சட்னி வகைகள்

நார்த்தங்காய் பச்சடி

தேவையான பொருட்கள்

நார்த்தங்காய் – 4
புளி – எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய் – 20
இஞ்சி – 1 மேஜைக்கரண்டி(நறுக்கியது)
மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் – 3 சிட்டிகை
சர்க்கரை – 1 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

தாளிக்க :

எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
பொட்டுக் கடலை – 3 மேஜைக்கரண்டி
கறிவேப்பிலை – 1 கொத்து
பெருங்காயம் – 1 சிட்டிகை

செய்முறை :

• நார்த்தங்காயை வெட்டி விதைகளை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்

• புளியை தண்ணிரில் அரை மணி நேரம் ஊற வைத்து பின்பு நீரில் கரைத்துக் கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் நறுக்கிய நார்த்தங்காய், உப்பு, புளி மற்றும் நீர் சேர்த்து மிதமான சூட்டில் வேக வைக்கவும்

• மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்துக் அதனை பச்சடியுடன் சேர்க்கவும்.

• பின்பு அதன் அளவு பாதியாக குறைந்ததும் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.

• பின்பு அடுப்பை அணைத்து விட்டு அதனை ஆற வைக்கவும்

• நார்த்தங்காய் பச்சடி தயார்

• வயிற்று பிரச்சனை இருப்பவர்கள் இந்த நார்த்தங்காய் பச்சடியை உணவில் சேர்த்து கொள்ளலாம்.

Related posts

கத்தரிக்காய் சட்னி

nathan

கடலை சட்னி

nathan

இனி கேரட்டில் செய்திடலாம் சட்னி – சுவையான கேரட் சட்னி

nathan

Leave a Comment

Live Updates COVID-19 CASES
%d bloggers like this: