28.3 C
Chennai
Saturday, May 18, 2024
1454912931 1021
எடை குறைய

உடல் பருமனைக் குறைத்திட சில எளிய வழிகள்

1. இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு கரண்டி சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால், ஜின்ஜிபெரின் மற்றும் தேன் ஆகியவை செரிமானத்தைத் தூண்டுவதுடன் தேவையற்ற கொழுப்பையும் எரிக்கும்.

2. கீழாநெல்லி, வெந்தயம், மஞ்சள், கறிவேப்பிலை, நெல்லிக்காய் சம அளவு எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் நீரில் கலந்து உண்ண, உடலின் கொழுப்பு குறைந்து, எடையும் சீராகும்.

1454912931 1021

3. சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மூக்கிரட்டை, சீரகம், திப்பிலி, மிளகு, ஓரெடை எடுத்துப்
பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தேனில் உண்ண உடல் எடை குறையும்.

4. பெருஞ்சீரகத்தைப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அருந்த, உடல் எடை குறையும்.

5. எலுமிச்சைச் சாறு ஒரு கரண்டி சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கலந்து பருக வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி ரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் கொழுப்பைக் குறைத்து உடலின் எடையையும் குறைக்கிறது.

6. நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஒட்டுதல், யோகா, தியானம், முதலியவற்றை மேற்கொண்டால் உடல்பருமன் நிச்சயம் குறையும். தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

7. சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்:

தக்காளி, கோஸ், பப்பாளி, வெள்ளரி, தர்பூசணி, புரூகோலி, ஆப்பிள், ஓட்ஸ், வால்நட், பாதாம், பருப்பு வகைகள், மோர்.

8. நீக்க வேண்டிய உணவுப் பொருட்கள்:

இனிப்புகள், வெள்ளை ரொட்டி, பட்டை தீட்டப்பட்ட தானியங்கள், துரித வகை உணவுகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு மிகுந்த உணவு வகைகள்.

Related posts

தெரிஞ்சிக்கங்க… உடல் எடையை குறைக்க உதவும் மாதுளைப்பழம்!

nathan

கொழுப்பைக் கரைக்கும் கொடம்புளி

nathan

மாதம் ஒரு கிலோ எடை குறைக்கலாம் ஈஸியா! ~ பெட்டகம்

nathan

கிரீன் டீ குடித்தால் தேவையற்ற கொழுப்பை கரைத்திடலாம்

nathan

எப்படி 500 கலோரிகளை ஒரு நாளில் எரிக்க முடியும்

nathan

மாதம் ஒரு கிலோ எடையை குறைக்கலாம்

nathan

தினமும்‬ இதை 1 டீஸ்பூன் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்…!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

ஒரே மாதத்தில் உடல் எடை குறைய வேண்டுமா? அப்ப உடனே இத படிங்க…

nathan

2 மாதங்களில் 26 கிலோ எடையைக் குறைக்க உதவும் க்ரீன் காபி கேப்ஸ்யூல் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

nathan