சைவம்

வெண்டைக்காய் சாதம்

தேவையானவை :

வெண்டைக்காய் – 10
வேக வைத்த சாதம் – 1 கப்
கெட்டியான புளிக்கரைசல் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
வர மிளகாய் – 4
கடலைப்பருப்பு – 1/4 தேக்கரண்டி
பட்டை – 2
கடுகு – 1 தேக்கரண்டி
கருவேப்பிலை – 10
எண்ணெய் – 1 தேக்கரண்டி
உப்பு – சுவைகேற்ப

செய்முறை :

• வெண்டைக்காயை நடுவில் கோடு போடவும். முக்கியமாக அது உடையவும் கூடாது, இரண்டாக பிளவுபடவும் கூடாது.

• ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அந்த வெண்டைகாயை அதில் போட்டு வதக்கவும். அடிப்பிடிக்க கூடாது.

• வெண்டைக்காய் சற்று மிதமானதாக ஆனதும் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், புளிக்கரைசல் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறவும். பிறகு நன்கு வெந்ததும் தனியாக எடுத்துவைக்கவும் .

• ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, வர மிளகாய், பட்டை, கடலைப்பருப்பு, மஞ்சள் தூள், கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து அதில் வதக்கிய வெண்டைக்காய், சாதம் சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை மிதமான தீயில் வைத்து குறைத்து 4-5 நிமிடம் வைத்து அடுப்பை அணைத்து விடவும்

• சுவையான வெண்டைக்காய் சாதம் தயார் .

42e8cd80 c249 4ad0 91b7 f8f345db771e S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button