ஆரோக்கியம் குறிப்புகள்

நாப்கினைப் பற்றி பெண்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் – ஆண்கள் ப்ளீஸ் படிக்க வேண்டாம்!!!

எதில் எல்லாம் விழிப்புணர்வு எதிகம் தேவையோ, அதில் எல்லாம் தான் நாம் சுத்தமாக விழிப்புணர்வின்றி இருப்போம். உதாரணமாக சொல்ல வேண்டுமானால், ஆணுறை, நாப்கின் போன்ற உடல்நலன் சார்ந்த பொருட்கள். அசிங்க, அசிங்கமாக கொச்சை வார்த்தைகளில் திட்டுவதற்கு கூட கூச்சப்படாதவர்கள் ஆணுறை மற்றும் நாப்கின் பற்றி பேச கூனிக்குறுகுவார்கள்.

இதைத் தான் மாற்றிக் கொள்ள வேண்டும். உங்கள் வீட்டு பெண்கள் நாப்கின் பற்றிய விழிப்புணர்வு இல்லாதலால் எவ்வளவு பிரச்சனைகள் சந்திக்கின்றனர் என்று உங்களுக்கு தெரியுமா?

சாதாரணமாகவே பெண்களுக்கு பிறப்புறுப்பு பகுதியில் எளிதாக நோய்கிருமி தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதில், மாதவிடாய் காலங்களில் நாப்கின்னை சரியான முறையில் பயன்படுத்தாமல் இருப்பதானால் தொற்றுகள் அதிகமாக ஏற்படும். இனி, நாப்கின் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை பற்றி பார்க்கலாம்.

ஈரமான நாப்கின்

மாதவிடாய் காலங்களில், ஒருவேளை அதிகமான இரத்தப்போக்கு ஏற்பட்டால், ஒரே நாப்கினை நீண்ட நேரம் பயன்படுத்தக் கூடாது. இது நிறைய சரும பிரச்சனைகளை உண்டாக்கும். சரும தடுப்புகள், அரிப்பு, சிறுநீர் பாதை நோய் தொற்று, புணர்புழை இடங்களில் தொற்று போன்றவை ஏற்படும். நாப்கினை உபயோகப்படுத்தும் போது பிறப்புறுப்பு இடத்தில் ஈரம் இல்லாமல் நன்குதுடைத்த பிறகு பயன்படுத்துங்கள்.

பிறப்புறுப்பை கழுவுதல்

சிலர் நாப்கினை மட்டும் மாற்றும் பழக்கத்தை வைத்திருப்பார்கள், இது மிகவும் தவறு. மாதவிடாய் காலங்களில் பிறப்புறுப்பை நன்கு கழுவுதல் அவசியம். வெளிவரும் இரத்தப்போக்கு அவ்விடத்தில் தங்கவிடக்கூடாது.

சோப்பு பயன்ப்படுத்த வேண்டாம்

மாதவிடாய் காலங்களில் உங்கள் பிறப்புறுப்பை சோப்பு பயன்படுத்தி கழுவாமல், வெறும் நீரை மட்டுமே பயன்படுத்தி கழுவுவது தான் சரியான முறை என்று கூறப்படுகிறது. ஏனெனில், சோப்பு கிருமிகளை கொன்றாலும், தொற்று ஏற்பட காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சரியான முறை

மாதவிடாய் காலத்தில் உங்கள் பிறப்புறுப்பிலிருந்து ஆசன பகுதி முறையில் கழுவுவது தான் சரியான முறை. (முன் இருந்து பின்). இதற்கு எதிர் திசையில் கழுவும் போது சிறுநீர் பாதை நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

நாப்கினை அகற்றும் போது

வீடாக இருந்தாலும் சரி, வெளியிடங்களாக இருந்தாலும் சரி, உங்களது நாப்கினை அகற்றும் போது, நன்கு காகிதத்தில் சுற்றி குப்பைத் தொட்டியில் எறியவும். இல்லையேல், அது கிருமிகள் பரவ காரணமாகிவிடும்.

கைக் கழுவுதல்

ஓர் நாப்கினை எடுத்துவிட்டு மறு நாப்கினை பயன்படுத்திய பின்பு நன்கு கைக் கழுவுதல் அவசியம்.

நாப்கினை தேர்ந்தெடுக்கும் முறை

பெரும்பாலும் உங்களுக்கு ஏற்றதாகவும், மென்மையானதாக இருக்கும் நாப்கின்களை தேர்ந்தெடுங்கள். இல்லையேல், பிறப்புறுப்பு பகுதியில் அரிப்பு ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.

இறுக்கமான உடைகளை அணியவேண்டாம்

மாதவிடாய் காலங்களில் இறுக்கமான உடைகள் அணிவதை தவிர்த்திடுங்கள். இது அசௌகரியமாக உணர வைக்கும். மற்றும் அந்த இறுக்கம் சீரான இரத்தப்போக்கை தடுக்கும்.

எப்போதும் போல குளிக்கலாம்

மாதவிடாய் நாட்களில் எப்போதும் போல குளிக்கலாம். சிலர் தலைக்கு குளிக்க வேண்டாம் என்று கூறுவார்கள். ஆனால், தலைக்கு குளிப்பது உங்களை புத்துணர்ச்சியாக உணர வைக்கும். எனினும் காலநிலைகளை பொறுத்து தலைக்கு குளிப்பது நல்லது

08 1431072895 2thingseverywomanneedstoknowaboutsanitarynapkin

Related Articles

13 Comments

  1. இதில் எந்த தவறும் இல்லை… ஆண்கள் கூட படிக்கலாம்…

  2. அதில் எந்த தவறுமில்லை, கண்டிப்பாக ஆண்கள் படித்து தெரிந்திருத்தல் நன்று, வீட்டுப்பெண்கள் ( அம்மா, மனைவி, மகள்)விலக்காகும்போது அவர்களின் வலிகளை அறிந்து சிறு உதவிகளை செய்யலாம், குறைந்த பட்சம் சமையலை பார்த்துக்கொள்வது பெண்களுக்கு சிறு ஆறுதலையாவது தரும்..

  3. நாப்கின் பற்றி எழுதும் நீங்கள் அதில் இருக்கும் கெமிக்கல் காம்பினேஷன் என்ன என்று சொல்லமுடியுமா?
    எந்த நாப்கின் தயாரிக்கும் நிறுவனங்கள்
    அதன் மீது என்ன இங்கிரிடன்ட் என்று குறிப்பிடுகிறார்களா?
    ரத்தத்தை பரவலாக உறிஞ்சும் செல்லுலோஸ் இனத்தை சேர்ந்த இனத்தை இரசயணத்தை கலக்கிறார்கள்
    கூகிளில் போட்டு பாருங்கள் தெரியும்.
    நிறுவனங்கள் medicated என்று தான் குறித்து இருப்பார்கள்.
    மகப்பேறு மருத்துவமனைகளை முன்னர் பார்த்திருக்கிறோம், இப்பொழுது கருத்தரிப்பு மையங்களை பார்க்கிறோம்.
    சிறு வயதில் கர்ப்பப்பை நீக்கம், cyst ஏன் வருகிறது. சிந்தியுங்கள்.

  4. இந்தப் பதிவை ஆண்களும் படித்து தங்கள் குடும்பத்து பெண்களை பாதுகாக்க வேண்டுகிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button