oth

பாலுறவுத் திறத்தினை மேம்படுத்தும் வயாகரா: வெங்காயம்

தேனீ கொட்டிவிட்டால் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்துக் கொள்ளுங்கள் என்பார்கள்.

வெங்காயத்தில் உள்ள ஒரு என்சைம் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண் டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.

வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்று சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பில்லாமல் ஓடவைக்க உதவி செய்கிறது.

உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பில்லாமல் ஓடவைக்க உதவி செய்கிறது.

பைப்ரினோலிசின் என்ற பொருளை சுரந்து கொழுப்பு உணவுகள் மூலமாக ரத்த நாளங்களுக்குள் நுழைந்த கொழுப்புகளைக் கரைத்துவிடுகிறது.

பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்காமல் அடக்கிவைப்பார்கள். இவ்வாறு அடக்கிவைப்பதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, எல்லாவற்றையும் வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.

முதுமையில் வரும் மூட்டழற்சியை வெங்காயம் கட்டுப்படுத்தி விடுகிறது. வெங்காயத்தையும், கடுகு எண்ணெயை யும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் வலி குறைந்துவிடும்.

உங்களுக்கு செலனியச் சத்து குறைவாக இருக்கும். இச்சத்து குறைவாக இருப்பவர்களுக் குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினைகள் தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயம், பூண்டு போன்ற காய்கறிகளைச் சாப்பிட்டால் செலனியம் சத்து கிடைக்கும். மன நிலையில் சமநிலை உண்டாகும்.

சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி சளிப்பிடிக்கும். இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் இருக்கும். இதைத் தவிர்க்க சுலபமான வழி, வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிடுவது தான். உடல் எடை அதிகமாக இருந்தாலும்கூட அதை வெங்காயம் குறைத்து விடும்.

புற்றுநோயைத் தடுக்கும் அற்புத மருந்துப்பொருள் வெங்காயம். புகைத்தல், காற்று மாசு, மன இறுக்கம் போன்றவைகளால் ஏற்படும் செல் இறப்புகளை, செல் சிதைவுகளை இது சீர்படுத்திவிடுகிறது. மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றையும் நீக்குகிறது.

முகச்சுருக்கம், சருமம் தொங்குதல் போன்றவற்றை வெங்காயத்திலுள்ள புரோட்டீன்கள் தவிர்க்கின்றன.

1454910496 8274

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button