ஆரோக்கிய உணவு

பன்னீர் பற்றி கவனத்தில் வைக்க வேண்டியவை

100 கி பன்னீரில் கலோரி – 72, புரதம் – 13 கி, கொழுப்பு – 14, மற்றும் வைட்டமின் தாது உப்புகள் சத்து கொண்டது. பன்னீரினைகடையில் வாங்குவதினை விட வீட்டில் தயாரிப்பது நல்லது.

2 லிட்டர் பாலினை நன்கு காய்ச்சி அது கொதிக்கும் பொழுது 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு ஊற்றினால் பால் நன்கு திரிந்து தண்ணீர் பிரியும். இதனை மென்மையான வடிகட்டியில் வடிகட்டி ஒரு மெல்லிய துணியில் சுற்றி பிழிந்து பின்னர் அதன் மேல் கனமான ஒரு பாத்திரத்தினை அழுத்தி வைக்க 20 நிமிடத்தில் பன்னீர் தயார்.

சுமார் 200 கி வரை இதில் பன்னீர் கிடைக்கும். இதனை ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி இதனை அதில் மூழ்கும் படி வைத்து ஸ்ப்ரிட்ஜில் வைத்து 2-3 நாட்கள் வரை உபயோகிக்கலாம். கடையில் வாங்குபவை மஞ்சள் ஆகி இருந்தாலோ, புளித்து இருந்தாலோ உபயோகிக்கக் கூடாது.

* இதனையே முழு உணவாகக் கொண்டால் அதிக எடை கூடும்.

* அதிக கலோரி சத்து கொண்டது. எனவே இருதய நோயாளி, சர்க்கரை நோயாளி, ரத்தக் கொதிப்புடையோர் இதனை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும்.

* அதிகமாக எடுத்துக் கொண்டால் ஜீரண கோளாறுகள் ஏற்படலாம்.

பொதுவில் 50 கி அளவு பன்னீர் வளரும் பருவத்தினருக்கும் உடல் நல பாதிப்பு உடையோருக்கு 10-15 கி அளவு பன்னீரும் பரிந்துரைக்கப்படுகின்றது. பன்னீர் உணவுக்கு அதிக சுவை ஊட்டுவதால் பல வகையான உணவு முறைகளில் பன்னீர் சேர்க்கப்படுகின்றது. இருப்பினும் பன்னீரினை சாலட், பொரியல் இவற்றின் மீது துருவி சாப்பிடுவதே எளிதான முறை நல்லதும் கூட.
6084cb68 8df2 4f37 8e34 b62fac5ba2aa S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button