28.4 C
Chennai
Thursday, Dec 26, 2024
zodiac signs2
Other News

இந்த ராசிக்காரங்க வைர நகைகளை அணியக்கூடாதாம்…

தற்போதெல்லாம் தங்கத்தை விட வைரங்களை அணிவது தான் ட்ரெண்ட்டாக உள்ளது. வைரம் ஒருவரது ஸ்டேட்டஸ் அறிகுறியாக இருப்பதோடு, வைர நகைகள் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமானதாகவும் இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தின் படி, வைரம் என்பது சுக்கிரனுக்குரிய ரத்தினம். சுக்கிரன் வலுவாக இருந்தால், வாழ்க்கை ஆடம்பரமாக இருக்கும். ஆனால் ஜோதிடர்களின் நம்பிக்கைகளின் படி, அனைவருமே வைர நகைகளை அணியக்கூடாது. ஏனெனில் அது ஒரு ரத்தினக் கல் மற்றும் அது அனைவருமே அணிய ஏற்றது அல்ல.

நீங்கள் வைர நகைகளை அணிவதாக இருந்தால் ஜோதிடர்களை கலந்தாலோசித்த பின்னரே அணிய வேண்டும். இல்லாவிட்டால், அது மோசமான பலன்களை அளிக்கும். ஜோதிட சாஸ்திரத்தின் படி, பின்வரும் 5 ராசிக்காரர்கள் எந்த சூழ்நிலையிலும் ஜோதிடர்களின் ஆலோசனையின்றி வைரத்தை அணியக்கூடாது.

மேஷம்
மேஷம்
நீங்கள் மேஷ ராசிக்காரராக இருந்தால், உங்கள் ராசியின் 2 மற்றும் 7 ஆவது வீட்டின் அதிபதியாக இருந்தால், நீங்கள் வைரம் அணியக்கூடாது. ஒருவேளை அணிந்தால், இந்த வைரம் உங்களுக்கு நிறைய பிரச்சனைகளை உருவாக்கும்.

ராம நவமி அன்று உங்களுக்கு பிடித்தவர்களுக்கு ‘இத’ அனுப்புனா… ராமரோட அருள் பூரணமா கிடைக்குமாம்!ராம நவமி அன்று உங்களுக்கு பிடித்தவர்களுக்கு ‘இத’ அனுப்புனா… ராமரோட அருள் பூரணமா கிடைக்குமாம்!

கடகம்
கடகம்
பொதுவாக கடக ராசிக்காரர்கள் வைர நகைகளை அணியக்கூடாது. ஆனால் சுக்கிரனின் மகாதசை உங்கள் மீது இயங்கினால், வைரம் அணிவது உங்களுக்கு சாதகமான பலனை அளிக்கும். ஆகவே ஜோதிடரின் ஆலோசனையைப் பெற்ற பின்னர் வைர நகைகளை அணியுங்கள்.

மகிழ்ச்சியான நிம்மதியான வாழ்க்கை உங்களுக்கு அமையனும்னா… இந்த 4 ராசிக்காரங்கள திருமணம் பண்ணுங்க! மகிழ்ச்சியான நிம்மதியான வாழ்க்கை உங்களுக்கு அமையனும்னா… இந்த 4 ராசிக்காரங்கள திருமணம் பண்ணுங்க!

சிம்மம்
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் சாதகமாக கருதப்படாததால், இந்த ராசிக்காரர்கள் வைரம் அணியக்கூடாது. ஜோதிடர்களின் ஆலோசனையின்றி ஒருவேளை வைர நகைகளை வாங்கி அணிந்தால், அந்த வைரம் கெட்ட பலன்களை அளிக்கும்.

2022 சனி பெயர்ச்சியால் இந்த ராசிக்காரங்களோட வலியும், வேதனையும் தீரப்போகுது… உங்க ராசி இதுல இருக்கா?2022 சனி பெயர்ச்சியால் இந்த ராசிக்காரங்களோட வலியும், வேதனையும் தீரப்போகுது… உங்க ராசி இதுல இருக்கா?

விருச்சிகம்
விருச்சிகம்
விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் என்பதால், வைரம் அணிந்தால், செவ்வாய்க்கும் சுக்கிரனுக்கும் பகை உண்டாகும். ஒருவேளை அணிந்தால், வைரமானது இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை உருவாக்கும் மற்றும் பல அசுப பலன்களைத் தரும்.

தனுசு
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் வைரத்தை அணிந்தால், அது பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை தலைத்தூக்கச் செய்து, வாழ்க்கையையே மோசமாக்கும். ஆகவே இந்த ராசிக்காரர்கள் எக்காரணம் கொண்டும் வைர நகைகளை அணியக்கூடாது.

மீனம்
மீனம்
மீன ராசியின் மூன்று மற்றும் எட்டாம் வீட்டின் அதிபதி தான் சுக்கிரன். இது தவிர மீன ராசியின் அதிபதி குரு பகவான். குரு பகவானுக்கும், சுக்கிரனுக்கும் பகை உள்ளது. எனவே மீன ராசிக்காரர்கள் வைரத்தை அணிந்தால், அது அசுப பலன்களை அளித்து, அனைத்து பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

Related posts

உடலை குதறி தின்ற நாய், நரி!குளத்து நீரில் அழுத்தி கொன்ற காதலன்

nathan

கோபம் குறையாத சங்கீதா..! விஜயின் நிலைமை திண்டாட்டமா?

nathan

தலையில் கல்லை போட்டு மனைவி படு-கொலை

nathan

புதிய வீடியோ வெளியிட்ட விஜயலட்சுமி -தி.மு.க.வினர் இதை நம்ப வேண்டாம்

nathan

கனடாவில் கொள்ளையிட வந்தவர்களை துவைத்தெடுத்த தமிழர்கள்!!

nathan

Margot Robbie, Greta Gerwig and More Nominees Don Dazzling Designs at Oscars

nathan

சூப்பர் சிங்கர் செளந்தர்யாவை படுக்கைக்கு அழைத்த பேராசிரியர்.. வெளிவந்த ரகசியம்!

nathan

திரையுலகில் அதிக வசூல் செய்த அட்லீயின் ஜவான் படம்!..

nathan

தமிழில் பேசினால் ஆங்கிலத்தில் வரும்.. மொழியை மாற்றும் வாட்ஸ் அப் – முழு விவரம்!

nathan