மருத்துவ குறிப்பு

ஆண்மைக் குறைவு பிரச்சனைக்கு தீர்வு தரும் ஆயுர்வேத மருத்துவம்

இன்றைய சூழ்நிலையில் வாழும் முறை, தவறான உணவுப் பழக்கம், படபடப்பு, பயம், மனஅழற்சி, கிலேசங்கள் ஆகியவை ஆண்மைக் குறைவுக்குக் காரணமாகின்றன. ஆண் உறுப்பில் உள்ள ரத்த நாளங்களில் ரத்தம் நன்றாக ஓட வேண்டும். இவ்வாறு ஓடும்போது அங்கு இருக்கும் தசைகள் இறுகி, ஆண் உறுப்பில் அழுத்தம் அதிகமாகி விறைப்புத்தன்மையை ஏற்படுத்தும்.

விந்து வெளியேறும் உச்ச நிலையை அடைந்த பிறகு, விறைப்புத் தன்மை ஏற்படாது. 20 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் ஏற்படலாம். மனைவியிடம் கோபம் இருந்தாலோ, மனப்பதற்றம் இருந்தாலோ, சோக நிலையில் இருந்தாலோ, கர்ப்பம் ஏற்பட்டுவிடும் என்ற பயம் இருந்தாலோ, குற்ற உணர்வு இருந்தாலோ, அறியாமை இருந்தாலோ தாம்பத்திய உறவு பாதிக்கப்படலாம்.

ஆயுர்வேதத்தின் எட்டு அங்கங்களில் ஓர் அங்கம் வாஜீகரணம் எனப்படும். வாத்ஸ்யாயனரின் காம சூத்ரம், திருக்குறளின் காமத்துப்பால் ஆகியவற்றை எல்லாம் பார்க்கும்போது, மலட்டுத்தன்மை சார்ந்த சிகிச்சையைக் கூச்சப்படாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். அதேநேரம் இந்த சிகிச்சை சார்ந்து முறையற்ற ஆலோசனைகள், போலி விளம்பரங்களைக் கண்டு ஏமாற வேண்டாம். அனுபவமுள்ள, அறிவியல்பூர்வமான ஆயுர்வேத மருத்துவர், சித்த மருத்துவர், நவீன மருத்துவரையே அணுக வேண்டும்.

எளிய மருத்துவம்

* அமுக்குரா கிழங்கு சூரணம் 10 கிராம் பாலில் கலந்து காலை, மாலை சாப்பிட வேண்டும்.

* அமுக்குரா கிழங்கு, நிலப்பனை கிழங்கு, சதாவரி, சாலாப்மிசிரி, முருங்கை விதை, பூனைக்காலி விதை, தாமரை விதை, அதிமதுரம், நெல்லி வற்றல், முருங்கைப் பிசின், நீர்முள்ளி விதை, மதனகாமப்பூ, திராட்சை, எள், தேற்றான்கொட்டை, அத்திப் பழம், பூமி சர்க்கரை கிழங்கு, பருத்திக் கொட்டை, பிஸ்தா, அக்ரோட் பருப்பு, வெள்ளரி விதை, பாதாம் பருப்பு, சாரைப் பருப்பு, பூசணி விதை, பசும் பால் போன்றவை ஆண்மையை அதிகரிக்கும்.

* ஜாதிக்காய் மனஅழுத்தத்தைப் போக்கும், பாலுணர்வைத் தூண்டும். ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ சாப்பிடலாம். இதை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து, இடித்து பொடியாக்கி காலை, மாலை பசும்பாலில் 4 கிராம் சூரணத்தை காய்ச்சிக் குடிக்கலாம். இது நரம்புத் தளர்ச்சியை போக்கும்.

* மாதுளம் பூவைப் பசும் பாலில் வேகவைத்து, சிறிது தேன் கலந்து அருந்தினால் சுக்ர பலம் பெறும்.

* முருங்கைப் பூவின் பொடியை தேனில் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வரலாம்.

* வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும்பால் சாப்பிடலாம்.

* அத்திப்பழம் தினமும் சாப்பிட்டுவரலாம்.

* கருஞ்சீரக எண்ணெயை ஆணுறுப்பில் தடவி வந்தால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

* ஓரிதழ் தாமரையை பொடி செய்து, சம அளவு சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டுவர, நல்ல பலன் கிடைக்கும்.

5de77e62 96e7 40dd 8bd6 9695c8ec0ad9 S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button