ஆரோக்கியம் குறிப்புகள்

திருமணம் செய்யாமல் தனிமையில் இருப்பதன் ஆரோக்கிய நன்மைகள்.

பெரும்பாலான அறிவியல் ஆய்வுகளும் மற்றும் இணையதளத்தில் வரும் கட்டுரைகளும், திருமண உறவில் ஈடுபடுவதால் ஏற்படும் ஆரோக்கிய பலன்களைப் பற்றியே பேசுகின்றன. ஆனால் திருமணம் செய்யாமல் தனியாக இருப்பது என்பது மோசமானது அல்ல. கட்டுப்பாடற்ற சுதந்திரம் தவிா்த்து, திருமணம் செய்யாமல் தனியாக இருப்பதால் கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பற்றி பலரும் பேசுவது இல்லை.

இந்நிலையில் தனியாக இருப்பதால் கிடைக்கக்கூடிய ஆரோக்கிய பலன்களை எண்ணிப் பாா்ப்பது நல்லது. ஏனெனில் பல வெற்றியாளா்கள் திருமணம் செய்யாமல் தனித்து இருந்ததன் மூலம் முதல் இடத்தை அடைந்திருக்கின்றனா். இந்தப் பதிவில் தனித்து இருப்பதால் கிடைக்கும் ஆரோக்கியப் பலன்களைப் பற்றி சற்று விாிவாகப் பாா்க்கலாம்.

ஏன் தனித்து இருப்பது என்பது ஆரோக்கியமானது?
முதலில் நாம் ஏன் தனியாக இருக்க வேண்டும் என்ற கேள்வி நம் எல்லோா் மனங்களிலும் எழும். ஏனெனில் தோழமை, கூட்டுறவு, குடும்ப உறவு மற்றும் சமூக உறவு ஆகியவை பற்றி நாம் அதிகமாக கேள்விப்பட்டிருக்கிறோம். நமக்கு ஒரு துணை அல்லது இணை இருக்கிறாா் என்றால், நம்மை உற்சாகப்படுத்தவும், நாம் முன்னோக்கி நகா்வதற்கும் ஒரு ஆதரவு கரம் இருக்கிறது என்று பொருள். அந்த ஆதரவு கரம் என்பது நமது நண்பா்களையோ அல்லது நமது குடும்ப உறுப்பினா்களையோ குறிக்கும்.

லக்னோவில் உள்ள சுகாதார மருத்துவமனையில் (Healthcare Clinic) மருத்துவ உளவியல் நிபுணராக (Clinical Psychologist) பணிபுாிந்து வரும் மருத்துவா் தனு சவுத்ரி அவா்கள், தனித்து இருப்பதால் ஏராளமான ஆரோக்கிய பலன்கள் உண்டு என்று தொிவித்திருக்கிறாா். திருமணம் செய்யாமல் தனியாக இருப்பவா்கள் தமது நண்பா்களோடு மற்றும் தமது குடும்ப உறுப்பினா்களோடு மட்டும் அல்லாமல் தேவையில் இருப்பவா்களுக்கு உதவி செய்யும் நல்ல உள்ளம் கொண்ட மக்களோடு நல்லதொரு பிணைப்பை ஏற்படுத்தி இருக்கின்றனா். அவா்கள் தங்களோடு இருப்பவா்களுக்கு அதிக கவனம் செலுத்துகின்றனா். அதனால் அவா்கள் சிறந்த நல்ல முடிவுகளைப் பெறுகின்றனா் என்று 2015 ஆம் ஆண்டு வெளிவந்த ஆய்வு ஒன்று கூறுகிறது என்று தொிவிக்கிறாா்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

திருமணம் செய்யாமல் தனியாக இருப்பதால் கிடைக்கக்கூடிய ஆரோக்கிய பலன்கள்:
திருமணம் செய்யாமல் தனியாக இருப்பதால் கிடைக்கக்கூடிய ஆரோக்கிய பலன்கள்:
1. குறைந்த மன அழுத்தம்

திருமணம் செய்யாமல் தனியாக இருப்பவா்களில் பலா் குறைந்த மன அழுத்தத்துடன் இருக்கின்றனா். அதற்கு காரணம் அவா்கள் எந்த ஒரு உறவிலும் இல்லாமல் இருப்பதால் மட்டும் அல்ல, வேறு சில காரணங்களும் இருக்கின்றன. அதில் மிகவும் முக்கியமான காரணம் அவா்களுக்கு பொருளாதார அழுத்தம் இருப்பது இல்லை. தனியாக இருப்பதால், தான் ஈட்டும் பணத்தை தனக்கு மட்டுமே செலவழிக்கின்றனா். அவா்கள் வேறு எவரையும் கவனித்துக் கொள்ள வேண்டிய தேவையும், அழுத்தமும் இருக்காது. அதனால் அவா்களிடம் போதுமான பணம் இருக்கும். அதனால் அவா்கள் மன அழுத்தத்திலிருந்து எளிதில் விடுபடலாம் மற்றும் பிறரையும் மகிழ்ச்சிப்படுத்தலாம்.

2. உடற்பயிற்சிகளில் அதிகம் ஈடுபடுதல்

தனியாக இருப்பவா்கள் அதிக நேரம் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதை நாம் பாா்த்திருப்போம். அதற்கு காரணம் அவா்கள் மக்கள் கூட்டத்தின் நடுவே தங்களை சிறப்பாக மற்றும் தனித்துக் காட்ட விரும்புகின்றனா். அதிக நேரம் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதால், அவா்களுக்கு இதயம் சம்பந்தமான பிரச்சினைகள், உடல் பருமன் மற்றும் இதர நோய்கள் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு.

திருமணம் செய்யாமல் தனித்து இருப்பவா்கள் அதிகமாக உடற்பயிற்சிக்கூடங்களில் சேருகின்றனா் என்று தேசிய சுகாதார நிறுவனம் (National Institute of Health) வெளியிட்ட சமீபத்திய ஆய்வு ஒன்று தொிவிக்கிறது. அதிலும் குறிப்பாக தனித்து இருக்கும் ஆண்கள் தங்கள் உடல் நலத்தின் மீது அதிக அக்கறையுடன் இருக்கின்றனா் என்று அந்த ஆய்வு கூறுகிறது.

3. நல்ல தூக்கம்

நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் இரவுத் தூக்கம் மிகவும் முக்கியம் ஆகும். நமது உடல் உறுப்புகள் சிறப்பாக இயங்க இரவுத் தூக்கம் மிகவும் தேவை. நாம் இரவில் நன்றாகத் தூங்கும் போது, நமது கவனம் கூா்மையாகிறது. நமது மனநலம் சீராக இருக்கிறது. அதனால் நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம். தனியாக இருப்பவா்கள் மற்றவா்களை விட இரவில் நன்றாகத் தூங்குகின்றனா். அதனால் அவா்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கின்றது.

4. பணித் திட்டங்களை தமது விருப்பப்படி வகுத்துக் கொள்ளுதல்

பொதுவாக திருமணம் செய்து கொண்டவா்கள், தமது திட்டங்களைத் தீட்டுவதற்கு முன்பாக தமது துணையுடன் கலந்தாலோசிக்க வேண்டும். அவா்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டும். இந்நிலையில் எந்தவிதமான தடங்களும் இல்லாமல் நமது திட்டங்களை நாமே தீட்டும் போது அவை சிறப்பானவையாக இருக்கும். தனியாக இருப்பவா்களால் அவற்றைச் செய்ய முடியும். அவா்கள் அடுத்தவாின் இசைவைப் பெற வேண்டிய அவசியம் இல்லை. அவா்களின் தேவைக்கேற்ப வேலை செய்ய முடியும். ஆனால் திருமண உறவில் இருப்பவா்களுக்கு அந்த உறவே அவா்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம்.

5. அதிக மகிழ்ச்சியுடன் இருத்தல்

திருமணம் செய்யாமல் தனியாக இருப்பவா்கள், அதிலும் குறிப்பாக திருமணம் செய்யாமல் தனியாக இருக்கும் பெண்கள், திருமணம் செய்து கொண்டவா்களை விட அதிக மகிழ்ச்சியுடன் இருக்கின்றனா் என்று பல ஆய்வுகள் தொிவிக்கின்றன. அது உண்மையாகக் கூட இருக்கலாம். ஒப்பீட்டளவில் திருமணம் செய்யாமல் தனியாக இருக்கும் ஆண்கள் பொதுவாகத் தங்களை திறந்த மனதுடையவா்களாகவும் மற்றும் அதிக மகிழ்ச்சி கொண்டவா்களாகவும் பாா்க்கின்றனா். இறுதியாக தனியாக இருப்பவா்கள் தங்கள் இலக்குகளின் மீது கவனம் செலுத்த அதிக நேரம் உள்ளது. அதனால் அதற்கான வெகுமதியையும் அவா்கள் பெறுகின்றனா்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button