பொதுவானகைவினை

பீட்ஸ் வேலைப்பாடு

நீங்கதான் முதலாளியம்மா ஜெயராணி அருளானந்தம்

சாதாரண டீ கோஸ்டரில் தொடங்கி, பிரமாண்ட டைனிங் டேபிள் மேட் வரை…இன்னும் வீட்டை அலங்கரிக்கிற குட்டிக்குட்டி நாற்காலிகள், கிடார், நாய், பூனை பொம்மைகள் வரை… சென்னையைச் சேர்ந்த ஜெயராணி அருளானந்தத்தின் வீட்டில் இப்படி அழகுக்கு அழகு சேர்க்க ஏராளமான பொருட்கள்!அத்தனையும் வெறும் மணிகளால் செய்யப்பட்டவை என அதிர்ச்சி தருகிறார் ஜெயராணி. கைவினைக் கலைஞரான இவர், மணிகளால் செய்யப்படுகிற அலங்காரப் பொருட்களை வைத்து பகுதிநேர பிசினஸ் செய்ய பெண்களுக்கு வழிகாட்டுகிறார்.

மணிகளை வச்சுக் கைவினைக்கலைப் பொருட்கள் செய்யறது புதுசில்லைதான். பல வருஷங்களா பண்ணிட்டிருக்கிற கலைதான்னாலும், இப்போதைய ட்ரெண்டுக்கு ஏத்தபடி புதுமையான கற்பனைகளோட செய்யும் போது வரவேற்பு அதிகமிருக்கு. இப்ப மணிகள்ல நிறைய வெரைட்டி வந்திருக்கு. விலை கம்மியானதுலேருந்து காஸ்ட்லியான கிரிஸ்டல் மணிகள் வரைக்கும் ஏராளமா கிடைக்குது. அதை வச்சு, விதம் விதமான கலைப் பொருட்கள் உருவாக்கலாம். இந்தக் கலைக்குத் தேவை விதம் விதமான மணிகள், அதைக் கோர்க்க நரம்புனு சொல்லக் கூடிய ஒயர் அவ்வளவுதான்.

குறைஞ்ச பட்சம் 500 ரூபாய் முதலீடு இருந்தா போதும். டீ கோஸ்டர், லேப்டாப் வைக்கிற மேட், டைனிங் டேபிள் மேட், பட்டாம்பூச்சி, கிடார், நாய், மனித உருவங்கள், தோரணம், தேர்னு என்ன வேணாலும் பண்ணலாம். ஒருநாளைக்கு 5 அயிட்டங்கள் பண்ணிடலாம். அன்பளிப்பா கொடுக்கவும் அலங்காரப் பொருளா வைக்கவும் சரியான சாய்ஸ்… 100 ரூபாய்லேருந்து விற்கலாம். 50 சதவிகித லாபம் நிச்சயம்” என்கிற ஜெயராணியிடம் ஒரே நாள் பயிற்சியில் 5 வகையான பீட்ஸ் வேலைப்பாடுகளை கற்றுக் கொள்ள தேவையான பொருட்களுடன் கட்டணம் 750 ரூபாய்.

ld4010

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button