ஆரோக்கியம் குறிப்புகள்

‘அந்த’ இடத்தில் ரொம்ப அரிக்குதா? இதோ அதைத் தடுக்க சில வழிகள்!

பூஞ்சைத் தொற்றுக்களால் ஆண் மற்றும் பெண்ணின் கவட்டை, பிறப்புறுப்புப் பகுதி, பிட்டம், உள் தொடைகளில் கடுமையான அரிப்புக்கள் ஏற்படும். இருப்பினும் இப்பிரச்சனையால் ஆண்கள் தான் அதிகம் கஷ்டப்படுவார்கள். மேலும் இப்பிரச்சனை ஏற்படுவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன.

அவை உடல் பருமன், இறுக்கமான உள்ளாடை அணிவது, அதிகமாக வியர்வை வெளியேறுவது, பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம் போன்றவை. இந்த அரிப்புக்கள் தீவிரமானால் அப்பகுதி சிவப்பாகவும், எரிச்சலுடனும், தோல் உரிந்தும் காணப்படும். இந்த பிரச்சனையானது பரவக்கூடியது. எனவே உள்ளாடை மற்றும் உடுத்தும் துணிகளை மற்றவருடன் பகிர வேண்டாம்.

இப்பிரச்சனையை சரிசெய்ய ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. அவற்றை தினமும் பின்பற்றினால் நிச்சயம், இந்த பூஞ்சை தொற்றில் இருந்து விடுபடலாம். சரி, இப்போது அந்த வழிகள் என்னவென்று பார்ப்போமா!

டீ-ட்ரீ ஆயில்

டீ-ட்ரீ எண்ணெயில் பூஞ்சை எதிர்ப்பு பொருள் உள்ளது. எனவே இந்த எண்ணெயை பஞ்சில் நனைத்து அரிப்புள்ள இடத்தில் தினமும் இரண்டு முறை தடவி வந்தால், விரைவில் குணமாகும். ஒருவேளை இந்த எண்ணெய் கடுமையான எரிச்சலை ஏற்படுத்தினால், 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன், 4-5 துளிகள் டீ-ட்ரீ ஆயில் சேர்த்து கலந்து, பின் பயன்படுத்துங்கள்.

ஆப்பிள் சீடர்

வினிகர் ஆப்பிள் சீடர் வினிகரில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பொருள் உள்ளது. மேலும் இது சருமத்தில் ஏற்படும் பல நோய்த்தொற்றுகளில் இருந்து விடுவிக்கும். ஆகவே 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை 2 கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி உலர வைக்க வேண்டும். இதேப் போல் ஒரு நாளில் 2-3 முறை செய்தால், சீக்கிரம் இந்த அரிப்பு நீங்கும்.

ஆல்கஹால்

ஆல்கஹால் கூட நோய்த்தொற்றுக்களை அழித்து நல்ல நிவாரணம் தரும். அதற்கு 90 சதவீத ஐசோப்ரோபைல் ஆல்கஹாலை பஞ்சில் நனைத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி உலர்ந்ததும், பின் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு பல முறை செய்தால், நல்ல பலனை விரைவில் காணலாம்.

மௌத் வாஷ்

மௌத் வாஷ்ஷை பாதிக்கப்பட்ட இடத்தில் காட்டன் பயன்படுத்தி தேய்த்து, உலர விட வேண்டும். இம்முறையால் சற்று புண்படக்கூடும். இருப்பினும் இந்த வழியின் மூலம் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். ஆனால் அரிப்பு ஏற்பட்ட இடத்தில் காயங்கள் இருந்தால், இதனைப் பயன்படுத்த வேண்டாம்.

வெள்ளை வினிகர்

4 பகுதி நீரில் 1 பகுதி வெள்ளை வினிகரை சேர்த்து கலந்து, அந்நீரால் பாதிக்கப்பட்ட இடத்தைக் கழுவுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 1-2 முறை செய்தால் அவ்விடத்தில் ஏற்படும் அரிப்புக்களைத் தடுக்கலாம். இல்லையெனில் வெள்ளை வினிகர் மற்றும் தேங்காய் எண்ணெயை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி சில மணிநேரங்கள் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இம்முறையை ஒரு நாளைக்கு 2 முறை மேற்கொள்வது நல்லது.

பேக்கிங் சோடா

குளிக்கும் பாத்-டப்பில் சிறிது பேக்கிங் சோடா சேர்த்து, நீரை நிரப்பி, அந்நீரில் 15 நிமிடம் அமரவும். இந்த முறையை தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் மேற்கொள்ளலாம்.

வெங்காயம்

வெங்காயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இப்படி ஒரு நாளைக்கு 1-2 முறை செய்வது நல்ல பலனைத் தரும்.

உப்பு

அகலமான வாளி அல்லது பாத் டப்பில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, கல் உப்பை சேர்த்து கலந்து, அந்நீரில் 20-30 நிமிடம் அமர வேண்டும். இப்படி தினமும் இரண்டு முறை செய்தால், பூஞ்சை தொற்று நீங்கி, அரிப்புக்கள் விலகும்.

பூண்டு

பூண்டைத் தட்டி பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்த்து, சில நிமிடங்கள் ஊற வைலத்து, பின் கழுவ வேண்டும். ஒருவேளை இம்முறையால் அரிப்பு அடங்காமல் இருந்தால், ஆலிவ் எண்ணெயில் பூண்டை தட்டிப் போட்டு வறுத்து இறக்கி, குளிர வைத்து, பின் அந்த எண்ணெயை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு அடிக்கடி செய்தால், அரிப்பு விரைவில் நீங்கும்.

தேன்

சுத்தமான தேனில் சிறிது பூண்டை பேஸ்ட் செய்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி சில நிமிடங்கள் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை செய்து வர, நல்ல பலன் கிடைக்கும்.

பிறப்புறுப்பு சுத்தம

் பிறப்புறுப்பைச் சுற்றி பூஞ்சை தொற்றுக்கள் ஏற்படாமல் இருக்க, முதலில் பிறப்புறுப்பு பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஆன்டி-பாக்டீரியல் சோப்பு பயன்படுத்தி அப்பகுதியை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.

பவுடர்

அரிப்பு அதிகம் உள்ள இடத்தில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆன்டி-பாக்டிரியல் பவுடரைப் பயன்படுத்துவது நல்லது. இதனால் அப்பகுதியில் அதிகம் வியர்க்காமல், நோய்த்தொற்றுக்களின் வளர்ச்சியைத் தடுக்கலாம்.

உள்ளாடையை மாற்றவும்

உங்களுக்கு பிறப்புறுப்பைச் சுற்றி அதிகம் அரிப்பு ஏற்படுமாயின், ஒரு நாளைக்கு 2-3 முறை உள்ளாடையை மாற்ற வேண்டும். அதிலும் பயன்படுத்தும் உள்ளாடை நைலான் அல்லது சிந்தடிக்காக இல்லாமல், காட்டனாக இருக்க வேண்டியது அவசியம்.

துணிகளை பகிர வேண்டாம்

பிறப்புறுப்பைச் சுற்றி ஏற்படும் அரிப்புக்கள் பூஞ்சைத் தொற்றுக்களால் வந்தவை. இவை பரவக்கூடியவை என்பதால், நீங்கள் பயன்படுத்தும் எந்த ஒரு துணியையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

ப்ளீச்சிங் பவுடர்

தினமும் உள்ளாடையை ப்ளீச்சிங் பவுடர் கலந்த நீரில் ஒருமுறை அலசி காய போடுங்கள். இதனால் உள்ளாடையில் உள்ள கிருமிகள் அழிக்கப்பட்டு, தொற்றுக்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

04 1454568553 11 underwear

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button