33.3 C
Chennai
Saturday, May 18, 2024
sl3982
சிற்றுண்டி வகைகள்

முந்திரி வடை

என்னென்ன தேவை?

கடலைப்பருப்பு – 1 கப்,
பச்சரிசி – 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 4,
சிவப்பு மிளகாய் – 2,
இஞ்சி – 1 துண்டு,
சோம்பு – 1 டீஸ்பூன்,
ரவை – 1/2 டீஸ்பூன்,
வெங்காயம் – 1,
கறிவேப்பிலை – 2 டீஸ்பூன்,
கொத்தமல்லி – 2 டீஸ்பூன்,
முந்திரி – 6,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

கடலைப் பருப்பு மற்றும் பச்சரிசி சேர்த்து 1 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு நன்கு வடிகட்டி பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து நன்கு கரகரவென்று அரைத்துக் கொள்ளவும். இத்துடன் நறுக்கிய வெங்காயம், முந்திரி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, ரவை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, நன்கு சூடானவுடன் வடை போல் தட்டி பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

sl3982

Related posts

ஸ்டஃப்டு சாதம் பராத்தா

nathan

சத்து நிறைந்த கேழ்வரகு ஆப்பம்

nathan

சுய்யம்

nathan

சுவையான சத்தான ஆலூ பசலைக்கீரை சப்பாத்தி

nathan

சூப்பரான மாலைநேர டிபன் சப்பாத்தி உப்புமா

nathan

எலுமிச்சை இடியாப்பம்

nathan

முட்டை பணியாரம்!

nathan

30 வகை நட்ஸ் ரெசிப்பி!

nathan

சுவையான சுண்டல் கிரேவி

nathan