முகப் பராமரிப்பு

முகம் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டுமா?

ஒரு சிலருக்கு வெளியே சென்று வந்த பின்பு ஆயில் ஃபேக்டிரியே வைக்கிற அளவுக்கு எப்பவும் முகத்தில் எண்ணெய் வழிந்து கொண்டே இருக்கும். அவர்கள் நேரம் கிடைக்கிறபோதெல்லாம்” ஃபேஸ்வாஷா”ல முகத்துல நுரை வர்ற அளவுக்கு தேய்ச்சுட்டு, பிறகு ஒரு டீஸ்பூன் சர்க்கரையை எடுத்து முகத்துல மெதுவாக மசாஜ் பண்ணணும். இதனால வொயிட் ஹெட்ஸ், பிளாக் ஹெட்ஸ் எல்லாம் போறதோட முகத்துல இருக்குறது வாரங்கள்ல அடைச்சிருக்கிற அழுக்கும் வெளியேறி விடும். முகமும் பார்க்கப்படுஃப்ரெஷ்லுக் கொடுக்கும்.

இதே சிகிச்சையை கழுத்துக்கும் செய்யணும். அப்போதான் முகமும் கழுத்தும் ஒரே நிறத்துல இருக்கும். குளிக்கிறதுக்கு எப்பவுமே மைல்டான பேபி சோப்தான் பயன்படுத்தணும். எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கிற அன்று மட்டும் உடம்புக்கு சோப் பயன்படுத்தாம, கடலை மாவுல கஸ்தூரி மஞ்சள் கலந்து குளிக்கலாம். தலை முடியைப் பராமரிக்கிறதுக்கு சோம்பல் படவே கூடாது .மாசம் ஒரு தடவை ஹென்னா போடணும்.

ஹென்னா எப்படி தயாரிப்பது?

முந்தின நாளே நெல்லிக்காய் பொடி, மருதாணி, டீடிக்காஷன் எல்லாத்தையும் தண்ணீர் சேர்த்துக் கலந்து இரும்பு கடாயில நல்லா ஊற வச்சிடணும். மறுநாள் இந்தக் கலவையோடு முட்டையோட வெள்ளைக்கரு, தயிர் கலந்து தலையில தேய்ச்சு ரெண்டு மணி நேரமாவது ஊற வெச்சுக்குளிக்கணும்.

தயிர் கலந்து ஹென்னா போடறதால, பொடுகு தொல்லை ஒழியறதோட, தனியா கண்டிஷனர் போட வேண்டிய அவசியமும் இருக்காது. ஹென்னா போடுற அன்று மட்டும் முடிக்கு ஷாம்பூ பயன்படுத்தாம, தண்ணியால தான் அலசணும். அப்போதான் அதோட சாரம் தலையில….. தங்கும். அழகுல உதட்டுக்கும் முக்கிய பங்கு இருக்கு. இப்படி நம்மள நாமே அழகு படுத்திக் கொண்டால் எப்பவுமே நாம அழகு தான்.

boi

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button