அலங்காரம்மணப்பெண் அழகு குறிப்புகள்

மணப்பெண்க்கு டிப்ஸ்

4626232_origகல்யாணமோ, பண்டிகையோ அதற்கு நான்கு அல்லது ஐந்து நாள்களுக்கு முன்பிருந்தே பெண்கள் படிப்படியாகத் நகங்களை அழகுபடுத்திக் கொள்ளத் தயாராக வேண்டும். வேலைகளை முடித்துவிட்டு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்து தலை உள்பட உடம்பு முழுவதும் நிதானமாக நன்றாக மசாஜ் செய்து இரண்டு மணி நேரம் ஊறவிடுங்கள். பிறகு இரண்டு முட்டையை எடுத்து அவற்றின் வெள்ளைக் கருவைத் தனியாகப் பிரித்து அடித்துக் கொள்ள வேண்டும். அடுத்து கருவோடு ஒரு டேபிள் ஸ்பூன் நீர் கலந்து, தலையில் தேய்த்து, நல்ல ஷாம்பூ கொண்டு கழுவிவிடுங்கள். ஒரு பெரிய கைக்குட்டையில் கால் கப் ஓட்மீல், அரை கப் ஸ்டார்ச், அரை கப் பாலாடை உள்ள பால், அரை கப் பவுடர் பால் இட்டு முடிய வேண்டும். அந்த முடிப்பை உடல் முழுவதும் தேய்த்தால் உலர்ந்த சருமம் பளிச்சென்றாகும்.

மறுநாள் கை, கால்களை ப்யூமிஸ்கல் கொண்டு தேய்த்துச் சுத்தப்படுத்த வேண்டும். கை, கால்களை வெதுவெதுப்பான சோப் கலந்த நீரில் சற்று நேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு சுத்தமாகத் துடைத்துவிட்டு நகங்களை சீர்செய்து, விரும்பிய நிறத்தில் நகபாலீஷ் இடவும்.

மூன்றாவது நாள் முகத்தில் சிறிது பாலாடை அல்லது தரமான ‘நரிஷிங் கிரீம்’ கொண்டு மேல்நோக்கி மசாஜ் செய்ய வேண்டும். பிறகு நீராவி பிடித்து மாஸ்க் போடவும். மாஸ்க்குகள் தற்போது கடைகளிலேயே கிடைக்கின்றன. வறண்ட சருமம் உடையவர்கள் முட்டையின் மஞ்சள் கரு, சிறிது தேன், கடலைமாவு ஆகியவற்றைக் கலந்து குழைத்துப் பூசலாம். எண்ணெய்ச் பசை சருமம் உடையவர்கள் முட்டையின் வெண்கருவையும் சிறிது எலுமிச்சம் பழச்சாற்றையும் கலந்து உபயோகிக்கலாம்.

நான்காவது நாளை, ஹென்னா எனப்படும் மருதாணி கொண்டு தலைமுடிக்குச் செழிப்பூட்டுவதற்கும், கை, கால்களில் உள்ள முடிகளைப் போக்குவதற்கும் (வாக்ஸிங் மூலம்) செலவிடலாம். மருதாணிப் பொடி, சிறிது தயிர், அரைமூடி எலுமிச்சம் பழச்சாறு, டீ டிக்காஷன் சிறிது, முட்டை ஒன்று ஆகிய எல்லாவற்றையும் நன்கு கலந்து, தலையில் தேய்க்க வேண்டும். கடையில் கிடைக்கும் வாக்ஸை வாங்கி அதை முடி உள்ள இடத்தில் பூசி, அதன் மேல் துணிப்பட்டையை அழுத்தி, எதிர்ப்புறமாய் இழுத்தால் அதனுடன் முடிகள் ஒட்டிக் கொண்டு வந்துவிடும்.
ஐந்தாவது நாள் பண்டிகை, திருமணம் அல்லது வேறு விசேஷ நாள் அன்று உங்கள் வயது, நிறம், உடல்வாகு ஆகியவற்றிற்கு ஏற்ற உடைகள், நகைகள், ஹேர்ஸ்டைல், முக அலங்காரம் ஆகியன செய்து அழகிய பெண்மணியாகத் தோற்றமளிக்க முடியும்!

சிறிய நெற்றியாய் இருந்தால் பெரிய பொட்டு வேண்டாம். பெரிய நெற்றியில் புருவங்களுக்கு மேல்புறங்கூட சிறிய பொட்டுகள் வைக்கலாம். வீடியோ, ஃபோட்டோ ஆகியவற்றிற்கு ஏற்றவாறு பொட்டைத் தேர்ந்தெடுத்து இடுவது நல்லது. நல்ல சிவப்பு நிறப்பொட்டு, கருப்பும் சிவப்பும் கலந்த பொட்டு ஆகியவை நன்றாய் இருக்கும். நடுவில் கல் வைத்த பொட்டுகள் சில சமயம் வீடியோவில் சரியாகத் தெரிவதில்லை.

எல்லா டிரீட்மெண்ட்டுகளும் செய்து முடித்தால்கூட சில விஷயங்களை மணப்பெண் கடைப்பிடிப்பது நல்லது. திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பிருந்தே வெயிலில் எங்கும் அலையக் கூடாது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button