ஆண்களுக்கு

ஆண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய அழகு பராமரிப்பு குறித்த உண்மைகள்!!!

அழகு பராமரிப்பு குறித்து பல்வேறு தவறான கருத்துக்கள் மக்களிடையே உள்ளது. மேலும் இன்றைய காலத்தில் அக அழகை விட, புற அழகைத் தான் பலரும் பார்க்கிறார்கள். அத்தகைய புற அழகிற்கு கேடு விளைவிக்கும் சில செயல்களை பலரும் தெரியாமல் பின்பற்றி வருகின்றனர். குறிப்பாக ஆண்கள் அரைகுறையாக கேட்டுக் கொண்டு அவற்றைப் பின்பற்றி தங்களின் அழகை கெடுத்துக் கொண்டு வருகின்றனர்.

எனவே தமிழ் போல்ட் ஸ்கை ஆண்கள் அழகைப் பராமரிக்கும் முன் தெரிந்து கொண்ண வேண்டிய சில உண்மைகளை பட்டியலிட்டுள்ளது. அதை ஒவ்வொரு ஆணும் படித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இதனால் தங்களின் அழகை எளிதில் மேம்படுத்தலாம். சரி, இப்போது அழகு பராமரிப்பு குறித்த உண்மைகளைப் பார்ப்போமா!!!

ஷேவிங் பிறகு குளிப்பது நல்ல தோற்றத்தைத் தரும்

ஷேவிங் செய்த பின்னர் வெதுவெதுப்பான நீரில் குளிப்பதால், ஷேவிங் செய்த இடம் மென்மையாகி, எரிச்சல், அரிப்பு, சருமம் சிவத்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும். அதுமட்டுமின்றி, சருமத் துளைகள் திறக்கப்பட்டு, அழுக்குகள் முற்றிலும் வெளியேறி, சருமம் பொலிவோடும் காணப்படும். மேலும் குளித்து முடித்த பின் ஐஸ் கட்டியால் முகத்தை மசாஜ் செய்தால், முகம் இன்னும் பிரகாசமாக இருக்கும்.

சோர்வடைந்த கண்களுக்கு டீ பை

ப்ளாக், க்ரீன் மற்றும் சீமைச் சாமந்தி போன்றவற்றில் டீ பைகள் வீங்கிய, சோர்வடைந்த மற்றும் கருவளையங்களுக்கு நல்ல தீர்வைத் தரும். ஏனெனில் இவற்றில் உள்ள பண்புகள், இரத்த நாளங்களை சுருக்கி, கண்களைச் சுற்றியுள்ள சருமம் தளர்வதைத் தடுக்கும். அதற்கு டீ பேக்கை சுடுநீரில் போட்டு ஊற வைத்து, பின் அந்த டீ பேக்கை குளிர வைத்து, கண்களின் மேல் 10-15 நிமிடம் வைத்து எடுத்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் நல்ல தீர்வைத் தரும்.

டூத் பேஸ்ட் பருக்களைப் போக்காது

ஆம், உண்மையிலேயே டூத் பேஸ்ட் பருக்களை மறைய செய்யாது. மாறாக, அதில் உள்ள கெமிக்கல் பொருள், பருக்களில் அரிப்புக்கள் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தி, நிலைமையை மோசமடையச் செய்யும். எனவே முகத்தில் பருக்கள் அதிகம் இருந்தால் மருத்துவரை அணுகி, சரியான மருந்துகளைப் பயன்படுத்துங்கள்.

அனைத்து காலங்களிலும் சன் ஸ்க்ரீன் அவசியம்

சன் ஸ்க்ரீன் லோசன் வெயில் காலத்தில் மட்டுமின்றி, அனைத்து காலங்களிலும் வெளியே செல்லும் முன் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், நீங்கள் உங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கிறீர்கள் என்று அர்த்தம். என்ன தான் சூரியன் மேகங்களால் மறைக்கப்பட்டால், அதன் கதிர்கள் சருமத்தை பாதிக்கும் எனவே குறைந்தது SPF 30 அல்லது அதற்கு மேற்பட்ட சன் ஸ்க்ரீன் லோசனை தினமும் இரண்டு முறை பயன்படுத்த வேண்டியது அவசியம்.

முடி வெடிப்புக்களை சரிசெய்ய முடியாது

ஆம், இது உண்மையே. முடி வெடிப்புக்கள் இருந்தால், அவற்றை வெட்டி நீக்குவதை விட சிறந்த வழி வேறு எதுவும் இல்லை. எனவே மாதம் ஒருமுறையாவது முடியின் முனைகளை தவறாமல் வெட்டி நீக்கிவிட வேண்டும். இதனால் முடியின் வளர்ச்சியும் ஆரோக்கியமாக இருக்கும்.

எண்ணெய் பசை சருமத்தினரும் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும்

எண்ணெய் பசை சருமத்தினர், தங்களின் சருமம் ஏற்கனவே எண்ணெய் பசையுடன் இருப்பதால், அவற்றை பயன்படுத்துவதைத் தவிர்ப்பார்கள். ஆனால் அது தவறு. என்ன தான் எண்ணெய் பசை சருமத்தினராக இருந்தாலும், கை கால்களுக்கு மட்டுமின்றி, முகத்திற்கும் மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும். இதனால் எண்ணெய் பசை சருமத்தினரின் சருமத்தில் சீரான அளவில் எண்ணெய் பசையை பராமரிக்கலாம்.

முகத்தை சோப்பு கொண்டு கழுவுவது நல்லதல்ல

முகத்திற்கு சோப்பை அதிகம் பயன்படுத்தினால், அதனால் முகத்தில் வறட்சி அதிகரித்து, வெடிப்புக்கள் மற்றும் எரிச்சல்களைத் தான் சந்திக்க நேரிடும் எனவே குளிக்கும் போது தவிர மற்ற நேரங்களில் முகத்தைக் கழுவ ஃபேஸ் வாஷ் பயன்படுத்த வேண்டும். அதுவே முகச் சருமத்திற்கு நல்லது.
13 1436766981 6 bbcream

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button