருமத்தின் மென்மைத்தன்மை அதிகரிக்கும். மேலும் இது சருமத்திற்கு நீர்ச்சத்தை வழங்கி, சருமத்தை வறட்சியின்றி பொலிவோடு வைத்துக் கொள்ளும்.

தேவையான பொருட்கள்

ரோஜாப்பூ இதழ்கள் – 7 ரோஸ்வாட்டர் – 2 டேபிள் ஸ்பூன் தயிர் – 2 டேபிள் ஸ்பூன் தேன் – 1 டேபிள் ஸ்பூன்

செய்யும் முறை

முதலில் ரோஜாப்பூ இதழ்களை ரோஸ் வாட்டரில் 5 நிமிடம் ஊற வைத்து, கையால் மசித்து விட வேண்டும். பின் அதில் தேன், தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

30 1454135488 6 honeyroseyogurtfacemask

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button