அழகு குறிப்புகள்கண்கள் பராமரிப்பு

கருவளையம்

cucumber-eyesஅதிகப்படியான வறட்சி, ஓய்வின்மை, தூக்கமின்மை, மலச்சிக்கல், கவலை போனற காரணங்களால் கண்களின் கீழ் கருவளையம் தோன்றுகிறது.

அதிகப்படியான ஒப்பனையும் கருவளையம் தோன்ற ஒரு வாய்ப்பு.

* வெள்ளரி, உருளை போன்றவற்றை வட்டமாக நறுக்கி கண்களின் மீது வைத்துக் கொள்ளலாம்.
* ஆல்மெண்ட் ஆயில் உபயோகித்தால் சுருக்கம், கருமை போன்றவை மறைய வாய்ப்புண்டு.
* கண்களைச் சுற்றியுள்ள பகுதி மிகவும் நுட்பமானது. க்ரீம் வகைகளைக் கொண்டு அழுத்தவோ தேய்க்கவோ கூடாது.

கண்களை அன்றலர்ந்த மலர்போல் வைத்துக்கொள்ள மசாஜ் துணை செய்கிறது.

மசாஜ் கண்ணில் போடப்பட்ட மை , கண்களை சுற்றி போடப்பட்ட க்ரீம், தூசு போன்றவற்றை சுத்தம் செய்ய வேண்டும்.

இவ்வாறு சுத்தம் செய்வதற்கு  ஐ க்ளெனடஸிங் லோஷன் அல்லது இரண்டு ஸ்பூன் பாலில் ஒரு சொட்டு லெமன் சாற கலந்த கலவையை உபயோகப்படுத்தவும்.

பின்பு நீர் அல்லது ரோஸ் வாட்டர் கொண்டு பஞ்சினால் கண்களை மெதுவாக துடைத்து விடவும். பாதாம் ஆயில் விட்டமின் ஆயில் இவற்றில் ஏதேனும் ஒன்றை கண்களை சுற்றி தடவும்.

இந்த ஆயில் கண்களின் சுருக்கத்தை நீக்கி பளபளப்பாக இருக்க உதவுகிறது.

ஆட்காட்டி விரலிலும், நடுவிரலிலும் நீ£த் தொட்டுக் கொண்டு மூக்கிலிருந்து கண்களில் மெதுவாக , மென்மையாக மசாஜ் செய்யவும்.
தொடர்ந்து பத்து நிமிடங்கள் இதே போல் செய்யலாம். கண்களுக்கு கவர்ச்சியையும், குளுமையையும் அளிப்பது கண் மை. மை தீட்டுவதால் கணகள் மேலும் அழகு பெறும்.

கண்களுக்கு மேலும் கவர்ச்சியளிப்பது அடர்த்தியான இமை முடிகள். இமை இரைப்பைகளில் மஸ்கார போடுதன் மூலம் அழகு மெருகேறுகிறது.

கண்களுக்குப் போடும் அழகு சாதனங்களை நல்ல தரமான தயாரிப்புகளையே
வாங்கி பயன்படுத்தவும்.
கண் பாதுகாப்பு

தையல் வேலை செய்யும் போதும், படிக்கும் போதுமான வெளிச்சம் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளவும். கண்களை கூச செய்யும் வெளிச்சம் கண்களுக்கு ஊறு விளைவிக்கும்.

வெய்யிலில் செல்ல நேருமானால் சன்& கிளாஸ் அணிந்து கொள்ளவும்.

அதிகப்படியான காற்று கண்களில் உள்ள ஈரப்பசையை அகற்றி விடும். மின்விசிறியின் காற்று கண்களில் நேரடியாக படும்படி அமரவோ, படுக்கவோ கூடாது. டூவிலிரில் செல்பவர்கள் கிளாஸ் அணிவது அவசியம்.

அப்போது தான் காற்று, தூசிகளிலிருந்து கண்களை காத்துக் கொள்ளமுடியும்.

நிறைய படிப்பவர்கள், கம்யூட்டர் முன் அமர்பவர்கள், நுட்பமான எலக்ரானிக்ஸ் வேலை செய்பவர்கள் அவ்வப் போது கண்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும்.

கண்கள் களைத்து போகும் சமயங்களில் கண்களை மூடி, உள்ளங்கையை கண்களின் மீது குவித்து வைத்துக் கொள்ளவும்.
அதிகப்படியான அசதியானால், கண்கள் வீங்கி சதைகள் தொங்கிபோகும் நிலை ஏற்பட வாய்ப்பு உண்டு.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button