26.2 C
Chennai
Friday, Dec 13, 2024
p60d
சமையல் குறிப்புகள்

இனியெல்லாம் ருசியே! – 4

சமையல் என்பது வேலை மட்டும் அல்ல… கலையும்கூட! இந்தக் கலையில் வல்லமை படைத்தவர்கள், சமையல் தொடர்பான சந்தேகங்களைக் களைவதுடன், உங்கள் சமையல் மிகச் சிறப்பாக அமைய சில ஆலோசனைகளைத் தரும் பகுதி இது. இந்த இதழில் உங்களுக்கு உதவ வருபவர் லஷ்மி ஸ்ரீநிவாசன்.

மாம்பழம் புளிப்பாக இருந்தால் என்ன செய்யலாம்?

சிறிதளவு சர்க்கரை சேர்த்து மில்க்ஷேக் செய்யலாம். அல்லது, சிறிதளவு வெல்லம் சேர்த்து மாம்பழ சாம்பார் செய்யலாம்.

வீட்டில் திராட்சை அதிகமாக இருந்தால், அதை வேறு வகையில் பயன்படுத்துவது எப்படி?

கடாயில் எண்ணெய் விட்டு சிறிது கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, திராட்சைப் பழத்தை விதை நீக்கி சேர்த்து வதக்கி… உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த் தூள் சேர்த்து சுவையான திராட்சை தொக்கு தயாரிக் கலாம். சிறிதளவு வெந்தயப் பொடியும் சேர்க்க மறக்க வேண்டாம்.

அவியல் மிகுதியாகிவிட்டால் அதை என்ன செய்யலாம்?

நீரை வடித்து, காய்கறிகளை அலசி எடுத்து, நறுக்கிய வெங்காயம் உப்பு, காரம் சேர்த்து பூரணம் செய்து, அதை வைத்து சமோசா/கட்லெட் செய்யலாம்.

அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு சத்தான சாதம் ஊட்டுவது எப்படி?

2 டீஸ்பூன் அரிசி, ஒரு டீஸ்பூன் துவரம்பருப்பு, தேவையான உப்பு, நெய், மஞ்சள்தூள் மற்றும் நறுக்கிய கேரட் சேர்த்து, குக்கரில் குழைய வேகவிட்டு மசித்து, ஊட்டச்சத்து நிறைந்த உணவாக குழந்தைகளுக்கு ஊட்டலாம்.

போளியின் ஓரங்களில் மைதா மாவு மிகுந்து, போளி கெட்டியாக வராமல் இருக்க ஆலோசனை கூறுங்களேன்…

பிசைந்த மைதா மாவை அப்பளம் போல் இட்டு, பூரணம் நிரப்பி, மீண்டும் மூடும்போது, அதில் குவியும் அதிகப்படியான மாவை நீக்கிவிட்டால்… போளி மிருதுவாக இருக்கும்.

காலைவேளையில் உடனடியாக பருப்பு உசிலி தயாரிக்க ஒரு சுலபமான வழி… ப்ளீஸ்!

துவரம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 200, சிவப்பு மிளகாய் – 10, பெருங்காயம் சிறிதளவு… இவற்றை ரவை போல் உடைத்து வைத்துக் கொள்ளுங்கள். பருப்பு உசிலி தேவைப்படும்போது இதை வேண்டிய அளவு எடுத்து… தேவையான உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, சிறிது வெந்நீர் தெளித்து, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சிறிதளவு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெந்த காயை சேர்த்து, ஆவியில் வேகவைத்த பருப்பையும் உதிர்த்துக் கிளறினால்… அவசர பருப்பு உசிலி தயார்.

சாதா சாம்பார், பிசிபேளா சாம்பார் போல் இருக்க ஐடியா சொல்லுங்கள்….

சாம்பார் பொடி செய்யும்போது வழக்கமாக போடும் தனியாவைவிட, சிறிதளவு அதிகமாக சேர்த்து, துருவி வறுத்த கொப்பரை, சிறிதளவு வறுத்த கசகசா சேர்த்துப் பொடிக்க… இனிமேல் தினமும் உங்கள் வீட்டில் பிசிபேளா சாம்பார்தான்.

காஞ்சிபுரம் இட்லி பிரமாதமான ருசியுடன் அமைய என்ன செய்வது?

காஞ்சிபுரம் இட்லிக்கான ஸ்பெஷல் மாவை அரைத்து புளிக்க வைத்த பின், மந்தார இலை / வாழை இலையை டம்ளர் சைஸுக்கு ஏற்ப கத்தரித்து, நெய் தடவி, பின் டம்ளரில் இறக்கி மாவை முக்கால் பங்கு விட்டு வார்க்க, காஞ்சிபுரம் இட்லி சூப்பர் சுவையில் கிடைக்கும். மேலும், அந்த இட்லியின் ஸ்பெஷல் வாசனை இலையில்தான் உள்ளது.

காராமணி, கொத்தவரங்காய், பீன்ஸை எளிதில் நறுக்க ஒரு உபாயம் கூறுங்கள்…

அந்தக் காய்களை காம்பு நீக்கி… 10, 15 சேர்த்து ஒரு ரப்பர் பேண்ட் போட்டு நறுக்கினால்… எளிதாக இருக்கும்.

கட்டிப் பெருங்காயத்தை அவசரமாக உபயோகப்படுத்த ஐடியா கிடைக்குமா.?

வேண்டிய அளவு கட்டிப் பெருங்காயத்தில் வெந்நீர் விட்டு, அது ஊறி கரைந்த பின் ஒரு சிறிய பாட்டிலில் எடுத்து, ஃப்ரிட்ஜில் வைத்துவிடவும். இந்த ரெடிமேட் பெருங்காய நீர்… அவசரத்துக்கு கை கொடுக்கும்.
p60d

Related posts

“நீங்க உங்கள் சமையலறையில் (Plastic Cutting Board) பிளாஸ்டிக் கட்டிங் போட் ஐ வைத்து தான் காய்கறிகளை வ…

nathan

லெமன் சட்னி

nathan

கலர்பொடி சேர்க்காமல் கிரேவியில் நிறத்தை கொண்டு வரமுடியுமா?

nathan

சுவையான கத்திரிக்காய் ரசவாங்கி

nathan

சுவையான ஆந்திரா ஸ்டைல் தக்காளி தால்

nathan

இறால் கிரேவி

nathan

சுவையான பட்டர் நாண்

nathan

கோபி மஞ்சூரியன் ரெசிபி

nathan

பெங்களூரு ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி

nathan