25.3 C
Chennai
Friday, Dec 27, 2024
andhra pepper chicken
அசைவ வகைகள்சமையல் குறிப்புகள்

சுவையான ஆந்திரா ஸ்டைல் பெப்பர் சிக்கன்

தேவையான பொருட்கள்:

* சிக்கன் – 500 கிராம் (சிறு துண்டுகளாக வெட்டியது)

* பூண்டு – 10 பற்கள்

* இஞ்சி – 2 இன்ச்

* எலுமிச்சை – 1 (சாறு எடுத்துக் கொள்ளவும்)

* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

* உப்பு – 1/2 டீஸ்பூன்

பெப்பர் சிக்கன் மசாலாவிற்கு…

* வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

* பூண்டு – 4 பற்கள் (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி – 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது)

* உப்பு – சுவைக்கேற்ப

* கறிவேப்பிலை – சிறிது

* மிளகு – 2 1/2 டேபிள் ஸ்பூன் (பொடித்து கொள்ளவும்)

* மல்லித் தூள் – 2 டீஸ்பூன்

* எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

அலங்கரிப்பதற்கு…

* கொத்தமல்லி – சிறிது

* மிளகு – 1 டீஸ்பூன் (பொடித்துக் கொள்ளவும்)

* எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

andhra pepper chicken

செய்முறை:

* முதலில் சிக்கனை நன்கு கழுவி ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் இஞ்சி மற்றும் பூண்டு பற்களை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அரைத்த இஞ்சி பூண்டு விழுதை சிக்கனுடன் சேர்த்து, அதோடு மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி மூடி வைத்து, ஃப்ரிட்ஜில் 30 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும்.

* பிறகு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து, வெங்காயம் நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கவும். அப்போது கறிவேப்பிலையையும் போட்டு வதக்க வேண்டும்.

* வெங்காயம் பொன்னிறமானதும், ஊற வைத்துள்ள சிக்கனைப் போட்டு 2 நிமிடம் வதக்கவும். பின் அதில் மல்லித் தூள், பொடித்த மிளகு சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி குறைவான தீயில் நன்கு கிளறி விட வேண்டும். பின் சிக்கன் அடிப்பிடிக்காமல் இருக்க சிறிது நீரை ஊற்றி, மூடி வைத்து சிக்கனை வேக வையுங்கள்.

* சிக்கன் நன்கு வெந்ததும், மூடியைத் திறந்து, அதில் நீர் இருந்தால் அதை வற்ற வைத்து இறக்குங்கள்.

* பின் அதன் மேல் பொடித்த மிளகு, ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லியைத் தூவி பிரட்டினால், சுவையான மற்றும் காரசாரமான ஆந்திரா பெப்பர் சிக்கன் தயார்.

Related posts

இறால் பெப்பர் ப்ரை

nathan

ஆட்டு ஈரல் பிரட்டல் செய்ய

nathan

சுவையான முட்டை பட்டர் மசாலா

nathan

மட்டன் வெங்காய மசாலா

nathan

சுவையான பனீர் டிக்கா! தயார் செய்வது எப்படி?

nathan

கேரளா ஸ்டைல் மத்தி மீன் குழம்பு

nathan

ஆரோக்கிய கொழுப்பு நிறைந்த கெளுத்தி மீன்

nathan

காரைக்குடி கோழி குழம்பு

nathan

சுவையான உடைத்த முட்டைக் குழம்பு

nathan